VII
ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சி
சார்பில் பேசப்பட்ட தவறுகளை சரி செய்திடும்
கடமையும் எங்கெல்ஸ்க்கு வந்தது. முதல் மாநாட்டிலேயே 1880ல் சிலர் வெளியேற்றப்பட்டனர்.
1882ல் அது உடைவை சந்தித்தது. எங்கெல்ஸ் இந்த அனுபவத்திலிருந்து எழுதினார். It seems that every workers party of big country can develop only thro internal
struggle, which accords with the law of development in general. பொதுவாக தியரி என்பதில் தொழிலாளர் விருப்பத்துடன்
இருப்பதில்லை என்பதை மார்க்ஸ்- எங்கெல்ஸ் கண்டுணர்ந்தனர். 1881ல் லேபர் ஸ்டாண்டர்டில்
எங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதினார். Class wage slave- Is this to be final result
of all this great sufferings and sacrifices? Is this to remain ever the highest
aim of British working Class- working men? என்கிற வருத்தம் தோய்ந்த கேள்விகளை எங்கெல்ஸ்
எழுப்பினார். லிபரல் கட்சிகளின் ஒட்டுப்போல் தொழிலாளர் இயக்கம் இருப்பதை அவர் விமர்சித்தார்.
முதலாளிகள் இல்லாமல் நிறுவனங்களை நடத்தமுடியும் என்றார்.
எங்கெல்ஸ் இயற்கையின் இயக்கவியல்
என்கிற புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்தினார். ஆனால் அப்புத்தகம் 1925ல் சோவியத்யூனியனில்தான்
வெளியானது. 1883 ல் மார்க்சின் மரணத்தை தொடர்ந்து
மார்க்ஸ் விட்டு சென்றவைகளை முறைப்படுத்தும்
பெரும்பணியை அவர் ஏற்றுக்கொண்டார். மூலதன எழுத்துக்களை சரிபார்த்து வெளிக்கொணர தனது
63ஆம் வயதிலும் களைப்பின்றி செயல்பட்டார். நோய் தாக்குதலால் ஆறுமாத காலம் அவர் படுக்க நேர்ந்தது.
அப்போதும் உதவியாளர் மூலம் தனது பணிகளை விடாமல் செய்தார். மார்க்சின் கையெழுத்தையும்
அவர் சொல்லும் பொருளையும் புரிந்துகொள்ளும் தோழன்
என்கிற வகையில் இப்பணியில் அவர் முழுமையாக் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. Engels who could decipher Marx's
meaning என்பது ஏற்கப்பட்டது.
எங்கெல்ஸ் காபிடல் வால்யூம் 2யை மே 1885ல் வெளியிட்டார்.
1894ல் மூன்றாவது வால்யூம் வெளியிடப்பட்டது. அவரின் சார்ட்டிஸ் இயக்க நண்பர் ஜூலியன்
ஹார்னே எங்கெல்சின் தன்னலமற்ற உழைப்பை பாராட்டினார். Never I think, atleast in modern times, has
nay man found so faithful so devoted a freind and champion, as Marx has found
in you என்பது பாராட்டில் இருந்தது. மார்கன் பற்றி சில குறிப்புகளை
மார்க்ஸ் எழுதிவைத்தது எங்கெல்ஸ் பார்வைக்கு வந்தது, ஆகஸ்ட் பெபல் பெண்கள்- நேற்று,
இன்று நாளை எழுதினார். எங்கெல்ஸ் குடும்பம், தனிசொத்து, அரசு எழுதினார்.
Engels at His London House
மார்க்சின் வார்த்தை ஒவ்வொன்றும்
தங்கத்தைவிட ஜாக்கிரதையாக கையாளக்கூடியவை என எங்கெல்ஸ் வியந்து தெரிவித்தார். மார்க்சியத்தின் அடிப்படைகளை நிறுவுவதில் எனக்கு பங்களிப்பு
இருந்தாலும் மார்க்ஸ்தான் அதற்கான முதன்மை பாத்திரம் வகித்தவர். நாங்கள் புத்திசாலிகள்..
ஆனால் மார்க்ஸ் ஜீனியஸ் என்றார் எங்கெல்ஸ்.
லுதிவிக்பாயர்பாக்- ஜெர்மன் செவ்வியல்
தத்துவ முடிவு என்கிற ஆக்கத்தை 1888ல் எங்கெல்ஸ் எழுதினார். நியு ஜெயிட் வெளியிட்டுவந்தது.
வரலாற்று பொருள்முதல்வாதம் கொச்சைப்படுத்தப்படுவதை விளக்கி 1890ல் ஜோசப் பிளாக் அவர்களுக்கு
கடிதம் எழுதினார். The ulitimately
determining element in history is the production and reproduction of real
life.. more than this neither Marx nor I have ever asserted என்கிற விளக்கம் எங்கெல்ஸால் தரப்பட்டது. ஜெர்மன் பொருளாதார அறிஞர் வெர்னர் சோம்பார்ட்டிடம் எங்கெல்ஸ்
தன் மறைவிற்கு சில மாதங்களுக்கு முன்பு கூறினார் Marx's whole way of thinking is
not so much a doctrine as method. It provides, not so much ready made dogmas as
aids to further investigation and the method for such investigation
1884ல் சிட்னி வெப் போன்ற அறிவுஜீவிகளால் பாபியன்
சொசைட்டி நிறுவப்பட்டது. அக்கட்சி லிபரல் கட்சி போன்றதுதான் என எங்கெல்ஸ் கருதியதாக
எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஸ்டெப்பனோவா கூறுகிறார்.
பிரஞ்சு தொழிலாளர் கட்சி சார்பில்
ஜூலை 14 1889ல் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக அழைப்பு விடப்பட்டது. இரண்டாவது
அகிலம் சந்தர்ப்பவாதம் எதிர்த்து போரிடாமல் நிலைபெறமுடியாது என எங்கெல்ஸ் கருதினார்.
மே 1, 1890 முதல் சர்வதேச மே தினம் என்பதை கூட்டம் அறைகூவலாக தந்தது. 1891, 93 அமர்வுகளில்
இடது அனார்க்கிசம் எதிர்த்தும் கடுமையாக போராடவேண்டிய தேவை இருந்தது. ஜூரிச்சில் எங்கெல்ஸ் கெளரவிக்கப்பட்டார். சோசலிசம் என்பதற்காக 50 ஆண்டுகள்
உழைத்துள்ளோம். எனக்கு பரிசோ பாராட்டோ வேண்டாம் உழைப்பவரின் திரட்சியை, அவர்கள் அச்சமற்று
நிற்பதையே நான் விழைகிறேன் என எங்கெல்ஸ் பேசினார்.
விவசாய பிரச்சனைகள் குறித்து பல்வேறு
சோசலிச தலைவர்களின் கருத்துக்களுக்கு தெளிவு தர
பிரான்ஸ், ஜெர்மனியில் விவசாய பிரச்சனைகள் என்பதை 1894ல் எங்கெல்ஸ் எழுதினார். It is just as evident that when we are in
possession of state power, we shall not even think of forcibly expropriating
small peasants( with or without compensation) as we shall have to so in the
case of big land owners. Our task relating to small peasanats consists, in the
first place, in effecting a transition
of his private enterprises and private possession to cooperative ones, not
forcibly by dint of example and the proffer of social assistance for this
purpose என்று எழுதினார்.விவசாய கொள்கை- நடைமுறைக்கு
இக்கட்டுரை மிக முக்கியமானது என்கிறார் ஸ்டெப்பனோவா.
சோசியல் ஜனநாயக கட்சித் தலைவர்கள்
காட்ஸ்கி, பெர்ன்ஸ்டைன், லீப்னெக்ட் போன்றவர்களைவிட ஆகஸ்ட் பெபல் மீது சற்றுக் கூடுதல்
நம்பிக்கை எங்கெல்ஸ்க்கு இருந்தது. ஆனாலும் பெபலும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை உறுதியாக
எதிர்த்து போராடவில்லை என்கிற மதிப்பீடும் இருந்தது. கோதா திட்டம் மீதான விமர்சனத்தை
நியு ஜெயிட்டில் வெளியிடக்கோரி எங்கெல்ஸ் காட்ஸ்கியை பணித்தார். ஒருவேளை தயக்கம் இருந்தால்
அதை ஆஸ்திரியா தலைவர் விக்டர் அட்லருக்கு அனுப்பிவிடுங்கள் என எங்கெல்ஸ் கூறியிருந்தார்.
ஆனால் காட்ஸ்கி தனது இதழில் கோதா திட்ட விமர்சனத்திற்கு மாற்று என்பதை வெளியிட்டார்.
லீப்னெக்ட் கருத்தான நாங்கள் லசேல்வாதிகளுமல்லர்- மார்க்சியர்களுமல்லர் சோசியல் டெமாக்ரட்கள் என்கிற கருத்தும் அதில் வெளியானது.
நாடாளுமன்றம் ரீச்ஸ்டாக்கில் அக்கட்சியின் பிரதிநிதி கிரில்லென்பெர்கர் என்பார் மார்க்சின்
பாட்டாளிவர்க்க சர்வதேசியம் என்பதில் எங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை என்பதை தெரிவித்தார்.
இந்த சூழலில் பிரான்சில் வர்க்க
போராட்டங்கள் என்பதற்கு எங்கெல்ஸ் அறிமுகவுரை ஒன்றை தந்தார். பாரிஸ் கம்யூன் அனுபவம் do away all old repressive machinery
previously used against and safeguard itself against its own deputies by
declaring them all, subject to recall at any moment என்கிற தெளிவு தேவை என்றார் எங்கெல்ஸ். ஜெர்மனியில்
அமைதியான சட்டரீதியான சோசலிச மாற்றம் என்பதற்கான வாய்ப்பில்லை என்றார். 1888ல் மார்க்சின்
மகள் எலியனாருடன் அவர் அமெரிக்கா சென்றார். பின்னர் நண்பர்களுடன் நார்வே சென்றார். பல்வேறு நாடுகளின் இயக்கங்களுடன் தொடர்பை வைத்திருந்தார்.
லண்டனில் அவர் வீட்டிற்கு வரும் தபால்காரர் தினமும் கட்டுக்கட்டாக பத்ரிக்கைகளை கொணர்ந்து
சேர்ப்பார். அனைத்தையும் பார்க்க நேரம் ஒதுக்கி எதிர்வினையாற்றவும் செய்தார் எங்கெல்ஸ்.
பால் லபார்க் அவரைப்பற்றி எழுதும்போது,
எங்கெல்ஸ் தனது தேவைகளை மிகவும் குறைத்துக்கொண்டு சிக்கனமாகிவிட்டார். ஆனால் கட்சிக்கு,
தோழர்களுக்கு, பத்ரிக்கை வாங்குவதற்கு அவர் தாராளம் செலவு செய்தார். அவரிடம் அவ்வளவு
படிக்க வந்து கொண்டிருந்தாலும் படிப்பறை ஒழுங்காக இருக்கும். கீழே துண்டு பேப்பர்கூட
கிடக்காது. அவர் வீட்டில் பல மொழிகளில் விவாதங்கள் நடந்துகொண்டேயிருக்கும் என்றார். நானோ மார்க்சோ தங்களை
முன்வைத்துக்கொள்ளாமலே (no public
demonstration) இருக்க விரும்பினோம் என்றார் எங்கெல்ஸ். தனது 70 ஆம் வயதில் குவிந்த
பாராட்டுகளுக்கு தனது பதிலாக மார்க்சின் புகழை நான் அறுவடை செய்துகொள்வது விதியானது
என்றார். நான் போராடமுடியாதவனாக என்று ஆகிறேனோ அன்று நான் சாகவேண்டியவனாகிறேன் என்றார்.
Comments
Post a Comment