ஆட்சி மொழி பற்றின பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கை அதன் தலைவராக இருந்த ஜி பி பந்த அவர்களால் குடியரசுத்தலைவருக்கு பிப்ரவரி 1959ல் அனுப்பிவைக்கப்பட்டது. ஆட்சிமொழிக் கமிஷன் அறிக்கை-பரிந்துரைகள்- அரசாங்கத்தால் ஏற்கப்பட்டவை- கமிஷன் அறிக்கையை ஏற்காதவர்களின் மாறுபட்ட குறிப்புகள் ஆகியவை அடங்கிய குறித்து விவாதித்த ஆவணமிது. நாடாளுமன்ற கமிட்டியில் திரு பிராங்க் ஆண்டணி அவர்கள் எழுதிய மாற்றுக்குறிப்பு வலுவாக இருந்தது. மிக நீண்ட அக்குறிப்பு இந்தி திணிப்பை மேன்மையான வாதங்களுடன் எதிர்த்த வகையில் இவ்விவாதங்களில் முக்கியமான ஒன்றாகியுள்ளது. பிராங்க் (1908-93) அரசியல்அமைப்பு சட்ட நிர்ணய சபையிலும் சிற்ந்த பங்கை ஆங்கில மொழி இருப்பிற்காக ஆற்றியவர். ஆங்கிலோ- இந்தியன் கம்யூனிட்டியின் தலைவர். நாடாளுமன்றத்தில் அக்கம்யூனிட்டி சார்பில் இடம் பெற்றவர். கல்வி நிலையங்களில் பெரும் பங்கை ஆற்றியவர்.
https://drive.google.com/file/d/1ipI5Fzzt1oP5-utgTDGQMJyR9X6gI9MW/view?usp=sharing
Comments
Post a Comment