https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, September 7, 2020

ஆட்சிமொழி குறித்து அறிஞர் அண்ணா

 

ஆட்சிமொழி குறித்து அண்ணாவின் உரையிலிருந்து

ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவையில் அண்ணா அவர்களின் குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்திலிருந்து    4-3-1965

( அண்ணா அவர்களின் உரையை தி மு ஆட்சிமொழி பிரச்சினை என்ற தனி வெளியீடாக 1965ல் வெளிக்கொணர்ந்தது)

அக்பர் அலிகான் காங் ஆந்திரா: இந்தியாவிற்கு ஒரு பொதுமொழி தேவையா அல்லவா? அப்படித் தேவையென்றால் அது எந்த மொழியாக இருக்கவேண்டும்?

அண்ணா: இந்தியாவிற்கு ஒரு பொதுமொழி இருக்கலாம்; ஆனால் அது இயற்கையான முறையில்- காலப்போக்கில்- அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாமல்- மக்கள் தாமாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக வேண்டும். அரசாங்கம்- அதிலும் இன்றுள்ள அரசாங்கம் கட்டாயப்படுத்தும் எதுவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிடும்.

.. நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் இந்தியை நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும்? இந்தி மீது மட்டுமல்ல- எந்த மொழிமீதும் எங்களுக்கு விரோதம் கிடையாது. நண்பர் வாஜ்பாயி பேசுவதைக் கேட்கும்போது இந்தி ஒரு நல்ல மொழிதான் என்று தோன்றுகிறது. மற்றவர்கள் பேசும்போது வாஜ்பாயி பேசுவது போன்று இது அவ்வளவு நன்றாக இல்லையே என்று தோன்றும்.

இந்தி ஆட்சிமொழியாவதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை- ஆட்சிமொழியாக வருவதற்கு இந்தி மொழியே தயாராக இல்லை. அந்த மொழிக்குள்ள குறைபாடுகளை நீங்கள் கவனித்தீர்களா? வளர்ச்சியடையவேண்டிய வளமில்லாத ஒரு மொழியை வைத்து மற்ற வளர்ச்சியடைந்த மொழிகளை நொறுக்கி, அடிமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

.. ஜவஹர்லால் நேருவிற்கு அடுத்து மதிப்பை உங்கள்( சாஸ்திரி) மீது வைத்திருந்தோம்.. எங்களைக் கைவிட்டுவிட்டீர்கள்- வருந்துகிறேன்.

 ஆட்சிமொழியாக இந்தி வருவதற்கு அதற்குள்ள தகுதி -அவசியம் -காரணம் என்ன என்று நான் கேட்கிறேன். அரசியல் சட்டம் என்றால் தேவைப்பட்டால் அது திருத்தப்படவேண்டியதுதானே?. அரசியல் சட்டம் அசைக்க முடியாத ஒன்று அல்ல.

.. இந்தியாவில் 40 சதம் கூட அல்ல- 20 சதவிகிதம் மக்கள் இந்தியா முழுவதும் பரவலாக இருந்தால் இந்தியைத் தொடர்பு மொழியாகவோ ஆட்சிமொழியாகவோ கொண்டுவருவதில் ஓரளவு அர்த்ததமிருக்க முடியும். ஆனால் இவர்கள் பேசும் 40 சதம் .பி, .பி, பீகார், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஒரு பகுதி மக்களால் இந்தி பேசப்படுகிறதே தவிர இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படவில்லை. ஆக ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது நாடு முழுவதற்கும் ஆட்சிமொழியாகும் தகுதியைப் பெற்றுவிடாது.

..ஆங்கில மொழி மீது எனக்கு ஒன்றும் தனிப்பட்ட பற்றுக் கிடையாது . ... ஆங்கிலத்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பெரும்பாலாக நாங்கள் எங்கள் தமிழ் மொழியில் பெற்றுவிட்டோம். இன்னும் துணிவுடன் என்னால் கூற முடியும்- ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஆட்சிமொழியாகும் தகுதி தமிழுக்கு இருக்கிறது என்று.

 ஆங்கிலமொழி பற்றி அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பது திட்டவட்டமாகக் தெரியவில்லை... ஆங்கிலத்தைக் கைவிட தயாராக அரசாங்கம் இல்லை என்பது தெரிகிறது.. உங்களிடம் எதுவும் திட்டவட்டமாக இல்லை..

 இந்தியாவிலுள்ள 14 ம் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆட்சி மொழிகளாகும் தகுதி தரப்படவேண்டும்.

.... அரசாங்க கட்டாயமில்லாமல் மக்களே இந்திதான் தொடர்பு மொழியாக வேண்டும் என்று நினைப்பார்களே யானால், அது முதலில் நடைமுறையில் தொடர்புமொழியாகி, பிறகு சட்ட சம்மதம் பெற்றுகொள்ளட்டும்.

 பல்மொழிகள் ஆட்சிமொழிகளாக ஆக வேண்டும் என்பது ஒரு குருட்டுத்தனமான கோட்பாடு அல்ல. பல்மொழிகளைக் கொண்ட நாட்டில் அது தவிர எல்லோரையும் திருப்திப்படுத்தவல்ல திட்டம் வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. .. மொழிப் பிரச்சனையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவுகாணும்வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாக நீடிக்கட்டும்; எல்லா மொழிகளும் ஆட்சிமொழிகளாகும்வரை ஆங்கிலம் நீடிக்கட்டும். பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பை காலப்போக்குக்கு விட்டுவிடலாம்.

 

1968 சட்டமன்ற தீர்மானம்

இந்திக்கு இங்கே இடமில்லை என்கிற முதல்வர் அண்ணாவின் சட்டமன்ற தீர்மானம் குறித்தவுரை ( ஜனவரி 23 1968 ) தனி பிரசுரமாக ராயப்பேட்டை தலைவன் பதிப்பகம் சார்பில் 1968ல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இனி எதிலும் இந்தி இல்லை என்பது தீர்மானகரமாக சொல்லப்பட்டது. இப்பிரசுரம் 42 பக்கங்கள் கொண்டது.  ஆங்கில வாசகங்கள் கொண்ட குறிப்பு டெல்லிக்கு சென்றது. அன்று அந்த Motion யை திரு நெடுஞ்செழியன் முன்மொழிந்திருந்தார்.  தமிழ் உட்பட 14 மொழிகளும் ஆட்சிமொழியாகும்வரை ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்றது தீர்மானம். இந்திமொழி திணிப்பை சட்டமன்றம் ஏற்கவில்லை-  அதிலிருந்து சில பகுதிகள்..

 

 This House resolves that the Three Language Formula shall be scrapped and that Tamil and English alone shall be taught and Hindi shall be eliminated altogether from the curriculam in all the schools in Tamil nadu

That the NCC the Hindi words of command shall not be used, and if the Union Govt refuses to accept this, such NCC shall be disbanded.

This House resolves that expeditious steps be taken up to introduce Tamil as medium of instruction in all the colleges and as the language of admn in all the various depts of the State Govt within a period of 5 years

This house urges that the special status given to Hindi in the Constitution shall be removed and all the Articles in the Constitution wherein an inferior status has been given to the other languages shall be so amended as to accord equal status to all the Natioanl languages of India and  that

The Union Govt shall accord equal financial assistance for the dev of all the languages specifies in 8th schedule of the Constitution.

No comments:

Post a Comment