இந்திய சமூகவியலாளர்கள் சாதி குறித்து...
இந்திய சோசலாஜிஸ்ட்கள் சாதியின் இன்றைய தன்மை குறித்த ஆய்வுகளை அவ்வப்போது தந்து வருகின்றனர். திபங்கர் குப்தாவைவை எடிட்டராகக் கொண்டு பலர் எழுதிய caste in Question: Identity or hierarchy என்ற வால்யூம் ஒன்றை 2004ல் sage நிறுவனம் கொண்டுவந்தது.
வட இந்தியாவில் யாதவர்கள் அரசியல் பற்றி லூசியாவும், ஜைனர்கள் மத்தியில் சாதி குறித்து ஜான் கார்ட், அரியானா சாதி பஞ்சாயத்துகள் பற்றி பிரேம் செளத்ரி, பீகாரின் கிராமங்களில் சாதி குறித்து கெளரங் சகாய், கர்நாடாகாவில் ’எஸ் சி’க்கள் பற்றி ஜி கே கரந்த், பஞ்சாப் தலித்கள் சீக்கியம் பற்றி சுரிந்தர் ஜோத்காவும், தலித் திரட்சி குறித்து பத்ரி நாராயண், அனுஜா அகர்வாலின் ராஜஸ்தானின் மார்ஜினல் கம்யூனிட்டிகள் என்கிற 8 ஆய்வுகள் இந்த வால்யூமில் இடம் பெற்றுள்ளன.
திபங்கரின் அறிமுகம் என்ற வகையில் தனது ஆய்வை தந்துள்ளார். அவரது ஆய்வில் காணப்படும் சில அம்சங்களை மட்டும் இங்கே தொட்டுக்காட்ட முயற்சித்துள்ளேன்.
சாதி இன்று எதார்த்த நிலைமைகளில் pure ritual hierchy என்பதாகவே தொழிற்படுகிறதா? அப்படி இல்லை என்ற பதிலை திபங்கர் தருகிறார். ஜாட், அகிர், தேவர், குர்மி போன்ற சாதிகளை எடுத்துக்கொண்டு அவை முன்னொரு கால ’சூத்திரர்’ என்ற நிலையில் இல்லை. பல இடங்களில் பிராம்மண, ஷத்திரிய வகுப்பினரைவிடவும் ’சுப்பிரீயர்’ நிலையில் இருப்பதாக குப்தா தன் ஆய்வில் மதிப்பிடுகிறார்.
திபங்கர் எழுதுவதாவது :
They
are now ideals that energise political activisms quite at variance from those
of the once dominant local castes. This leads to a spiral of caste antagonisms symbolised by the
contradictory hierarchical formulations in the political market place. in a
sense, rarely hierarchy expressed in practice today without it being challenged
by the very people who were earlier supposed to be quiescent"
முன்பு போல இப்பொழுதெல்லாம் எவ்வித எதிர்ப்பும் இன்றி சாதி மேன்மை- உயர்வு என்பதை எவரும் கொண்டாடமுடியாது என்ற எதார்த்த விழிப்புணர்வு வளர்ச்சியை குப்தா அடையாளப்படுத்துகிறார்.
அடுத்து திபங்கர் குப்தா எழுப்பிய இரு கேள்விகள்:
Are
we to assume that the ideology of the pure hierarchy is dead? Are we now in the
realm of competing equalities?
இந்த இரண்டு கேள்விகளும் இந்தியாவில் சாதி அசைவின் எதார்த்தம் குறித்த புரிதலுக்கு அவசியமான கேள்விகள். அப்படி ஜாதிகள் பொருதிக்கொள்ளும்போது textual orthodoxy என்பதை அவை கைவிட்டுவிடுவதையும் திபங்கர் குப்தா பேசுகிறார்.
caste patriotism ஒன்றும் புதிதல்ல என்று சொல்லிவிட்டு அகிர், குஜர், ஜாட், படிடார், ஆதி தர்மிகள் என பல சாதிகள் தங்களை பெருமிதம் கொண்ட உணர்வுடனேயே பார்த்து வந்துள்ளனரே தவிர கீழ் என்ற உணர்வு கொண்டல்ல என்பதையும் திபங்கர் குறிப்பிடுகிறார்.
வயதுவந்த அனைவருக்கும் வாக்கு என வந்தபின்னர் சாதிக்கும் அரசியலுக்குமான உறவு பெருமளவு மாறி வருகிறது. castes that were once considered to be subaltern in character are breaking free of rural protocol to politically express their ambitions in supra local formats - அதாவது இன்று சாதிகள் தனக்கான அரசியல் இடத்திற்கான விருப்பார்வங்களை வெளிப்படையாக உரக்க தெரிவிப்பனவாக மாறியிருப்பதை திபங்கர் சுட்டிக்காட்டுகிறார். எனவே சாதி- கட்டுப்பாடு- கிராமம் என்ற நிலையெல்லாம் உடைந்து வருவதையும் அவர் தொட்டுக்காட்டுகிறார்.
வாக்காளர் அனைவரும் சாதி அடிப்படையில்தான் வாக்குகளை செலுத்துகிறார்கள் என்பதில்லை என்றாலும் அரசியல் தலைமைக்கும் சாதி உறவுகளுக்கும் இணக்கமான பேச்சுவார்த்தை அடிக்கடி நடக்காமல் இல்லை.
திபங்கர் இந்த முடிவிற்கும் வருகிறார்- அதாவது பன்முக தனித்தன்மை கொண்ட படிநிலைகள் உருவானதைச் சொல்கிறார். It is quite logical that there should be multiple and idiosyncratic hierarchies. பிராமணிய கருத்தியல்களான purity and pollution போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு residence, occupation wealth என தங்களை படிநிலைகளில் எப்படி உயர்த்தி பொருத்திக்கொள்கின்றனர் என்பதையும் திபங்கர் சொல்கிறார்.
எந்த தனி சாதியும் தன் கூட்டத்தாரால் மட்டும் வெற்றி பெற முடியாது என்ற அரசியல் சூழலில் அணிசேர்க்கைகள் தவிர்க்கமுடியாதாகின்றன. இந்த அணிசேர்க்கை என்பது orthodox ranking என்ற படிநிலைப்படி அமைவதில்லை. KHAM அணிசேர்க்கை சத்திரியர், தலித், முஸ்லீம் என வந்ததை திபங்கர் எடுத்துக்காட்டுவார். இந்த அரசியல் அணிசேர்க்கைகளில் எல்லாம் பண்டைய சமூகத்தில் பேசப்பட்ட textual அப்டிநிலைகளை பார்த்து அதை ஒட்டி பணிந்தெல்லாம் வருவதல்ல என்பதை அன்றாட அரசியல் புலப்படுத்துகிறது. முன்பு போல ஆதிதர்மிகளை ஜாட் சாதியினரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியாத நிலை உருவாகியிருப்பதையும் திபங்கர் சொல்வார். அரசியலில் மட்டுமில்லாமல் பொருளாதார அமசங்களிலும் தங்கள் தனித்துவத்தை Ad Dharmis காட்டத்துதுவங்கியுள்ளனர்.
சாதிகள் தங்கள் படிநிலையில் ஏற்படுத்திக்கொண்டுவரும் மாற்றங்களை வெறும் சமஸ்கிருதமயமாக்கல்- அதாவது மேல்சாதி போல் ஆகுதல் என்று சுருக்கி புரிந்துகொள்ளவேண்டாம் என்பார் திபாங்கர். பல சாதிகள் அப்படிச் செய்வதில்லை என்கிறார். அனைவருமே பிராம்மண வாத்தியார்களை-சடங்குகளுக்கு அழைப்பதுமில்லை என்கிறார். தங்களுக்கான சடங்குகளுக்கான குருமார்களை தங்கள் பகுதியிலிருந்தே அவர்கள் பெறப்பார்க்கிறார்கள். ஒக்கலிகர்கள் பகுதிகளில் கோயில்களிலிருந்து கூட பிராம்மணர்கள் அப்புறப்படுத்தப்பட்டதை திபாங்கர் குறிப்பிடுவார்.
அடுத்து திபங்கர் நகரும் இரு புள்ளிகளும் முக்கியமானவை.
”What has happened instead is
that castes today have a different context in which they can express their
identity driven politics. As the context has undergone major modifications-
urbanisation, adult franchise etc- caste identities are
expressing themselves differently from the ways they did before"
" caste has not changed, but the potentialities that were always there within this stratificatory system are now out in the open and in full view.
இந்த ஆய்வில் இறுதியாக திபங்கர் வரக்கூடிய மிக முக்கிய புள்ளி அம்பேத்கர் முன்னரே வந்தடைந்த புள்ளி. அகமணத்தை வெற்றி கொள்ளாமல் சாதி இறுக்கத்தை தளர்த்தமுடியாது என்ற புள்ளி. இதை நகர்ப்புறமயமாதல் வழியில் ’அருகாமையில் இருப்பவர் எவர்’ என்ற அடையாளமற்று போகும் சூழலால்தான் உருவாக்க இயலும் என்கிறார் திபங்கர் குப்தா.
To disarticulate caste, endogamy has to be surmounted. Only
urbanisation and its logic of anonymity can accomplish..Till that happens,
caste identities will find novel ways of expressing themselves, now in
politics, now in economics, now in capricious expressions of hierarchy, justice
and even equality.
அதாவது நகரங்களில் சாதி இல்லை என்பதில்லை. கிராமத்தைவிட ஒருவருக்கு தன்னை உரக்க வெளிப்படுத்திகொள்ளும் வாய்ப்பு அங்கு கூடுதலாக கிடைக்கிறது. Castes get stronger because of urbanisation என்கிற optical illusion பற்றியும் தன் ஆய்வில் திபங்கர் குறிப்பிடாமல் இல்லை.
திபங்கர்
ஆய்வின் வழியில் orthodoxy textual hierarchy என்கிற
சாதி படிநிலை இன்று அரசியலில்
அப்படியே தொழிற்படமுடியவில்லை. அப்படி தொழிற்படவும் இல்லை
என புரிந்துகொள்ளலாம். இதன் பொருள் சாதி இல்லை என்பதல்ல என்றும்
புரிந்துகொள்ளவேண்டும்.
6-8-2022
Comments
Post a Comment