https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, July 20, 2017

எங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes part 5

V
லண்டனில் குடியேறிய மார்க்ஸ் அங்கிருந்து தனது பணிகளை தொடர்ந்தார். எங்கெல்ஸ் தந்தையின் ஆலைப்பணிக்காக மான்செஸ்டர் சென்றார். I am glad that you have left and are well on the way to becoming a great Cotton Lord  என ஜென்னி மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு எழுதினார். 1850-70ல் மார்க்ஸ் குடும்பத்தை காத்திட நிதி உதவி செய்வதற்கு மான்செஸ்டர் காலம் அவருக்கு அமைந்தது.  மார்க்சின் ’செகண்ட் பிடில் நிலையை’ அவர் மனம் உவந்து ஏற்றார். புரட்சிகர பல குழுக்களின் அனுபவங்கள் பற்றி எங்கெல்ஸ் வருத்தமான பதிவை தந்தார். Party groups of various shades formed, accuse each other having driven card to the mud... disappointment follows disappointment.. recriminations accumulate and result in general bickering என்கிற வகையில் அப்பதிவு இருந்தது.
கம்யூனிஸ்ட் லீகில் கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டது. ஷாப்பர் முதலானவர்களின் அவசரத்தை tin pot terrorism and a premature threat tothe communist cause  என மார்க்ஸ் எங்கெல்ஸ் கருதினர். அரசியல் தனிமைவாசம் என்பது எங்கெல்சை உறுத்தியது. எங்களுக்கு எக்கட்சியின் ஆதரவோ விளம்பரமோ தேவையில்லை என அவர் கோபப்பட்டார். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீதான கலோன் வ்ழக்கு ஒன்று 1850 அக்டோபர்- நவம்பரில் நடந்தது. நவம்பர் 17, 1850ல் கம்யூனிஸ்ட் லீக் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் முடிவிற்கு வந்தன.
1850-70 ஆகிய 20 ஆண்டுகள் எங்கெல்ஸ் மான்செஸ்டரில், மார்க்ஸ் லண்டனில் இருந்தாலும் அவர்கள் நெருங்கிய தொடர்புகளை, விவாதங்களை வைத்திருந்தனர். 1851ல் மார்க்ஸ் நியுயார்க் ட்ரிப்யூனுக்கு ஆரம்பத்தில் எழுதிய பல கட்டுரைகளை எங்கெல்ஸ்தான் மொழியாக்கம் செய்து அனுப்பிவந்தார். பின்னர் மார்க்ஸ் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று தானே எழுத துவங்கினார். மார்க்சின் கட்டுரைகளில் மூன்றில் ஒருபகுதி எங்கெல்ஸால் முயற்சிக்கப்பட்டவை. எங்கெல்ஸ் இராணுவம், போர்க்க்கலை குறித்து ஏராளம் எழுதிவந்தார். இதனால் மார்க்ஸ் குடும்பத்தில் அவரது பெண்கள் அவரை ’ஜெனரல்’ என அழைத்தனர். இந்தியா குறித்தும், சீனா குறித்தும் கூட எங்கெல்ஸ் எழுதியுள்ளார். 1860களின் துவக்கத்தில் இராணுவ இதழுக்கு எழுதக்கூடிய அளவு போர்முறைகள் பற்றி அவர் கற்றிருந்தார். புரட்சிகரவாதிகளின் முதல் இராணுவ கொள்கையாளர் என அவர் கருதப்பட்டார்.
எங்கெல்ஸால் 12 மொழிகளில் எழுதமுடிந்தது. தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட ஒரே கடிதத்தில் பல மொழிகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கும் வகையில் எழுதினார். அவரால் 20 மொழிகளில் படிக்க முடிந்தது. இந்த மொழிப்பயிற்சி பல நாடுகளின் புரட்சியாளர்களை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தது. அதே நேரத்தில் புரட்சியாளர்கள் இயக்கத்தில் ஏற்படும் கருத்துவேறுபாடுகளை திறம்பட கையாளவும் அவரால் முடிந்தது. லாசேல் போன்றவர்கள் பிஸ்மார்க்குடன் நெருங்கியதை மார்க்ஸ்- எங்கெல்ஸ் கண்டனர். வாக்குரிமை என்பதுடன் அவர் நிறுத்திக்கொள்கிறார்- சமரசம் ஆகிறார் என்கிற கருத்து இருவருக்கும் ஏற்பட்டது. 1864ல் லாசேல் மறைந்தாலும் அவரது தொண்டர்கள் செல்வாக்கு எதிர்த்து போராட வேண்டியிருந்தது.
முதலாவது அகிலம் 1864ல் லண்டனில் அமைக்கப்பட்டது. அதன் துவக்க நிகழ்வு செப் 28 அன்று நடந்தது. மார்க்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். லஸ்ஸேல் எதிர் போராட்டத்தில் நின்ற லீப்னெக்ட், ஆகஸ்ட் பெபல் இருவரும் ஜெர்மன் நாடாளுமன்றம் சென்றனர். ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தின் மூலவர் மார்க்சா- லஸ்ஸேலா என்கிற விவாதத்தில் மார்க்சின் மகத்தான பங்களிப்பை எங்கெல்ஸ் எடுத்துக்காட்டி நிறுவினார். 1867ல் கடுமையான 20 ஆண்டுகளின் உழைப்பிற்கு பின்னர் மகத்தான படைப்பான மூலதனம் வெளிவந்தது. அகிலம் இப்படைப்பை பாராட்டி தீர்மானம் போட்டது. எங்கெல்சின் தியாகம் இல்லையெனில் மூலதனம் இல்லை என் மார்க்ஸ் வெளிப்படையாக எங்கெல்ஸ் குறித்த பெருமிதத்தை பதிவு செய்தார்.
முதலாளித்துவ தீங்குகள், உற்பத்தி அராஜகம், பொருளாதார நெருக்கடிகள், விவசாயம் அழிவு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்ஸ் விரிவாக பேசினார். உபரிமதிப்பு என்கிற கருத்தாக்கத்தை உலகிற்கு அவர் அளித்தார். மூலதன சுரண்டலின் இரகசிய முடிச்சை மார்க்ஸ் அவிழ்த்ததாக அவரின் நெருங்கிய சகாக்கள் பெருமிதம் கொண்டனர். முதலாளித்தும் வீழ்த்தப்படக்கூடிய ஒன்றுதான் - பாட்டாளிவர்க்கம் அதை சாதிக்க இயலும் என்கிற நம்பிக்கை முதன்முதலாக முன்மொழியப்பட்டது. பாட்டாளிகளின் பெரும் ஆயுதமாக மார்க்ஸ் மாறினார். மார்க்சியம் தனது வலுவான அடித்தளத்தை மூலதனம் மூலம் உலகில் போட்டது. வழக்கம்போல் உதாசீனம் செய்து அதை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பு நடந்தது. ஆனால் எங்கெல்ஸ் பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு பல்வேறு புனைபெயர்களில் மூலதனத்தை தாக்கி எழுதும் கட்டுரைகளை கொணர்ந்து அதற்கு விவாத பரப்பை உருவாக்கினார். மூலதனம் குறித்து எப்படியாவது பேசவைத்துவிடுவேன் என்கிற பெரும் முயற்சியில் எங்கெல்ஸ் இறங்கினார்.
        Engels's Manchester Mill

எங்கெல்ஸ் மான்செஸ்டர் பணியில் கவனம் செலுத்தவேண்டிய சூழல் இருந்தது.. அவரது தந்தை 1864ல் மறைந்தபிறகு ஆலையின் பங்குதாரராக ஆனார். அங்கு வில்ஹெல்ம் உல்ப், சாமுவேல்மூர், ஸ்கார்லெம்மர் போன்றவர்களும், சார்ட்டிஸ்ட்களும் தோழர்களாயினர். அங்கு மேரிபர்ன்ஸ் உடன் சேர்ந்து வாழ்ந்தார் எங்கெல்ஸ்.. ஜனவரி 6, 1863ல் பர்ன்ஸ் மறைந்ததை பெரும் இழப்பாக எங்கெல்ஸ் உணர்ந்தார். தனது இளமை புதையுண்டதாக எழுதினார் எங்கெல்ஸ். வாழ்க்கை தோழியின் மரணம் குறித்து அவர் மார்க்சிற்கு தெரிவித்தார்.
 Dear Moor
Mary is dead. Last night he went to bed early and, when Lizzy wanted to go to bed shortly before midnight, she found she had already died. Quite suddenly. Heart failure or an apoplectic stroke. I wasn't told this morning, on Monday evening she was still quite well. I simply can't convey what I feel. The poor girl loved me with all her heart. எனற கடிதத்தை எங்கெல்ஸ் மார்க்சிற்கு எழுதினார்.
இந்த நேரத்தில் மார்க்சின் பதில் கடிதம் அவருக்கு போதிய ஆறுதலை தராமல் மனம் புண்படுத்தவைத்துவிட்டது. அதை சுட்டிக்காட்டி எங்கெல்ஸ் you thought it a fit moment to assert the superiority of your dispassionate turn of mind என்று எழுதினார். மார்க்ஸ் மிகவும் நேசத்துடன் கடிதம் எழுத நண்பர்கள் மனதால் ஆரத்தழுவும் கடிதங்களை எழுதிக்கொண்டனர். அடுத்து மேரிபர்ன்ஸ் சகோதரி லிஸ்ஸியுடன் எங்கெல்ஸ் வாழத்துவங்கினார். பின்னர் எழுதிய கடிதங்களில் மேடம் லிஸ்ஸி என விளித்து விசாரித்து எழுதலானார் மார்க்ஸ். மார்க்சின் மகள் எலியனார் எனும் டஸ்ஸிக்கு அவர்கள் அங்கிள்- ஆண்ட்டி..  அடுத்து அவரது உற்ற நண்பர் உல்ப் 1864ல் மரணமடைந்தார். உல்ப் தனது மறைவின்போது மார்க்சிற்கு நிதியை ஏற்பாடு செய்து மறைந்திருந்தார். அவருக்குத்தான் மார்க்ஸ் தனது மூலதனம் முதல் தொகுதியை அர்ப்பணித்திருந்தார்.

தனது மான்செஸ்டர் வியாபார உலகிலிருந்து விடுபட எங்கெல்ஸ் விழைந்தார். ஜூலை1, 1869 தான் சுதந்திர மனிதனாகிவிட்டதாக அறிவிக்கிறார். சுமையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் மார்க்சின் கடைசி மகள் எலியனார் உட்பட நண்பர்களுடன் கொண்டாடுகிறார். பெரும் ஷாம்பெயின் பார்ட்டியில் திளைத்தோம் என்கிறார் எலியனார். தனக்கு 10 வயது குறைந்துவிட்டது- மேலும் அதிகம் இனி உழைக்கலாம் என்றார் எங்கெல்ஸ். லிஸ்ஸி பர்ன்ஸ், எலியனாருடன் அயர்லாந்த் சுற்றுப்பயணம் செல்கிறார். அயர்லாந்த் பிரச்சனைகளை நேரில் கற்கிறார். வரலாற்று பின்புலத்துடன் கற்கவேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்ததால் இப்பயணத்தை மேற்கொண்டார். அய்ரிஷ் விடுதலைக்கு இங்கிலீஷ் தொழிலாளிவர்க்கம் முழுமையாக நிற்கவேண்டும் என்கிற அறிவுரையை தந்தார். மேரிபர்ன்ஸ் இருந்தபோது சில அய்ரிஷ் போராளிகளை தன் வீட்டில் எங்கெல்ஸ் தங்க வைத்திருந்தார். மார்க்சின் முதல் பெண் ஜென்னி ’சின்பின்’ அய்ரிஷ் இயக்கம் பற்றி எழுதினார் என்பதை அறிந்த மேரிபர்ன்ஸ் பெருமிதம் அடைந்ததாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால் சின் பின் இயக்கத்தின் சதி நடவடிக்கைகள் உதவாது என்கிற கருத்து எங்கெல்சிடம் இருந்தது.

No comments:

Post a Comment