Skip to main content

எங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 4

IV
ரெயினிஷ் பத்ரிக்கையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் தனது இராணுவ அறிவு குறித்த அம்சங்களை எங்கெல்ஸ் பரிமாறிக்கொண்டார். ஆயுதப்போராட்டம் என அவர்கள் எழுதிய கட்டுரைகளால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டனர். பிராங்பர்ட்டை கைப்பற்ற ராணுவத்திட்டம் என எங்கெல்ஸ் எழுதியதும் பிரச்சனையானது. ரைன் பிரதேச எழுச்சியில் 500க்கும் மேற்பட்டவர்க்கு ஆயுத பயிற்சி முகாமும் எங்கெல்ஸ் உதவியுடன் நடந்ததாக அறியமுடிகிறது. சோசலிஸ்ட் தொழிலாளர்கள்தான் தன்னை கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆட்படாமல் காத்தனர் என எங்கெல்ஸ் பதிவு செய்துள்ளார். பத்த்ரிக்கையின் எடிட்டோரியல் அலுவலகத்தில் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்த செய்தியும் வெளியானது. நிலைமைகள் மோசமாகி மே 19, 1849 உடன் பத்ரிக்கை நிறுத்தப்பட்டது. மார்க்ஸ் பாரிஸ் செல்ல நேர்ந்தது
பிரஷ்யாவில் முடியாட்சி பலவீனப்பட்ட நிலை உருவானது. மார்க்ஸ் எங்கெல்ஸ் நிலைமைகள் முற்றட்டும் என கருதினர். கோட்ஸால்க் எழுச்சி ஒடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1848 தேர்தலில் சோசலிஸ்ட்கள் 876க்கு 100 தொகுதிகளைத்தான் கைப்பற்றமுடிந்தது. கன்சர்வேடிவ்களின் பிடி மீண்டும் ஓங்கியது. 1849 மே மாதம் எல்பெர்பீல்ட்டில் ஆயுத எழுச்சி ஏற்பட்டு மேயர் ஓடவேண்டிவந்தது. எங்கெல்ஸ் தலைமை என்றனர்.  ரெட் ரிபப்ளிக் என்றனர் . ஹாஸ்பீலர் பாலத்தில் ஆயுதங்தாங்கிய குழுவுடன் மகன் நிற்கிறான் என்கிற செய்தி எங்கெல்ஸ் தந்தையை எட்டியது. குழுவினர் சிலர் எங்கெல்ஸ் கனவு அதிகமாக காண்கிறார் என விமர்சித்தனர். செங்கொடி ஏற்றியிருக்கக்கூடாது என்றனர். நிலைமை விவரீதமாகி கமிட்டி கூடி அவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றாலும் அவரது தொடர் இருப்பு இயக்கத்திற்கு நல்லதல்ல என சொல்லி அவர் வெளியேற வேண்டுகோள் விடப்பட்டது. சில தொழிலாளர்கள் எங்கள் உயிரைவிட்டு எங்கெல்சை காப்போம் என சொல்லாமல் இல்லை. சுவிட்ஜர்லாந்த் சென்றார் எங்கெல்ஸ். அங்கு சென்று மார்க்சின் அறிவுரைப்படி  campaign for German Imperial constitution  அனுபவத்தை எழுதினார்..
பாரிசிலிருந்தும் மார்க்ஸ் வெளியேற்றப்பட்டு ஆகஸ்ட் 1849ல் லண்டன் செல்வதாக எங்கெல்ஸ்க்கு அவர் செய்தி அனுப்பினார். எங்கெல்ஸையும் லண்டன் வர வேண்டுகோள் விடுத்தார். எங்கெல்ஸ் சுவிட்ஜர்லாந்திலிருந்து இத்தாலி வழியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார். 1849 நவம்பரில் எங்கெல்ஸ் வந்தவுடன் லண்டன் கம்யூனிஸ்ட் லீகை சீரமைத்தனர். பல புரட்சிகர குழுக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்திக்கொண்டர் எங்கெல்ஸ். 1850ல் ஷாப்பருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இக்காலத்தில் பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள், 18வது புருமர் போன்றவற்றை மார்க்ஸ் எழுதினார். எங்கெல்ஸ் ஜெர்மன் இம்பீரியல் சட்டம், விவசாய போர்கள், புரட்சி- எதிர்புரட்சி குறித்து எழுதினார். இக்காலத்தில்தான் அவர்களிடம் மார்க்சியம் என சொல்லத்தகுந்த ஒருங்கிணைந்த கோட்பாட்டாக்கங்கள் உருவானதாக ஸ்டெப்பானோவா தெரிவிக்கிறார்.
1848ல் பாரிசில் 3.5 லட்சம் தொழிலாளர் இருந்தனர்.  இதில் 20 சதம் ஜெர்மானியர்கள். அவர்கள் தங்கிய சில  இடங்கள் ஒரு பிரஞ்சு வார்த்தைக் கூட இல்லாமல் இருந்தன. அப்படி ஜெர்மானியர்கள் மட்டுமாக சேர்ந்து தங்கியிருந்தனர். வந்தேறி ஜெர்மானியர்கள் குறித்து பிரஷ்யா உளவு கேட்டுக்கொண்டேயிருந்தது. மார்க்ஸ் பாரிசிலிருந்து பிரான்ஸ் அரசால் வெளியேற்றப்பட பிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக இருந்தது.
பாரிசில் சோசலிஸ்ட்கள், புரட்சிகரவாதிகளுடன் எங்கெல்ஸ் விவாதிப்பது, கிளப்களுக்கு செல்வது, பல பெண்களுடன் செக்ஸ் கொள்வது என்பதை ஹண்ட் தனது புத்தகத்தில் பதிவிடுகிறார். எங்கெல்ஸை பாரிஸ் போலீஸ் கண்காணித்து வந்ததையும் குறிப்பிடுகிறார். செக்ஸ்க்கு செலவிடுவது குறித்து அவர் குற்றவுணர்வற்றவராக இருந்தார் என்கிற செய்தியும் நமக்கு தரப்படுகிறது. If I had an income of 5000 francs I would do nothing but work and amuse myself with women until I went to pieces. If there were no French women, life would not be worth living. But so long as there are grisettes, well and good என்று அவர் மார்க்சிற்கு எழுதினார். grisettes என்றால் young woman combining part-time prostitution with some other occupation எனப் பொருள். மார்க்ஸ் எங்கெல்ஸ் தோழராக இருந்த மோசஸ் ஹெஸ் என்பவரின் துணைவிக்கும் எங்கெல்ஸ்க்கும் உறவு என்கிற சர்ச்சையும் ஏற்பட்டு அவர்கள் நட்பு முறிந்ததாகவும் செய்தி தரப்படுகிறது. எங்கெல்ஸ்க்கு ஒருதாரமணம், பூர்ஷ்வா மணவாழ்க்கை நெறிகள் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தது..
லீகில் எங்கெல்ஸ்க்கு மாற்றாக மோசஸ்ஹெஸ் குறிப்பும் வந்தது, மார்க்ஸ் உடன் எங்கெல்ஸ் கலந்து பேசினார். அக்டோபர் 1847ல் ’பிரின்ஸ்பில்ஸ் ஆப் கம்யூனிசம்’ என்கிற நகலை எழுதினார் எங்கெல்ஸ். It abolishes private property and educates children communally, destroying the foundation of hitherto existing marriage- the dependence thro private property of the wife upon husaband and children upon parents  என அதில் எங்கெல்ஸ் குறிப்பிட்டிருந்தார், 1914வரை  principles of Communism  வெளியாகவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸின் வரலாற்று சிறப்புமிக்க கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு அது அடிப்படையாக இருந்தது என்லாம். நாம் எழுதுவதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கை- மானிபெஸ்டோ என பெயரிடலாம் எனவும் அவர் மார்க்சிற்கு பரிந்துரைத்து இருந்தார்.


1850ல் ரெட் ரிபப்ளிகனில் மானிபெஸ்டோவின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்ததை சில நூறு உறுப்பினர்கள் படித்திருக்கலாம். ஆனால் அப்பிரசுரம் அன்று பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இங்கிலாந்து தொழிலாளர்களிடம்  செல்வாக்கும் பெறவில்லை. பிரான்சில் முடியாட்சி தகர்ந்தது viva la republique  என எங்கெல்ஸ் 1848 மார்ச்சில் மகிழ்ச்சியுடன் எழுதினார். பிரஞ்சு எழுச்சி அய்ரோப்பாவை பற்றும் என அவர் கருதினார்.  பிரான்ஸ் அரசர் லூயி தப்பி ஓடவேண்டியதானது. பிரஸ்ஸல்சில் பிரான்ஸ் எழுச்சி பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசர் நடவடிக்கை எடுத்தார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு