https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, July 20, 2017

எங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 2

II
1841ல்  எங்கெல்ஸ் ராணுவசேவைக்கு சென்றார்.  இராணுவகலை குறித்து அறியலானார். பெர்லினில் அவர் பல்கலைக்கழக வெளி மாணவர் என்கிற வகையில் நட்புவட்டம் கிடைத்தது. 1842களில் எட்கர் பாயருடன் இணைந்து நையாண்டிகவிதைகள் எழுதிவந்தார்.. அதே ஆண்டில் மார்க்ஸ் பொறுப்பில் வந்த ரெய்னிஷ் ஜெய்டுங்கில் எங்கெல்ஸ் கட்டுரை எழுதினார். ஷெல்லிங்- ஹெகல் ஒப்பீடு ஒன்றை செய்தார். ஹெகலின் முற்போக்கான அம்சங்களை அவர் உயர்த்திப்பிடித்தார். ஹெகலியர்களில் நாத்தீகம் என்பதை முதலில் பேசியவராக எங்கெல்சை குறிப்பிட்டு சொல்லமுடியும் என்கிறார் ஆய்வாளர் ஸ்டெப்பனோவா.
ஷெல்லிங் குறித்து எங்கெல்ஸ் எழுதியதை ஆர்னால்ட் ரூகே பாராட்டினார். டாக்டர் பட்டம் பெற்ற ஒருவரால்தான் இவ்வளவு சிறப்பாக எழுதமுடியும் என எங்கெல்ஸ் பற்றி அறியாமலேயே உயர்வாக ரூகே எழுதினார் . எங்கெல்ஸ் நேர்மையாக நான் டாக்டர் பட்டம் பெற்றவனல்ல- ஆகவும் முடியாது என்று பதில் எழுதினார். தான்  வணிகன் என்கிற உண்மையை  தெரிவித்தார். தத்துவத்தை சுயமாக கற்று வருபவன்- அதன் ட்ராவல் ஏஜெண்ட் என்றும் சோதனை ஓட்டமாக எழுதிவருவதாகவும் நகைச்சுவயுடன் பதில் தந்தார்.
எங்கெல்ஸின் ராணுவபணிக்காலம் முடிந்து ஊர் வந்தவுடன் தந்தை மான்செஸ்டர் செல்ல பணித்தார். தந்தையார் பார்ட்னராக இருந்த டெக்ஸ்டைல்ஸ் பர்ம் வேலைக்கு அவர் செல்வதற்காக 1842 நவம்பரில் லண்டன் வந்தார். இங்கிலாந்து பிரஷ்யாவைவிட பலவிதத்தில் மாறுபட்டு இருப்பதை எங்கெல்ஸ் உணர்ந்தார். பாட்டாளிகள் தங்கி இருக்கும் பகுதிகளுக்கு செல்லத்துவங்கினார். அங்கு அவர்களின் மோசமான வாழ்க்கை குறித்து தீவிரமாக கற்றார். இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்க நிலை என்பதை அவர் எழுதினார். இவ்வாக்கத்தில் மனம் லயித்ததால் மத்தியதர வர்க்கத்தின் ஆசைகள் கேளிக்கைகளில் ஈடுபடவில்லை என எழுதுகிறார் எங்கெல்ஸ். இச்சூழலில்தான் மேரிபர்ன்ஸ் என்கிற அய்ரிஷ் பெண் தொழிலாளருடன் அவர் காதல் வயப்பட்டு வாழத்துவங்கினார். முற்போக்கு இலக்கிய கவிஞர்களின் நட்பு மான்செஸ்டரில் கிடைத்தது.
சார்ட்டிஸ் இயக்கத்தாருடன் நட்பு கொண்டு அவர்களது பத்ரிக்கைகளில் எழுத துவங்கினார். 1844ல்  நெசவளர் போராட்டம் பற்றி எங்கெல்ஸ் எழுதினார். ராபர்ட் ஓவன் ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். அவர்களின் பத்ரிக்கையான நியு மாரல் வேர்ல்ட் என்பதிலும் எழுதினார்.. ஜெர்மன் தத்துவஞானிகள் எனப்பட்ட காண்ட், பிச்டே, ஷெல்லிங், ஹெகல் குறித்த அறிமுகங்கங்களை அவர் தரலானார். பிரஞ்சு தத்துவம் குறித்தும் எழுதினார். பிப்ரவரி 1844ல் மார்க்ஸ்- ரூகே கொணர்ந்த பத்ரிக்கையிலும் எங்கெல்ஸ் எழுதினார். அவுட்லைன்ஸ் ஆப் பொலிட்டிகல் எகானமி அதில் வந்தது.  எங்கெல்ஸ் நன்கு பழக்கமாவதற்கு முன்பே மார்க்ஸ் இந்த கட்டுரையை பாராட்டி ’பிரில்லியண்ட் எஸ்ஸே’ என்றார். சமுக விஞ்ஞானம் என்கிற துறைக்கு எங்கெல்ஸ் இவ்வாறு நுழைந்தார் எனலாம்.

மார்க்ஸ்- எங்கெல்ஸ்க்கு முன்பாகவே ஜெர்மனியில் தீவிர சோசலிச, கம்யூனிச  கருத்துக்களை வில்ஹெல்ம் வைட்லிங், மோசஸ் ஹெஸ் பேசிவந்தனர். வர்த்தகம் முதலாளித்துவமயமாகி வருவதின் சமுக கேடுகள் பற்றியும் ஹெஸ் எழுதி வந்தார். லங்காஷ்யரில் ஊதிய வெட்டு எதிர்ப்பு இயக்கங்கள் நடந்தன. மான்செஸ்டர் மில்களிலும் தொழிலாளர் பிரச்சனைகள் பரவலாக எழுந்தன. பத்தாயிரம் தொழிலாளர்கள் மில்களை சூழ்ந்துகொண்டு தாக்கத்துவங்கினர். மார்க்சியத்தின் துவக்கப்புள்ளிகளை எங்கெல்ஸ் 1840களின் மத்தியில் வந்தடைகிறார். 1845ல் இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கத்தின் நிலை என்கிற ஆக்கத்தை எழுதினார்.
ராபர்ட் ஓவன் தனது ஸ்காட்லாந்த் நியு லனார்க் பஞ்சாலையை தொழில் உறவின் மாதிரியாக மாற்றிட முயற்சித்து வந்தார். கூட்டுறவு கடைகளை அவர் நிறுவினார். சோசலிச அசோசியேஷன்களை நடத்தினார். அதில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்தனர். 1830களில் ஒவன் ஆதரவாளர்கள் செல்வாக்கு குறைந்து சார்ட்டிஸ்ட்கள் தொழிலாளர் மத்தியில் செல்வாக்குடன் இருந்தனர். அவர்களது ஆறு அம்ச கோரிக்கைகள் அனைவருக்கும் வாக்குரிமை, இரகசிய வாக்கெடுப்பு, ஆண்டு தேர்தல், சம எண்ணிக்கை வாக்குதொகுதிகள், சம்பளபட்டுவாடா முறைப்படுத்தல், சொத்து இருந்தால் மட்டுமே தேர்தலில் என்கிற நிபந்தனை நீக்கம் தொழிலாளர்களிடம் பரவியது. எங்கெல்ஸ் சார்ட்டிஸ்ட்கள் இயக்கத்தை ’வர்க்க இயக்கம்’, ’கூட்டு வர்க்க உணர்விற்கு’ துணையாகிறது என கருதினார்.
சார்ட்டிஸ்ட்களின் நார்த்தென்ஸ்டார் பத்ரிக்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார் எங்கெல்ஸ். கார்லைல் தாக்கமும் அவரிடம் ஏற்பட்டது. மான்செஸ்டர் நகரம் குறித்து அவர் நண்பர்கள் எரிச்சல் அடைந்து பேசுவர். லண்டன் போல் அங்கு சமுக வாழ்க்கை, கேளிக்கை வசதிகள் இல்லை. ஊர் முழுதும் பஞ்சாலைத்தொழிலாளர், ஊரே அழுக்கு என  தெரிவிப்பர்.
எங்கெல்சின் முதல் காதல் அய்ரிஷ் பெண்மணி மேரிபர்ன்ஸ் வசம் ஏற்பட்டது. பஞ்சாலைத் தொழிலாளர் குடும்பம். முறையான கல்வி கிடையாது. எழுதவும் படிக்கவும் கொஞ்சம் மட்டுமே தெரிந்த நல்ல பெண்மணி என்கிற பதிவு நமக்கு கிடைக்கிறது. எங்கெல்ஸ் தந்தையின் பாக்டரியில் அப்பெண்மணி வேலை பார்த்தார்  என்றும், இல்லை அவர் ஆரஞ்சு விற்றவர் என்று சிலரும் வேறுபட்ட தகவல்களை தருகின்றனர்.. அவர்கள் சேர்ந்து வாழத்துவங்கினர். . 1843-44 களில் இருவரும் பல தொழிலாளர் குடியிருப்புகளை பார்த்தனர். 1845 இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை புத்தகம் வருவதற்கு மேரி பர்ன்ஸ் பங்களிப்பை உணரமுடியும்.
புருதான் புத்தகம் பற்றி ஓவன் பத்ரிக்கையான நியு மாரல் வெர்ல்டில் எங்கெல்ஸ் எழுதினார். தனியார் சொத்துரிமை குறித்த  விமர்சன பார்வை அவரிடம் மேம்படத்துவங்கியது. தொழிலாளர் பகுதிகளுக்கு கையில் நோட்டுபுத்தகத்துடன் சென்று மோசமான நிலைமைகளை குறிப்பெடுத்துக்கொண்டு வரும் பழக்கம் வைத்திருந்தார் எங்கெல்ஸ். அவுட்லைன்ஸ் ஆப் கிரிட்டிக் ஆப் பொலிடிகல் எகானமியில் எங்கெல்ஸ் அந்நியமாதல் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தினார். what was needed was practical action, a union of chartism and socialism with that the march of history toward communism.. the revoultion must come, it is already too late to bring about a peaceful solution  என எங்கெல்ஸ் எழுதினார்.
இளைஞனாக இருந்தபோதே மிக முக்கிய அம்சமான வன்முறை குறித்து அவர் தெளிவாக பேசியிருந்தார். எவ்வளவு அதிக தொழிலாளர்கள் கம்யூனிசத்தை கொள்கை என புரிந்து வளர்கிறார்களோ அந்த அளவு வன்முறை இரத்த களறி குறைவாகவே இருக்கும் என குறிப்பிட்டர் எங்கெல்ஸ். கம்யூனிச புரிதல் நோக்கி திரள் வெகுஜன இயக்கம் என இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். communism is the question of humanity and not of the workers alone  என எங்கெல்ஸ் விரிந்த பொருள் தந்து எழுதினார். எங்கெல்ஸ் தன்னை ஹெகல்நீக்கம் செய்துகொண்டுவிட்டார். அவரின் இங்கிலாந்தில் தொழிலாளர் நிலையும், அவுட்லைன் ஆக்கமும் கம்யூனிச கொள்கைக்கு மிக முக்கிய பங்களிப்பை தந்துள்ளதாக த்ரிஸ்ட்ராம் ஹண்ட் தெரிவிக்கிறார்.
 கபே டெ லா ரெஜென்ஸ்’ ஒருகாலத்தில் வால்டேர், நெப்போலியன், பெஞ்சமின் பிராங்க்லின் போன்றோர் வந்து போன பார்கிளப். அங்குதான் எங்கெல்ஸ் மார்க்ஸ், மற்ற ஹெகலியர்கள் பாரிசில் சந்திப்புகளை வைத்திருந்தனர். ஜென்னியுடம் மார்க்ச் 1843ல் பாரிஸ் வந்தார்.. இருவரும் இணைந்து பாயரை விமர்சித்து புனித குடும்பம் எழுதினர். பின்னர் ஊர் திரும்பி அங்கு கம்யூனிச விளக்க கூட்டங்களை எங்கெல்ஸ் நடத்திக்கொண்டிருந்தார். உளவுத்துறை அறிக்கை சென்றது. எல்பெர்ஃபெல்ட்- பர்மன் பக்கத்தில் கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு தடை வந்தது. எங்கெல்சின் தந்தைக்கு கடுமையான வருத்தம் ஏற்பட்டது. மார்க்ஸ் பெல்ஜியத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார் எங்கெல்ஸ். இருவரும் சேர்ந்து மான்செஸ்டர் சென்றனர். அங்கு நூலகத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டனர்.
பூர்ஷ்வா உற்பத்திமுறை, பொருளாதார ஏற்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எங்கெல்ஸ் எழுத்தில் காணப்பட்டன. மால்த்யூஸ், கார்லைல் ஆகியவர்கள் குறித்தும் அவர் விமர்சன் பார்வை கொள்ளத்துவங்கினார். பொருள்முதல்வாத நோக்கி நகர்ந்து தனது கம்யூனிச பார்வையை பலப்படுத்திக் கொண்டிருந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்தின் தொழிலாளர் போராட்டங்களின் வர்க்கத்தன்மைகளை பேச ஆரம்பித்தார். டோரி கட்சியினரை aristocracy- reactionary- clergy போன்ற விமர்சனங்களால் தாக்கினார். லிபரல் கட்சியை வியாபாரி என்றார். தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லாததை கண்டித்தார். இங்கிலாந்தை சொத்துதான் ஆள்கிறது என்றார்.
மார்க்சுடன் உரையாடிய பின்னர்தான் லீப்சிக்கில் தனது இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை புத்தகத்தை வெளியிட்டார் எங்கெல்ஸ். முதலாளித்துவத்தை வீழத்த பாட்டாளிகளின் அமைப்புரீதியான திரளல் அவசியம் என்பதை எங்கெல்ஸ் வலியுறுத்தினார். அப்போது அவருக்கு சார்ட்டிஸ்ட் இயக்கத்தார் மீது நம்பிக்கை அதிகம் இருந்தது. சோசலிசம்- சார்ட்டிசம் இணைப்போம் என பேசிவந்தார்

No comments:

Post a Comment