Skip to main content

எங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 3

III
1844ல் பாரிசில் மார்க்சை சந்தித்து உரையாடினார் எங்கெல்ஸ். கொள்கைபூர்வமாக இருவருக்கும் ஒத்தநிலைப்படுகள் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் வேலைகளை அதற்கேற்ப இசைவுடன் உருவாக்கிக்கொண்டனர். மார்க்ஸ் எங்கெல்ஸ்  இணைந்து புருனோ பாயரை விமர்சித்து தங்களது புனிதகுடும்பம் என்கிற புகழ்வாய்ந்த படைப்பை எழுதினர். வெகுமக்கள்தான் வரலாற்றை உருவாக்குபவர்கள் என இருவரும் உரக்க அறிவித்தனர். பாயர்பாக்கின் தாக்கம் அவர்களுக்கு இருந்தது. பாட்டாளிகளின் விடுதலை இலக்கு குறித்து பேசினர்.
தனது கம்யூனிச கருத்துக்களால் தந்தையிடமிருந்து தான் தொல்லைக்கு ஆளாவதாக எங்கெல்ஸ் மார்க்ஸிற்கு 1845 மார்ச்சில் கடிதம் எழுதுகிறார். வீட்டிலும் வெளியிலும் ஏதும் செய்யமுடியவில்லை என்கிற தனது சோர்வை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் பிரஸ்ஸல்சில் சந்திக்கின்றனர். பாயர்பாக் தீசிஸ் என்கிற ஆழமான் சிறிய படைப்பை மார்க்ஸ் எழுதிக்கொண்டிருந்தார். உலகை விளக்குவதல்ல, மாற்றுவதே வேலை என்கிற புகழ் வாய்ந்த மார்க்சின் வாசகம் அதில்தான் எழுதப்பட்டது. இருவரும் சேர்ந்து பிரிட்டன் சென்றனர், மான்செஸ்டரில் தங்கினர். கார்ல் ஷாப்பர், பாயர், ஜோசப் மோல் ஆகியவர்களுடன் உரையாடினர். ஜனநாயகவாதிகளின் சர்வதேச அமைப்பு ஒன்று தேவை என்கிற முடிவிற்கு வந்தனர்.
பாட்டாளிவர்க்க சர்வதேசியம் எனப் பொருள்தரக்கூடிய கட்டுரை ஒன்றை பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் என்பதில் எங்கெல்ஸ் எழுதினார். அனைத்து நாடுகளின் பாட்டாளிகளுக்கும் ஒரே இலக்கு, ஒரே எதிரி, ஒரே போராட்டம் என்றார் எங்கெல்ஸ். உழைப்பவர்களுக்கு குறுகிய தேசிய வெறி இல்லை. பல நாடுகளின் சகோதரத்துவத்தை அவர்களால் உணரமுடியும் என்றார். மார்க்ஸ் எங்கெல்ஸ் இணைந்து ஜெர்மன் தத்துவம் எழுதினர். ஆனால் பிரசுரிக்கவில்லை. 1932ல்தான் அது வாசகர்களுக்கு கிடைத்தது. அவர்கள் வர்க்க போரட்டம் என்பதை அதில் வலியுறுத்தியிருந்தனர். புரட்சியின் அவசியத்தை பேசியிருந்தனர். தங்களது பார்வையை விசாலப்படுத்திக்கொள்ளவே நாங்கள் ஜெர்மன் தத்துவம் எழுதிப்பார்த்துக்கொண்டோம். சமுக பொருளாதார மாற்றங்கள், வர்க்கப்போராட்டம் வரலாற்றின் உந்துசக்தி, கம்யூனிச சமுகம் என்பதை பற்றிய தங்கள் பார்வையை மார்க்ஸ் - எங்கெல்ஸ் அவ்வாக்கம் மூலம் மேம்படுத்திக்கொண்டனர். எங்களுக்கு புரிதல் கிடைத்துள்ளது, அந்த ஜெர்மன் தத்துவ ஏடுகளை எலிகள் சாப்பிடட்டும் என்றனர் நண்பர்கள்.
1845 கோடையில் அவர்கள் பிரஸ்ஸல்ஸ் திரும்பினர். அருகாமை வீடுகளில் தங்கினர். மாலை நேரம் முழுதும் பீர் கிளப்களில் மோசஸ் ஹெஸ், ஜார்ஜ் வீர்த், பெரெயில்கிராத், பகுனின், எங்கெல்ஸ், மார்க்ஸ் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேரிபர்ன்ஸ் உடன் திருமணம் இல்லாமல் எங்கெல்ஸ் வாழ்வது  சில சோசலிஸ்ட்களுக்கு பிடிக்காமல் இருந்தது. ஆனால் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் அவர்கள் வட்டத்திற்கு எங்கெல்ஸ் மேரியை அழைத்து வந்துள்ளார்.
ஜெர்மன் தொழிலாளர் கல்வி மையம் நிறுவிய ஷாப்பர், மோல், ஹெயின்ரிச் பாயர் ஆகியோருடன் எங்கெல்ஸ் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர்களுக்கு பிளாங்கியிஸ்ட்கள் தொடர்பு இருந்தது. 1843வரை எங்கெல்ஸ் லீகில் சேரவில்லை. அவர்களுடன் 1845ல் மார்க்ஸ் விவாதித்துக் கொண்டிருந்தார். பிரஸ்ஸல்ஸில் கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டன்ஸ் கமிட்டி ஒன்றை மார்க்ஸ் ஏற்படுத்தியிருந்தார். From 1845 to the revoultions of 1848 marx- Engels were unshakeable in their support for the establishment ( by force if necessary) of bourgeosis power and liberal democarcy என்று குறிப்பிடுகிறார் TRistram Hunt.
மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் மையம் அமைத்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அங்கு வில்லியம் உல்ப், ஜென்னியின் சகோதரர் எட்கர் ஆகியோர் உடன் இருந்தனர். ஜனவரி 1846ல் கம்யூனிஸ்ட் கரெஸ்பண்டான்ஸ் கமிட்டி மூலம் பல நாடுகளின் சோசலிச புரட்சியாளர்களின் தொடர்புகளை மார்க்ஸ் உருவாக்கினார். லண்டனில் லீக், சார்ட்டிஸ்ட்கள் தொடர்பும் இருந்தது. சிதறிகிடக்கும் ஜெர்மன் சோசலிஸ்ட்களை திரட்டுவது, லண்டன், பிரஞ்சு குழுக்களுடன் உறவுகள் என முடிவெடுத்தனர்.
பிரான்சில் ஆகஸ்ட் பிளாங்கியின் இயக்கம் தோற்றது. 1839ல் பலர் கைதாகினர். 1840ல் லண்டன் தொழிலாளர் சங்கம் என்பதை பிரான்சிலிருந்து சென்ற நண்பர்கள் துவங்கினர். வில்ஹெல் வைட்லிங் தையற்கலைஞர். கம்யூனிச கருத்துக்களுடன் ஆயுதம் தாங்கிய புரட்சி என பேசிவந்தார். வைட்லிங்  தண்டனை பெற்ற 40 ஆயிரம் பேர்களை கொண்டு கம்யூனிச புரட்சி என வலியுறுத்தி வந்ததை எங்கெல்ஸ் கடுமையாக கிண்டலடித்து விமர்சித்தார். வைட்லிங் பாக்கெட்டில் தயாரக சோசலிசம் உட்கார்ந்துள்ளது . அதை நாம் யாரோ திருடிக்கொண்டு போய்விடப்போகிறோம் என அம்மனிதர் அஞ்சுவது வேடிக்கை என எங்கெல்ஸ் விமர்சித்தார். Communism no longer meant the concoction, by means of the imagination, of an ideal society as perfect as possible, but insight of nature, the conditions and the consequent general aims of the struggle waged by the proletariat என எங்கெல்ஸ் பதில் உரைத்தார்..
புருதானின் வறுமையின் தத்துவத்தை விமர்சித்து மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என்பதை கொணர்ந்தார். எங்கெல்ஸ் பல குழுக்களை சந்தித்து தனியார் சொத்துரிமை ஒழித்தல், பாட்டாளி வர்க்கநலன், புரட்சி போன்ற பொது கருத்தாங்களை ஏற்க வைத்துக்கொண்டிருந்தார். 1847ல் லீகில் சேரவேண்டி ஜோசப் மால் மார்க்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லீக் காங்கிரஸ் 1847 ஜூனில் நடந்தது. மார்க்ஸ் பங்கேற்க இயலவில்லை. எங்கெல்ஸ் பாரிஸ் பிரதிநிதியாக பங்கேற்றார். எங்கெல்ஸ் கேள்வி- பதில் முறையில் ஆவணம் ஒன்றை தயாரித்து எடுத்து வந்திருந்தார். லீகை கம்யூனிஸ்ட் லீக் என பெயரிட்டு அழைப்பது, அனைத்து நாடுகளின் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்கிற முழக்கம் ஏற்கப்பட்டன. பிரஸ்ஸல்சில் மார்க்ஸ் தலமையில் கம்யூனிஸ்ட் லீக் மாவட்டம் ஒன்று செயல்பட துவங்கியது.
அடுத்த காங்கிரஸிற்கு முன்னர் சந்தித்து பேசவேண்டும் என்கிற கடிதம் ஒன்றை எங்கெல்ஸ் மார்க்சிற்கு நவம்பர் 23, 1847ல் எழுதுகிறார். முழுமையாக நமது கருத்துப்படி மாநாடு அமையவேண்டும் என்கிற விருப்பம் அதில் தெரிவிக்கப்பட்டது. நமது ஆவணத்தை கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ என அழைக்கலாம் என்றார் எங்கெல்ஸ். என்னிடம் உள்ளவற்றை எடுத்துவருகிறேன் சரிபார்த்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். எங்கெல்சின் நகல்  principles of communism என்றிருந்தது. அதில் அவர் மிக முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அமைதியான வழிகளில் தனியார் சொத்துரிமையை அழிக்கமுடியுமா? வாய்ப்பிருக்கலாம் அது நம் விருப்பம் கூட என்கிற பதிலும் அதில் இருந்தது. ஆனால் பாட்டாளிகள் ஒடுக்கப்படுவதுதான் அனுபவமாக இருக்கிறது. புரட்சியை காப்பாற்றவேண்டாமா என்கிற பதில் கேள்வியையும் அவர் எழுப்பினார். அதே போல் ஒரு நாட்டில் சோசலிசம் வெல்லுமா என கேள்வி கேட்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனியில் ஒரே நேரத்தில் புரட்சி  எழலாம் என்கிற பதிலை வைத்திருந்தார். இந்த கேள்விகள் அவர்கள் பின்னர் எழுதப்போகும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம் பெறவில்லை. 

கம்யூனிஸ்ட்லீகின் இரண்டாவது காங்கிரஸ் நவம்பர் 9- டிசம்பர் 8 வரை 1847ல் லண்டனில் நடந்தது. பிரஸ்ஸல்ஸ் சார்பில் மார்க்ஸ், பாரிஸ் சார்பில் எங்கெல்ஸ் பங்கேற்றனர். பூர்ஷ்வா ஆட்சியை தூக்கி எறிந்து பாட்டாளிகளின் ஆட்சி   என்பது  மார்க்ஸ் கூறியபடி ஏற்கப்படுகிறது. வெளிப்படையான போராட்டம்- புரட்சி என்பதுதான் அவசியம், சதி கவிழ்ப்பல்ல என்ற நிலையை மார்க்ஸ்- எஙெல்ஸ் எடுத்தனர். 1848ல் அவர்களுக்கு கொடுக்க்ப்பட்ட பணியின்படி பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்டு வெளியானது. 1848 மார்ச் 3ல் மார்க்ஸ் பிரஸ்ஸல்சிலிருந்து 24 மணிநேரத்தில் வெளியேற  அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜெர்மனிக்கு வலுவான பேரரசு முறையா, ஒன்றுபட்ட ஜனநாயக குடியரசா எது தேவை என்கிற விவாதம் பெருகியது. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பாட்டாளிவர்க்க எழுச்சி மூலம் ஜனநாயக ஜெர்மனி என்பதை  பேசிவந்தனர்.  அவர்கள் ஜெர்மன் கம்யூனிஸ்ட்களுக்கு கோரிக்கைகள் என்கிற நகலையும் தயாரித்தனர். பிரிக்கமுடியாத ஒற்றை ஜெர்மானிய குடியரசு என முழங்கினர். 21 வயது நிறைந்த அனைவருக்கும் வாக்குரிமை, நில உடைமை ஒழிப்பு, விவாசாயிகளை சுமைகளிலிருந்து விடுவித்தல், அரச குடும்ப சொத்துக்கள் பறிமுதல், தனியார் வங்கிகளை ஒழித்து அரசு வங்கிகள், தாது சுரங்கம்- குவாரிகள் அரசு உடைமை, தகவல் போக்குவரத்து அரசுடைமை, அனைவருக்கும் கல்வி என்பன போன்றவை கோரிக்கைகள். பாட்டளிவர்க்க புரட்சிக்கு இவை முகவுரை என்றனர். கலோனை மையமாக வைத்து அவர்கள் செயல்பட்டனர். அங்கு ஜனநாயக சொசைட்டியினருடன் சேர்ந்து மார்க்ஸ் பணியாற்றிவந்தார்.
புதிய ரெயினிஷ் ஜெய்டுங்கை 1848ல் கடும் போராட்டங்களுக்கு பின்னர் கொணர்ந்தனர். எங்கெல்ஸ் நடமாடும் என்சைக்ளோபீடியா என அழைக்கப்பட்டார். பத்ரிக்கைக்காக பெரும் நேரம் ஒதுக்கி செயல்பட்டார். கொள்கை பிரச்சனையெனில் முடிவில் மார்க்சின் சர்வாதிகாரமே வெல்லும் என எங்கெல்ஸ் ஆசிரியர் குழு விவாத பதிவுதனை செய்கிறார். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் எழுச்சி குறித்து எங்கெல்ஸ் எழுதினார். அப்பகுதியில் காட்சால்க் எனும் தலைவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
1848ல் பிரான்ஸ் புரட்சியாளர்களின் தோல்வி புரட்சிகர இயக்கங்களுக்கு பல பகுதிகளிலும் பின்னடைவை தந்தது. பாரிஸ் இன்ஸ்ரக்‌ஷன் குறித்து எங்கெல்ஸ் எழுதினார். உரிங்டன் எனும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பொதுக்கூட்டம் ஒன்றிற்கு செப்டம்பர் 17, 1848ல் ஏற்படு செய்யப்பட்டது. மார்க்ஸ் பங்கேற்கவில்லை. எங்கெல்ஸ் ஜனநாயக சோசலிச செங்குடியரசு என உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்று பிரஷ்ய அரசிற்கு எதிராக பேசிய ஷாப்பர் போன்றவர்கள் கைதாகினர். எங்கெல்ஸ் தப்பி சென்றார். பாரிஸ் வழியே நடந்தே 15 நாட்கள் ஜெனிவா சென்றார். அப்போது அவருக்கு வயது 28

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு