https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, July 20, 2017

எங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes part 8

VIII
அக்டோபர் 1888ல் காட்ஸ்கி தனது துணவி லூசியை விடப்போகிறேன் என்றபோது அப்பெண்ணிற்கு ஏற்படும் துன்பம் பற்றி கவலையுடன் எங்கெல்ஸ் சொன்னதாக த்ரிஸ்ட்ராம் ஹண்ட் தனது பதிவில் குறிப்பிடுகிறார். ஆனாலும் விவாகரத்தை செய்தார் காட்ஸ்கி. எங்கெல்ஸ்- காட்ஸ்கி குறித்து டிராட்ஸ்கி கீழ்கண்ட பதிவை தந்துள்ளார். டிராட்ஸ்கியின் பதிவில்..
All his life Engels had a particularly tender attitude toward women, as those who were doubly oppressed. This citizen of the world with an encyclopedic education was married to a simple textile worker, an Irish girl, and after she died he lived with her sister. His tenderness to both was truly remarkable. Marx’ inadequate response to the news of the death of Mary Burns, Engels’ first wife, raised a little cloud in their relations, to all signs, the first and last cloud throughout the forty years of their friendship.
Towards Marx’ daughters, Engels behaved as if they were his own children; but at a time when Marx, apparently not without the influence of his wife, attempted to intervene into the emotional life of his daughters, Engels gave him carefully to understand that such matters concern nobody except the participants themselves. Engels had particular affection for Eleanor, Marx’ youngest daughter. Aveling became her friend; he was a married man who had broken with his first family. This circumstance engendered around the “illegal” couple the stifling atmosphere of genuinely British hypocrisy. Is it greatly to be marvelled at that Engels came to the strong defense of Eleanor and her friend, even irrespective of his moral qualities? Eleanor fought for her love for Aveling so long as she had any strength left. Engels was not blind but he considered that the question of Aveling’s personality concerned Eleanor, first and foremost. On his part he assumed only the duty to defend her against hypocrisy and evil gossip. “Hands off!” he stubbornly told the pious hypocrites. In the end, unable to bear up under the blows of personal life, Eleanor committed suicide.
The youthful Kautsky couple spent more than six years in London in constant and unclouded communion with Engels and his family circle. The General was literally thunderstruck by the news of the divorce proceedings between Karl and Luise Kautsky that came almost immediately after their arrival on the Continent. The closest friends willy-nilly all became the moral arbiters in this conflict. Engels immediately and unconditionally took the wife’s side and did not change his position to his dying day
Engels, almost demonstratively, invited Luise to become the manager of his household that had been orphaned by the death of Helene Demuth. Luise soon married for the second time and lived in Engels’ house with her husband. Finally, Engels made Luise one of his heirs. The General was not only magnanimous but stubborn in his attachments.  எங்கெல்ஸ் அன்பு செலுத்திய பெண்கள் பற்றியது மட்டுமல்லாமல், கைவிடப்பட்ட காட்ஸ்கியின் துணைவியாரையும் அவர் தனது உதவியாளராக வைத்துக்கொண்டு அவருக்கு வேறு மணமும் முடித்து வைத்தார். அக்கணவர்தான் எங்கெல்ஸ்க்கு கான்சர் இருப்பதை முதலில் அறிந்து வியன்னா டாக்டரும் சோசலிஸ்ட் தலைவருமான அட்லருக்கு தெரிவித்தவர்.  டிராட்ஸ்கி இச்செய்திகளை நேர்மையாக பதிவு செய்துள்ளதை  காணமுடிகிறது. 
                        Louise

மார்க்ஸ் மறைவிற்கு பின்னர் குடும்ப உதவியாளர் ஹெலன் டெமுத் எங்கெல்ஸ் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.  அவர் நவம்பர் 1890ல் மறைந்தார். அதற்கு பின் எங்கெல்ஸ் வீட்டை பராமரிக்க காட்ஸ்கியின் விவாகரத்து பெற்ற துணைவியார் லூசி அழைக்கப்பட்டார். In Engels's final years, the two of them enjoyed a higly productive, supportive, and affectionate relationship with the younger Lousie  as a secretarial assistanat, taking care of correspondence, organising papers, proof reading Engels's articles என த்ரிஸ்ட்ராம் எழுதுகிறார். ஆகஸ்ட் பெபல்க்கு எங்கெல்ஸ் முப்பது வயது லூசி பற்றி எழுதிய கடிதத்தில்  the difference in our ages precludes marrital no less than extra- marital relations, so that nothing remains but that self-same housewifeliness  என குறிப்பிட்டார். மார்க்ஸ் பெண்களைப்போல லூசியும் எனக்கு பெண்தான் என  அவர் சொல்லத்துவங்கினார்.
1895 மார்ச்சில் எங்கெல்ஸ்க்கு கான்சர் esophagus and larynyx இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது...வியன்னா டாக்டர், சோசலிச தலைவர் அட்லருடன் கலந்து பேசி ஈஸ்ட்பர்ன் பகுதியில் அவர் ஓய்வுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன... அவர் தனது இறுதி முடிவு வருவதை உணரத்துவங்கினார். அதனால் codicil to will  தயாரித்தார். அவரது சொத்துமதிப்பான 20378 பவுண்டில் மார்க்சின் மகள் லாராவிற்கு 3 பாகம், அடுத்த மகள் எலியனாருக்கு 3 பாகம், மீதி இரண்டு பாகம் காட்ஸ்கி முன்னாள் துணைவியும் அப்போது டாக்டர் ஃப்ரேபெர்கர் துணைவியுமான லூசிக்கும் என்றும் பிரித்தார். மார்க்சின் முதல் மகள் ஜென்னியின் குழந்தைகளுக்கு டிரஸ்ட் நிதியாக  கொஞ்சம் ஒதுக்கினார். அதே போல் மூலதனம் புத்தகத்தின் ராயல்டியை மார்க்சின் மகள்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.. எங்கெல்ஸ் துணைவி பர்ன்ஸ் உறவினர் பெண் எங்கெல்ஸ் உடன் இருந்தாள்- அப்பெண்ணிற்கு 2230 பவுண்டு என எழுதிக்கொடுத்தார்.
இவர்கள் எங்கெல்ஸ் இடம் அவ்வப்போது கடன் என்ற பெயரில் வாங்கி சென்ற அனைத்தையும் தரவேண்டாம் என சொன்னார். சோசலிச கட்சி தேர்தலுக்காக 1000 பவுண்டை ஆகஸ்ட் பெபல் வசம் கொடுத்தார். தனது தந்தையின் ஆயில் பெயிண்ட் படத்தை சகோதரரிடம் ஒப்படைத்தார்.
ஆகஸ்ட் 5 1895 இரவு 10.30க்கு அவர் மறைந்தார். எனது உடலை எரித்து சாம்பலை கடலில் தெளியுங்கள் என அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார். அவரது  funeral services  என்கிற இறுதி நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 அன்று 80 தோழர்கள் சூழ நடந்தது. லீப்னெக்ட், பெபல், லபார்க், எலியனார். ஏவ்லிங் போன்றவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர் விருப்பப்படி அவர் ரசித்த ஈஸ்ட்பர்ன் கடல் பகுதியில் பெர்ன்ஸ்டைன், டஸ்ஸி (எலியனார் மார்க்ஸ்) அவர் கணவன் எவ்லிங், பிரடெரிக் லெஸ்னர் நால்வரும் வாடகை படகு பிடித்துக்கொண்டு போய் இங்கிலீஷ் கால்வாயில் 5 மைல் சென்று கடலில் எங்கெல்சின் அஸ்தியை கரைத்தனர். எந்தவித   family tomb கூட மகத்தான அத்தோழனுக்கு இல்லை...
             with Marx's Daughters

ஆகஸ்ட் 6 1895 இரவில் 11.30க்கு அவர் மறைந்த செய்தி கிடைத்ததாக காட்ஸ்கி எழுதியுள்ளார். மதியம் முதல் நினைவின்றி அவர் இருந்தார். அவருக்கு அவ்வாண்டு மார்ச்சில் கான்சர்  cancer in the esophagus ல் இருந்தது என்பது சில நெருங்கிய தோழர்களுக்கு மட்டுமே தெரியும். அது அவரை குலைத்துவிட்டது. அவர் இறந்தபோது தோழர் பெர்ன்ஸ்டைன் மட்டுமே உடன் இருந்தார். அவர் இரு மாதங்கள்  ஈஸ்ட்போர்ன் பகுதிக்கு ஓய்விற்காக சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன்பிலிருந்தே அவர் அதிகம் பேசமுடியாமல் எழுதி காட்டத்துவங்கினார். அவர் தனது உடைகளை மாற்றிக்கொள்ளக்கூட உதவிவேண்டியவராக இருந்தார். அப்படி உடைமாற்ற சென்ற லிஸ்ஸிதான்  அவர் மரணமுற்றதை உணர்ந்து  all is over  என வெளியே வந்து தெரிவித்தார்.
Marx and Engels are the spiritual leaders of the international proletariat, whose inner life they knew better than any one else. When Engels, hitherto so robust, sank into his grave, his loss was mourned by the laborers of the world and their sorrow knew no bounds of land or speech என அவர் சோசலிஸ்ட் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். Their Union of Socialism with labour movement created modern scientific socialism என்றார் காட்ஸ்கி.
1850களின் ஆரம்பத்தில் இருவரும் முற்றிலுமாக ஜெர்மானிய தொடர்பறுந்து இருந்தனர். ஜெர்மன் பத்த்ரிக்கைகள் கட்டுரைகளை வெளியிட மறுத்தன. அவர்கள் எழுதியதை கொண்டுவர வெளியீட்டாளர்கள் முன்வரவில்லை என காட்ஸ்கி தெரிவிக்கிறார். 1850-70 ஆகிய 20 ஆண்டுகள் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இல்லை என்றாலும் அறிவார்ந்த விவாதங்களை தொடர்ந்துகொண்டிருந்தனர். எங்கெல்ஸ் எழுத்துக்களை விளக்கங்களைப் படித்துவிட்டு மார்க்சின் மூலதனத்தை படிப்பது உதவிகரமாக இருக்கும் என்பார் காட்ஸ்கி.
மார்க்ஸ்- எங்கெல்ஸ்க்கு முன்பிருந்த பல சோசலிஸ்ட்கள் மக்களுக்கு நல்லெண்ணத்தை விதைத்து சோசலிசம் என்கிற அமைதியான கனவை வைத்திருந்தனர். வர்க்கபோராட்டம் என்றோ, பாட்டாளிகள் இயக்கம் என்றோ அவர்கள் அதை புரிந்து முன்னெடுக்கவில்லை. Political labour movement என்ற உருவம் கொடுத்தவர்கள் மார்க்ஸ்- எங்கெல்ஸ் என்றார் காட்ஸ்கி. No longer any place for peaceful, unpolitical socialism என்பதை அவர்கள் தெரிவித்தனர். தன்னைப்போன்ற ஏராள இளைஞர்களையெல்லாம்விட மிக சுறுசுறுப்பாக 67 வயதில் எங்கெல்ஸ் மூலதனத்தின் அடுத்த இருபாகங்களின் வேலையில் ஈடுபட்டதை காட்ஸ்கி வியப்புடன் பதிவு செய்துள்ளார். நாங்கள் எங்கள் காலத்திற்காக காத்திருந்தோம். அதேபோல் உங்கள் காலத்திற்காக காத்திருங்கள் என அவர் அறிவுரை கூறியதாகவும் காட்ஸ்கி சொல்கிறார். கற்றுக்கொடுத்தல் மட்டுமல்ல நம்வேலை- கற்றுக்கொள்ளலும்தான் என்றார் எங்கெல்ஸ்.
எங்கெல்ஸ் தனது 73ஆம் வயதில் லீப்னெக்ட் மற்றவர் அழைத்து போட்ட கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது 50 ஆண்டுகளுக்கு மேலான எங்கெல்சின் சேவைகளை லீப்னெக்ட் பாராட்டி சொல்லிக்கொண்டிருந்தார். பதில் உரையில் எங்கெல்ஸ்  You know that I am not an orator or parliamentarian; I work in a different field, chiefly in the study and with the pen என மக்களுக்கான தனது போராட்டமுறையை எடுத்துரைத்தார்.
மார்க்சின் தளபதி எங்கெல்ஸ் மார்க்சுடன் இணைந்தும் தன்னளவில் தனித்துவமாகவும் மார்க்சியம் என்கிற பொது அடைவில் உள்ளார்ந்து நிற்கிறார். மார்க்ஸ் மறைந்தபோது இடுகாட்டில் நின்ற 11 தோழர்கள் மத்தியில் எங்கெல்ஸ் ஆற்றிய  புகழஞ்சலி உரை இன்றுவரை  மங்காமல் அனைவராலும் மெச்சப்படும் வகையில் நிற்கிறது. கோடானுகோடி தோழர்கள் உலக்ம் முழுதும் அவ்வுரையை சுட்டிக்காட்டி இன்றளவும் பேசிவருகின்றனர்.
 மார்க்ஸ் மறைவிற்குப்பின் எங்கெல்ஸ் ஆற்றிய பணியை ஹரால்ட் லாஸ்கி Few men have ever been so eager to prove the greatness of a colleague at the expense of their own eminence என்று  குறிப்பிட்டார்.. Marxism as mass political movement begins not with Das Capital or the ill fated First International but with Engels's voluminous pamphlets and propaganda of 1880s  என த்ரிஸ்ட்ராம் ஹண்ட் மதிப்பிடுகிறார்…
Ref; :
Engels- Yevgenia Stepanova
Engels- Karl Kautsky
Marx's General- Engels Revolutionary Life by Tritsram Hunt

Engels- Kautsky by Trotsky

No comments:

Post a Comment