https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, August 18, 2022

கிறிஸ்தவரும் கம்யூனிசமும்

 

                            கிறிஸ்தவரும் கம்யூனிசமும்

Communism and Social Revolution in India  என்ற புத்தகம் கிறிஸ்தவ புரிதலில்  தேவையில் எழுதப்பட்ட ஒன்று. பி டி தேவானந்தன் மற்றும் எம் எம் தாமஸ் எடிட் செய்த புத்தகம். 1953ல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கத்தா YMCA  வெளியிட்ட ஆக்கம்.



அளவில் சிறிய 100 பக்க புத்தகமானாலும் அடர்த்தியாக தன் வாதங்களை வைத்த புத்தகம். முதல்பகுதியில் கம்யூனிசம் என்றால் என்ன, அதன் இயல்பு எவை, மதம் - நெறி குறித்த அதன் பார்வை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு (சிறிய அளவில்) பேசப்படுகிறது. இரண்டாம் பகுதி சமுதாய புரட்சியை கம்யூனிஸ்ட்கள் செய்தார்களா என விசாரிக்கும் பகுதி, உண்மையான சமூக ஜனநாயகம் என்ன என்றும் இப்பகுதி பேசும். மூன்றாம் பகுதி கம்யூனிச நாடுகளில் சர்ச், கம்யூனிச சவாலுக்கு சர்ச் தந்த பதில்கள் என்பனவும். கிறிஸ்தவரும் கம்யூனிஸ்ட்களும் என்ற பகுதியும் இருக்கின்றன. இங்கு  The Christian and the Communist  என்ற பகுதியில் இந்த புத்தகம் என்ன விவாதத்தை முன்வைத்துள்ளது என்பதை மட்டும் சுருக்கமாக தந்துள்ளேன்.

கிறிஸ்தவர் கம்யூனிஸ்ட்டாகலாமா- இரண்டும் ஒத்துப்போகுமா- மதமும் அரசியலும் தனி கம்பார்ட்மெண்டா- கிறிஸ்தவ நம்பிக்கைகள் அரசியல் பொருளாதாரத்திற்கு வேண்டாமா- கம்யூனிஸ்ட்களுடன் ஒத்துழைப்பு என்பது சாத்தியமா- அவர்களுடன் உரையாட வேண்டாமா என்ற கேள்விகளுக்கான கிறிஸ்தவ அறிஞர்களின் பதிலாக இந்த கட்டுரையை வாசித்துப் பார்க்கலாம். இனி அக்கட்டுரையிலிருந்து சில அம்சங்கள்…

கம்யூனிசம் வர்க்கமில்லா சமுதாயத்தை படைப்பதை தன் உயர் லட்சியமாக கொண்டுள்ளது. அங்கு மனிதர்கள் வர்க்கமாக  bulk ஆகவே பார்க்கப்படுவர். தனிமனிதன் என்கிற பெறுமானம் பொதுவாக அங்கிருப்பதில்லை.  Infact its view of morality and its atheism are based on this conception of the mass man.

 சுரண்டுகிற பூர்ஷ்வா கூட்டத்தை ஒழித்து அப்புறப்படுத்தி தனி உடைமை இல்லாது செய்வதன் மூலம் அவர்கள் வர்க்கவேறுபாடுகள் இல்லா புதிய சமூகம் அமைப்பதை பேசுவர். அதாவது இது நடந்துவிட்டால் இந்த பூமிதனில் மானுட சொர்க்கம் வந்துவிடும். இலட்சிய சமுதாயம் படைக்கப்பட்டுவிடும்.

கிறிஸ்தவம் பாவிகளாகிய நம்மை மீட்கவேண்டும் என கருதுகிறது. அதிகாரம் ஆசை  பிற குற்ற செயல்கள் என அனைத்து பாவங்களிலிருந்தும் மனிதனை மீட்பதை அது பேசுகிறது. சரி இந்த பாவ புண்ணியமெல்லாம் மதம் சார்ந்து பேசலாம். அரசியல் கோட்பாடுகளுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

 கிறிஸ்தவத்தில்  ’sinner’  என்பது எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது

மனிதன் இயற்கையில் சுயநலக்காரன். தன் குழுவில் கூட அவன் இதைக் காட்டுவான். அடுத்து எப்போதும் தன் பாதுகாப்பை அவன் தேடிக்கொண்டேயிருப்பான். அதிகாரத்தின் வழியோ எதன் வழியோ சுயநலத்தை தேடுவான். இப்போது அதிகாரம் என்பது மிகப்பெரிய அரசியல் வகைப்பட்டதாக இருக்கிறதே.. அதாவது மனிதன்  self centred- pride   ஆக இருப்பவன். எனவே கிறிஸ்தவம் அவனை நல்வழிப்படுத்தப் பார்க்கிறது.  In Jesus we are finding hope, hope for ourselves as individuals and hope for humanity as a whole.

கம்யூனிஸ்ட்கள் கூட்டமாகத்தான் செயல்படவேண்டும் என்பதில் அழுத்தம் தருவார்கள்- அவர்களைப் பொருத்தவரை  man is a function of a collective class அதேபோல் அரசியல் என்பதும்  matter of historical necessity.

 ஆனால் கிறிஸ்தவம் காரணகாரிய அறிவு மற்றும் மனசாட்சியுடன் செயல்படும் உரிமையைப் பேசுகிறது. அதிகாரத்தின் ஊழல் தன்மையிலிருந்து தற்காப்பு, மேலும் மேலும் தேவைப்படும் சமூக நீதிக்காக நிற்பது. கிறிஸ்தவ நம்பிக்கையை அரசியல் மட்டத்திற்கு எடுத்துச் செல்லும்போது மேற்கண்ட புரிதல்கள் தேவை. இந்த நம்பிக்கைக்கு உகந்த அரசியல் முறையயே கிறிஸ்தவர்கள் தேடுகின்றனர்.

 கிறிஸ்தவர் ஒருநாளும் கம்யூனிஸ்ட் ஆக முடியாது ( under no circumstances a christian can be a communist.)  அதாவது கிறிஸ்தவராகவும் party member ஆகவும் ஒருசேர அவர் பயணிக்க இயலாது.

 கம்யூனிஸ்ட்கள் மார்க்சிடம் துவங்குவார்கள். சமூக புரட்சிக்கு மதம் தடையென அவர்கள் சொல்வார். அது பூர்ஷ்வாக்களின் தொண்டூழிய மடமாக அவர்களால் பார்க்கப்படும். ஆளும் சக்திகள் பக்கம் நின்று வர்க்கப்போராட்டம் எழாமல் மதம் பார்த்துக்கொள்கிறது என கம்யூனிஸ்ட்கள் நினைப்பர். அப்படி தடையாக இருப்பதை வைத்துக்கொண்டு வர்க்கபோராட்டத்தில் இறுதி வெற்றி பெற முடியாது. எனவே அதை ஒழிக்கவேண்டும் என அவர்கள் கருதுவர்.

 இப்படி பேசும் கம்யூனிசம் மதத்திற்கு பிரதியாக - substitute Religion என தன்னை வைத்துக்கொள்ளும். இதை மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் புகழ்பாடல்களில் நாம் அறியலாம். அவர்கள் எழுத்தின் உயர் அதிகாரத்துவம் பேசப்படும்-  as authoritative scriptures. மக்கள் ஜனநாயகம், இயக்கவியல் பொருள்முதல்வாதம்- தத்துவம் என்று கல்வி கலாச்சாரம் , கலை, விஞ்ஞானம் அனைத்திலும் அதைப் பேசுவர்.

மத பீட அதிகாரங்கள் போலவே அமைப்பு அதிகாரங்களை  authoritative group of leaders  பெற்று மற்றவர்களை கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பர். அதாவது கட்சி உறுப்பினர் எனில் அவர் விசேஷ அந்தஸ்தை பெறுவார். நமது சிந்தனை மற்றும் வாழ்விற்கும் அவர் விளக்கமளிப்பவராக இருப்பார். அவர் தன் கட்சிக்கு காட்டும் விசுவாசம் ஏறத்தாழ மத விசுவாசம் போலவே இருக்கும். கட்சி தானே தன்  self righteousness பற்றி உரிமை பாராட்டிக்கொள்ளும்.

அதாவது  The communist thinks of himself , atleast his party as the Judge of all other men..   சுய விமர்சனம் என்பது கூட பொதுவாக அங்கு   பிறர்மீதான விசுவாசம் குறித்த கண்டனங்களாகவே அமையும் (repudiation of all opinion at variance with the Party line, resulting in either self condemnation or accusation of others for party disloyalty.)

பல நேரங்களில் கிறிஸ்துவிடம் உன்னை ஒப்படைத்துக்கொள் என்பது போலவே  communism claims one's total allegiance.  எனவே இங்கு கிறிஸ்தவருக்கும் கம்யூனிஸ்ட்க்கும் விசுவாச முரண் ஏற்படும்.

கிறிஸ்தவர்களுக்கோ இப்படி சொல்லித்தரப்பட்டுள்ளது.  No man can serve two masters, for either he will hate the one or love the other..  இதை கிறிஸ்தவரால் எப்படி தீர்த்துக்கொள்ளமுடியும்.

கிறிஸ்தவத்தை குறுகலாக இப்படி வழிபாட்டுமுறை, சில உறவுகளென புரிந்துகொள்ளக்கூடாது. கிறிஸ்தவம் முழுமையாக அனைத்தையும் பார்க்கச் சொல்லும்.  Politics, Economic are also subject to His standards, His control, His judgment.   அதாவது அரசியல் பொருளாதார முறைகளையும் நாம் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் சீர்தூக்கி பார்த்தல் வேண்டும். அனைத்தும் கிறிஸ்தவ ராஜ்யத்தின் கீழ் என்ற ஏற்பு கிறிஸ்தவரிடம் இருக்கும். ஆனால் கம்யூனிசத்தில் இதை ஏற்கமாட்டார்கள். 

கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்சி கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக இருப்பதில் ஆட்சேபணையில்லை- பல நல்ல கிறிஸ்துவ தோழர்கள் கம்யூனிச கொள்கையுடன் ஒத்துப்போக முடியும் எனச் சொல்கின்றனர். அதாவது பைபிளை படிக்கலாம். பிற கிறிஸ்துவர்களுடன் சர்ச் செல்லலாம். ஆனால் அரசியல் என வந்து விட்டால் கட்சி நிலைப்பாடு என்கின்றனர். அவர்கள் மதம் என்பது தனிப்பட்டவரின் விவகாரம் எனச் சொல்கின்றனர். அது பொதுவாழ்க்கைக்கான உபதேசமல்ல என கருதுகின்றனர். அன்றாட வாழ்க்கை அல்லல்களுக்கு சமூக பிரச்னைகளுக்கு தீர்வு கம்யூனிசத்தில் எனவும் அவர்கள் வாதாடுகின்றனர். எனவே அவர்களைப் பொறுத்தவரை மதமும் அரசியலும் கலக்கக்கூடாதவை.

 கம்யூனிசம் அறிவியல் சார்ந்த ஒன்று. தனக்கான விதிகளைக் கொண்டது. அதை மதப் பார்வையில் பார்க்கக்கூடாது. மெலிந்தவர்கள் அறியாமையால் கொள்ளும் பாதுகாப்புணர்வுதான் மதம். அனைவருக்குமான பாதுகாப்பை உருவாக்கிவிட்டால் மதம் போகிவிடும் என்பதுதான் அவர்களின் புரிதல். மதம் அவசியமற்றது- பொருத்தமற்றது என்பர்.

 கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து பொதுவிவகாரம் என எதையும் செய்யவே முடியாதா என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். செய்யலாம். ஆனால் அனுபவம் அவர்கள் அனைத்தையுமே தங்கள் அரசியல்- தத்துவ இலாபங்கள் நோக்கியே நகர்த்துவர் எனக் காட்டுகிறது.  அதாவது The lone Christian who decides to travel only one humanitarian mile with the Communist may find himself continuing the journey to the second political mile and the third ideological mile.

 எனவே கம்யூனிஸ்ட் என ஒருவர் ஆகும்போது அவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாமல் போகும். கிறிஸ்துவர் தன் மத மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறித்து தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடன் உரையாடவேண்டியவராகவும் இருக்கிறார். மூன்று முனைகளில் நாம் அவரை சந்திக்க வேண்டியிருக்கும். அரசியலில் நாம் எதிர்க்கவேண்டியிருக்கலாம். மாற்றுகளை சொல்லவேண்டியிருக்கலாம். நமது பாவம்- மன்னிப்பு என்ற நம்பிக்கையுடன் உரையாடவேண்டியிருக்கும்.

 கம்யூனிஸ்ட்களுக்கும் அன்பு , நட்பு எனும் தாகம், சில நம்பிக்கைகள் கூட இருக்கும். அவரும் சக மனிதனே. எனவே அவருடன் உரையாடல் தவிர்க்க முடியாதது.

தன் தனிப்பட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தன் கட்சியால் அறிந்துகொள்ளமுடியாது என்பதும் அவர் உணர்ந்த ஒன்றே. கம்யூனிஸ்ட்கள் போலவே நாமும் பல நேரங்களில் நீதிமானாக நடந்துகொள்கிறோம். அவர் கம்யூனிஸ்ட் அரசியல் கொண்டவரா- பேசாதே தள்ளி நில் என கதவடைத்து மூடிவிடுகிறோம். சக மனிதன் என்ற வகையில் அவரும் நம் அன்புக்குரியவர்தான். சில நேரம் அவர்கள் கட்சியிலிருந்து வெளியே வரும்போது கூட சர்ச்சிடம், கிறிஸ்துவ சமூகத்திடம் வரமுடியாமல் போகிறார்கள் என்பதும் நம் அனுபவமாக இருக்கிறது. இங்கு சர்ச் சபை தனது கருத்தில் மாறவேண்டும்.

 முதலில் கிறிஸ்தவருக்கு வேண்டிய பண்பு நமக்கு மட்டும்தான் எல்லா விடைகளும் தெரியும் என்ற ஏமாற்று மனப்பாங்கை உதறுவதுதான். உண்மையைத் தேடும் வாழ்வில் பல கூட்டு முயற்சிகள் தேவைப்படலாம் என்கிற புரிதல் அவசியமாகிறது. அனைத்துக்கும் ஆன நீதிமான்கள் நாம்தான் என்ற சிந்தனை நிற்காது….

பின் குறிப்பு :

கிறிஸ்தவம் குறித்து சில மார்க்சியர்களும் எழுதியிருக்கிறார்கள். கடுமையாக விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள். காட்ஸ்கி பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கிறிஸ்தவம் புராதன பாட்டாளிகளிடமிருந்து எழுந்தாலும் அது சுரண்டலாளர்களுக்கானதாக வளர்ந்துள்ளது என காட்ஸ்கி எழுதியிருப்பார். எந்த மதமும் முரண் இல்லாமல் பல கட்ட சமூக செல்வாக்கிற்கு உட்படாமல் இருக்க முடியாது. இப்படி பெரும் முரணுக்கு உள்ளான வேறு மதம் இருக்குமா எனத் தெரியவில்லை என காட்ஸ்கி எழுதியிருப்பார்.

 பெல்போர்ட் பாக்ஸ் கத்தோலிக்க சர்ச்சிற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தை இனியும் அறிவிக்காமல் இருக்க முடியாதென்று எழுதினார். அதேபோல் சோசலிச இலக்கை கிறிஸ்துவ நம்பிக்கையுடன் அடையாளப்படுத்தி வாதாடுவதை அவர் விமர்சித்தார். சோசலிச இலக்கு என்றால் அது கிறிஸ்துவ எதிர்ப்பில்தான் என பெல்போர்ட் எழுதினார்.

கிராம்சி வாடிகன் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். உலகின் மிக அதிகாரமிக்க தனியார் அமைப்பு வாடிகன் என கிராம்சி எழுதினார். இத்தாலியை மய்யமாக கொண்டு இயங்கினாலும் உலக நாடுகளின் பெரும் அங்கீகாரத்தை அது தன்னகத்தே கொண்டுள்ளது.

  உலக பாட்டாளிகளின் பகையாகத்தான் வாடிகனை பார்க்கவேண்டும். இந்த போப் பிரச்னையிலிருந்து பாட்டாளிவர்க்கம் தன்னை போராடி விடுவித்துக்கொள்ளவேண்டும் என கிராம்சியின் அறிவுரை சென்றதைக் காண்கிறோம்.

எட்கர் ஹார்ட்காசில் சர்ச் எப்போதும்  தனியார் சொத்துரிமை ஒழிப்பை ஆதரிக்காது என எழுதினார். அவர்கள் பொதுத்துறையை எதிர்ப்பதில்லை என பேசுவதைக்கொண்டு சோசலிசத்திற்கு ஆதரவு என சொல்லமுடியாது என எழுதினார். முதலாளித்துவத்திற்கான முடிவு என்பது சர்ச்சின் முடிவாகவும் இருக்கும் என்றார்.

சர்ச் ஜனநாயகத்திற்கு விரோத அமைப்பாகவே இருக்கிறது. அது நம்பிக்கைகளை , வழிபாட்டை, பரலோக ராஜ்யத்தை சொல்லிக்கொண்டிருக்கலாம். அதன் இறையியல் பிடிவாதம் கொண்டதாக இருக்கிறது. போப்பின் அதிகாரத்தை ஏற்கச் சொல்கிறது. அவர் தவறே செய்யாதவர் என நம்பச் சொல்கிறது. நம்பிக்கைகளுக்கான ஆக உயர் இறுதி அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்து நிற்கிறது என டி பாரல் எழுதினார். இப்படி ஏராள மார்க்சியர் கிறிஸ்துவம் சமயம் என்ற வகையில்  முதலாளித்துவத்திற்கு- சுரண்டலுக்கு ஆதரவாகவே எழுதியுள்ளதை பார்க்கிறோம்…

குறிப்பு:

பால் டேவிட் தேவநந்தன் ( 1901-1962) இந்திய இறையியலாளர். சென்னையில் பிறந்து ஹைதராபாத் நிஜாம் கல்லூரி, பிரசிடென்சியில் கல்வி பயின்றவர். ஒய் எம் சி பொறுப்புகளை வகித்தவர். இலங்கை, அமெரிக்காவில் தங்கி கிறிஸ்துவ இலக்கியம் ஆய்வுகள் மேற்கொண்டவர். பெங்களூரில் மதம் சமூகம் பற்றிய கிறிஸ்துவ ஆய்வு மய்யம் அமைத்தவர். இந்துமதம், மாயை, கம்யூனிசம், ஜனநாயகம், பிராமணியத்திற்கு எதிராக திக என பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

எம் எம் தாமஸ் (1916-96) கேரளா சேர்ந்த இந்திய இறையியலாளர். நாகாலாந்தில் கவர்னராகவும் இருந்தவர். உலக சர்ச் கவுன்சில் கமிட்டியில் இருந்தவர். கிறிஸ்துவம் சார்ந்த புத்தகங்களை எழுதியவர்.

12-8-2022

No comments:

Post a Comment