Skip to main content

தோழர் அஜாய் கோஷ் எழுத்தொன்றின் 70 ஆண்டுகள்

             தோழர் அஜாய் கோஷ் எழுத்தொன்றின் 70 ஆண்டுகள்

தோழர் அஜாய்கோஷ் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருந்த 1952 ல் some of  our Main weaknesses  என்ற தலைப்பில் சிறு பிரசுரம் ஒன்றை (16 பக்கங்கள்) எழுதியிருந்தார். அந்த நேரத்தில் வந்த வெளிப்படையான எழுத்தாக அதை படிக்கும்போது உணரமுடியும். அவரது 16 பக்க அறிக்கையின் சாரம்சான அம்சங்கள் மிகச் சுருக்கமாக இங்கு தரப்பட்டுள்ளது.



 விடுதலை அடைந்த 5 ஆண்டுகளில் ஆளும் காங்கிரஸ் எதிர்த்த போராட்டங்களில் புதிய  புதிய பகுதியினர் சேர்ந்து வருகின்றனர். தேசிய முதலாளிகள் கூட அதிருப்தி கொண்டுள்ளனர். மக்கள் எழுச்சியுடன் தீவிரமாக போராடுகின்றனர்.

 காங்கிரசில் மோதல்கள் கூர்மையாகியுள்ளது. பகைவர்கள் பலம் இழந்துவிட்டனர் என எண்ணக்கூடாது. காங்கிரஸ் மீது அவர்களுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி நாட்டின் பிற்போக்கு சக்திகளை வளர்த்து விடுவதிலும் பகைவர் இருக்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும், வாக்கு பெட்டியின் மீது மாயை பரப்பப்படுதலிலும் , பிரஜா சோசலிஸ்ட்களை எதிர்கட்சியாக பலப்படுத்துவதிலும் நமது பகைவரின் பலம் அடங்கியிருக்கிறது.

மக்கள் திரள் இயக்கத்தை விஸ்தரிப்பது- அதற்கான கடமைகளில் கவனம் என்பது கட்சியின் முக்கிய பொறுப்பாகியுள்ளது.

·        உடனடி கோரிக்கைகளுக்காக மக்களை நாம் வழிநடத்த வேண்டும்.

·        விவசாயி, தொழிலாளி, இளைஞர், மாணவர், மத்திய தர வர்க்கம், கலாச்சாரத்துறையினர் என பலதரப்பட்டவர்களை நாம் ஒருங்கு திரட்டவேண்டும்.

·        மக்களின் தேவைகளை சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் எதிரொலிக்க வேண்டும். தேர்தலில் பங்கேற்கவேண்டும்.

·        அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்-

·        பிற எதிர்கட்சிகளை யெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

·        தேசிய, உலகளாவிய முக்கிய அம்சங்கள் குறித்து வெளியீடுகளைக் கொணரவேண்டும்.

·        தேச அமைதி- உலக அமைதிக்கான இயக்கங்களைக் கட்ட வேண்டும்.

 மேற்சொன்ன வேலைகளை கட்சிகளின் அனைத்து பகுதியினருடனும் சேர்ந்துசெய்திடவேண்டும்.

 கம்யூனிஸ்ட் கட்சி ஏழை எளியவர்களுக்காக நிற்கிறது என்பதை மக்கள் ஏற்றுள்ளனர். சிலர் தங்களை திரட்ட வாருங்கள் என்று கூட அழைக்கிறார்கள்.

 மேற்சொன்ன கடமைகளில் சிறு அளவாவது நடைபெற கேடர்கள் அவசியமாகிறது. எவ்வளவு உறுப்பினர்கள் என்கிற எண்ணிக்கையால் மட்டும் கட்சி வலுவானதாகிவிடாது. அதன்குவாலிட்டியில் தான் அது வலிமை பெறுகிறது. அவர்களின் கோட்பாட்டு பயிற்சியில்தான் தன்னை வலுப்படுத்திக்கொள்கிறது.

 நமக்கு வலுவான போராளிகள், கட்சி பத்திரிகையாளர்கள், சித்தாந்தரீதியாக வளர்ந்த, அரசியலில் பயிற்சி நிறைந்த, தலைமைக்கும் முன்முயற்சிக்கும் தகுதி வாய்ந்த கேடர்கள் தேவைப்படுகிறது. அவர்கள் கட்சியின் பொதுவான வழிகாட்டலை அந்த அந்தப் பகுதியில் இலகுவான வழிகளில் உகந்தவாறு அப்பகுதி மக்கள் பிரிவினருக்கு எடுத்துச் செல்பவர்களாக இருக்க வேண்டும். ஆனல் நம்மிடம் இப்படிப்பட்ட கேடர்கள் மிகவும் குறைவு. இருப்பவர்களுக்கு வேலை அதிகம். இதன் விளைவாக நாம் செய்யவேண்டிய எண்ணற்ற செயல்களை நம்மால் செய்யமுடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.

 தேவைப்படுவதெல்லாம் பலமுனைகளில் சிறப்பாக தேர்ச்சியாக செயல்படத்தகுந்த வலுவான அமைப்புகள்- கேடர்கள்தான். இந்த இல்லாமைதான் நமது கஷ்டங்களுக்கு காரணமாகிறது. தேர்தலில் பெறும் வாக்குகளையும் நிற்கவேண்டிய இடங்களுக்கும் கூட இந்த விரிவான அமைப்பு தேவையாகிறது. நாம் அரசியலில் சரியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இந்த அமைப்பு பலவீனம் என்பது குறுக்கே நிற்கிறது.

 நம்மிடம் சில தப்பித கருத்தோட்டங்கள் நிலவுகின்றன. சரியான பொருளாதார அரசியல்போராட்டங்களை கட்டினால் தானாகவே கட்சி அமைப்பு அத்துடன் கூடவே வளர்ந்து விடும் என்பது அதில் ஒன்று. அது  byproduct  என கருதுகிறோம். வெகுஜன இயக்க வளர்ச்சியுடன் கட்சியும்  சேர்ந்தே வளரும் எனக் கருதுகிறோம்.

 கட்சி வலுவாக வளர்ந்தால் வெகுஜன இயக்கம் பொருத்தமான தலைமையுடன் சேர்ந்தே வளரும் என்கிற பார்வை தேவைப்படுகிறது.  மற்றொரு தவறான பார்வை நாம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் சரியாக இருக்கிறோமே- அது கட்சியை வலுப்படுத்தாதா என்பது. இந்த  ஏகாதிபத்திய காலனி ஆதிக்க எதிர்ப்பு என்பதுடன் முதலாளித்துவ சித்தாந்த எதிர்ப்புணர்வை தொழிலாளிவர்க்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும்.

 கட்சியில் அதிகார வர்க்க மனப்பான்மை வளரும்போது கேடர்கள் உறைந்து போகும் நிலை ஏற்பட்டு வளர்ச்சி பாதிக்கும். நம்மிடம் ஒருவகை குறுகியவாத பார்வை இருந்து வருகிறது. Worshipping spontaneity.  திடீர் எழுச்சிகளை துதிக்கும் பார்வை.

அரசியல், பொருளாதார முனைகள் என்பதைவிட  ideological frontல் தான் நமது முக்கிய பலவீனம் இருக்கிறது. பல நேரங்களில் தேசிய பூர்ஷ்வாக்களை உயர்த்தி பிடித்துள்ளோம். ’காந்தியம் என்பதின் தீங்கை போதுமான அளவு எதிர்த்து சித்தாந்த போராட்டம் நடத்தாமல் இருந்துள்ளோம்.

நாம் கட்சிக்காரர்களுக்கு மட்டும்தான்  மார்க்சியம்-லெனினியம் என நினைத்துக்கொண்டுள்ளோம். மார்க்ஸ், லெனின் ஆக்கங்களை வெளியிடும்போது அனைவரும் புரிந்துக்கொள்ளக்கூடிய அறிமுகவுரைகளை தராமல் இருந்துள்ளோம். நமது தொழிற்சங்கம், விவசாய அரங்க வரலாறுகளைகூட தொகுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம். கட்சித் தோழர்களும் மார்க்சிய- லெனியத்தை கற்காமல் போனதால் அதன் பாதிப்பு அரசியல், பொருளாதார போராட்டங்களில் வெளிப்படுவதைக் காண்கிறோம்.

தோழர் ஸ்டாலின் இதற்கெல்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளார். மார்க்சிய லெனினிய ஒளியில் விரிவான மக்கள் திரளுக்கு அரசியலை கொண்டு சென்றால், அனைத்து வகைப்பட்ட பூர்ஷ்வா  சித்தாந்தங்களையும்  எதிர்த்து போராடினால், பலதரப்பட்ட மக்கள் பிரிவினருடன் நின்றால் கட்சி வளரும்.. இது சித்தாந்த  கேள்வி மட்டுமல்ல அமைப்பு குறித்த கேள்வியாகவும் இருக்கிறது.

கட்சியை  mechanical- bureaucratic  ஆக பார்ப்பது பெரும்பான்மையினரிடம் இருக்கிறது. தனிநபர் கருத்தை வலுவாக பார்ப்பது, ஏற்கப்படாவிட்டால் அதை அந்த யூனிட்டின் தவறாக சித்தரிப்பது, பிறருக்கு சொல்லித்தருவது என்பதில் காட்டும் முனைப்பைதான் கற்கவேண்டும்’ என்பதில் காட்டாமல் இருப்பது, உட்கட்சி போராட்டங்கள் என்ற பெயரில் பல தப்பிதங்கள்- பழைய நிலைகளை மனதில் வைத்தல், பெரும்பாலும் திட்டமிடப்படாத வேலைமுறைகள், கமிட்டிகள் என்பதற்கு பதில் தனிநபர்கள் எனும்  sustitute பழக்கம், ஸ்தாபனத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பார்வை இல்லாமை போன்றவை சில பலவீனங்களாக இருக்கின்றன.

கட்சி பத்திரிகைகள் வெறும் போராட்ட செய்திகளை மட்டும் கொண்டதாக இல்லாமல் சித்தாந்த பயிற்சிக்கான இடமாகவும் இருக்கவேண்டும். எவரையாவது நம்மால் இனி  activise  செய்யமுடியாது எனக் கருதினால் அவரை எடுத்து விடுவது  நலம்.

 மேற்சொன்ன பலவீனங்களை அடுக்குவதால் நம்மிடம் பெருமைக்குரிய சாதனைக்குரிய அம்சங்களே இல்லை என்று பொருளாகாது. அவை நம் வரலாற்றில் நீண்டு இருக்கின்றன. நம்மிடம் உள்ள கேடர்கள் போல் வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்ற பெருமை நமக்குண்டு. நமது கட்டுப்பாடு, திறமை, வேலை மீதான கடப்பாடு குறித்து பிறர் பொறாமை அடைய முடியும். நமது இலக்கு உயரியதென்பதால்,பலவீனங்களை பேசி சரி செய்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அப்படி செய்வது நமது பொறுப்புக்களை நிறைவேற்றத்தான் என்கிற புரிதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா