முஷிருல் ஹாசன் வாசிப்பில்...
முஸ்லீம் குடுபத்தில் பிறந்த சிந்தனையாளர்கள் அஸ்கர் அலி இன்ஜினிர், Z A அகமது, இர்பான் ஹபீப், ஏ.ஜி நூருனி, தாரிக் அலி, ஃபைஸ்,மாண்டோ, சம்ஷுல் ஹக்,
போன்ற சிலரின் எழுத்துக்களை அவ்வப்போது - ஓரளவு படிக்க வாய்ப்பு கிட்டியது.
முஸ்லீம் குடும்பம் சார்ந்த இந்திய அறிஞர்களின் பெரும் பட்டியலையும் அவர்களது எழுத்துக்களையும் ஒப்பிடும்போது தெரிந்துகொண்டது ஒன்றுமே இல்லை என்ற எண்ணம்தான் மேலிடுகிறது.நேருவை பார்த்த அளவில் சிறு பகுதியாக
கூட அபுல் கலாம் ஆசாத்தை பார்க்கவில்லை.
பொதுவெளியிலும் மய்ய நீரோட்டத்திலும் இன்னும் பொது புத்திக்கும் பலரது எழுத்துக்கள் போய் சேராத- சேர்க்கப்படாத நிலைதான் இருக்கிறது என்ற உணர்வும் மேலோங்கியது. தொழிற்சங்க வாழ்க்கையில் அகில இந்திய மாநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் இந்தி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்த அளவு (இந்தி தெரியாதுங்க என்பது வேறு உண்மை) உருது கற்கவேண்டும் என்ற அழுத்தம் இல்லாததும் கூட ஒரு சிறிய காரணம்.
சிபிஅய்யின் நியுஏஜ், பார்ட்டி லைஃப், சிபிஎம்மின் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில், மெயின்ஸ்ட்ரீம், ஃப்ராண்டியர், இபிடபிள்யூ, ஜனதா போன்ற பத்திரிகைகளில் 1980-2000 களில் முஸ்லீம் பின்னணியிலிருந்து சோசலிசம் நோக்கி வந்தவர்களின் எழுத்துக்கள் சிலவற்றை வாசிக்க வாய்ப்பு இருந்தது. ஷமீம் ஃபைஸி நியு ஏஜ் எடிட்டராக இருந்த காலத்தில் டெலிகாம் தொடர்பாக நான் அனுப்பிய கட்டுரைகள் அனைத்தையுமே வெளியிட்டு எங்களுக்கு உதவியிருந்தார்.
இந்த அறிஞர்கள் வரிசையில் முஷிருல் ஹாசன் (Mushirul Hasan 1949- 2018) மிக முக்கியமான ஒருவர். வரலாற்று- கலாச்சார எழுத்துக்களைத் தந்தவர். ஏராள புத்தகங்களின் ஆசிரியர். ஜமியா மில்லியா (நேஷனல் யுனிவர்சிட்டி) துணைவேந்தராக சிறப்பாக செயல்பட்டவர். இந்தியாவின்
composite culture- Secularism சூழலை உயர்த்தி பிடித்தவர் ஹாசன்.
ஹாசன் கட்டுரைகளை 1980-2000 காலத்தில் அவ்வப்போது படித்திருந்தாலும் அவரது முழுமையான புத்தகம் ஒன்றை ஜுன்-ஜூலை 2021ல் தான் படித்தேன். அதுவும் காந்தி குறித்த எழுத்து என்பதால் ஈர்ப்பு ஏற்பட்டு அதில் கவனம் சென்றது. Faith and Freedom Gandhi in History என்பது அந்த புத்தகம்.
இப்போது முஷ்ருல் ஹாசனின் ’Moderate or Militant Images of India’s
Muslims’ என்பதை
வாசித்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பகுதியில் இந்திய அறிஞர்கள் தங்கள் எழுத்துக்களில் முஸ்லீம்
bias என்பதை
வெளிப்படுத்தியிருப்பதை ஹாசன் சுட்டிக் காட்டுகிறார். குறிப்பாக நிராத் செளத்ரி, அருண் ஷோரி, சந்தன் மைத்ரா, ஸ்வப்பன்
தாஸ் குப்தா இன்னும் வி எஸ் நைப்பால் போன்றவர்களை பேசுகிறார். அந்தப் பகுதியின் சில அம்சங்கள் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
நிராத் செளத்ரியின்
Autobiography of an Unknown Indian
என்பது வங்கப்பிரிவினை- நாட்டின் பிரிவினை என்ற உளவியல் தாக்கத்தின்பாற்பட்டு ஒருவகையான முஸ்லீம் வெறுப்பை சொல்லக்கூடியதாக எழுதப்பட்டுள்ளது என்பார் முஷிருல். 1947ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் பிரித்துக்கொண்டது என்பது ஏதோ சந்தர்ப்பாத தலைமையால் மட்டுமல்ல- அவர்களிடம் காணப்படும்
fanatical devotion ஆல்தான் என செளத்ரி எழுதியதையும் முஷ்ருல் சுட்டிக்காட்டுவார். செளத்ரியின் பள்ளிக்காலத்திலேயே ஆசிரியர்கள் முஸ்லீம்கள் என்றால் கோயிலை உடைத்தவர்கள், பெண்களை தூக்கி சென்றவர்கள், இஸ்லாமை கத்தி முனையில் பரப்பியவர்கள் என்றுதான் சொல்லித்தந்துள்ளனர். செளத்ரியைப் பொறுத்த்வரை ’முஸ்லீம் தீங்கு’ என்பது நாளும் பரவக்கூடியது. இன்றே அதை தடுக்கவேண்டும். நாளை என்பது வெகுதூரம் எனக் கருதினார்.
கிரிஷக் பிரஜா கட்சியை ஃபஸ்லுல் ஹக் 1927ல் வங்கத்தில் துவங்கினார். அவர் ஏழை விவசாயிகளின் பக்கம் நின்றவர். 1918-19ல் அவரும் காங்கிரஸ் செயலராக இருந்தவர்தான். 1937-1943ல் வங்கத்தின் முதல்வராக இருந்தார். ஆனால் அவருக்கு வகுப்புவாதி என்ற பட்டம்தான் மிஞ்சியது. செளத்ரியும் ஹக்கை அப்படியே அழைத்தார். இந்துமுஸ்லீம் இணக்கம் என்பதெல்லாம் சாத்தியமானதாக தோன்றவில்லை என்றார் செளத்ரி.
பங்கிம் சந்திரர் ஆனந்தமடத்தில் ’இந்துக்களின் பண்டைய தலைமுறையினரை அழித்த்வர்கள் முஸ்லீம்கள்’ என்றே படம்பிடித்தார். மத்தியகால இந்தியா அதிகாரவேட்கையின் உச்சத்தில் இந்துக்களை சிறுமையாக்கியதாக பங்கிம் எழுதினார். 1887ல் அவர் எழுதிய ’சீதாராம்’ எனும் நாவலில் சக்தி மாதாவிடமிருந்து அந்நாவலின் பெண்பாத்திரம் அருள்பெற்று முஸ்லீம்களை கொல்லவேண்டும் என்கிற உணர்வை பெற்றதாக சித்தரிப்பார். பொதுவாக மிலேச்சர்கள் என்ற பதம் முஸ்லீம்கள் குறித்த சொல்லடலாக இருக்கும். 19 ஆம்நூற்றாண்டில் இந்துக்கள் இனியும் கோழைகளாக இருக்கக்கூடாது என்பது தொடர்ந்து உரையாடலாக மாற்றப்பட்டது என்பதை ஹாசன் சுட்டிக்காட்டுகிறார்.
நாம் இன்று இந்து முஸ்லீம் ஆங்கிலேயர் என்கிற பெரும் சங்கம கலாச்சாரத்தில் வாழ்கிறோம் என்றார் தாகூர். வந்தே மாதரம் என்பது முஸ்லீம்களின் உணர்வில் பிரச்னையாகிறது என்பதை தாகூர் ஏற்றார். சாந்தி நிகேதன் தேசியம்- சர்வதேசியம், மரபு- நவீனம், பொருளாயத நலன்கள் என்பதை தாண்டிய பார்வை- குறுகிய சாதி, இனம், கொள்கை தாண்டிய பயிற்சியின் இடமாக இருந்திட தாகூர் விழைந்தார். நேருவும் பரந்த அனுபவத்தை இந்திரா பெறட்டும் என்பதற்காகவே அவரை அங்கு அனுப்பினார். நேரு இந்திராவிற்கு தாகூரின் நூற்றாண்டு பற்றிச் சொல்லும்போது தாகூரைப் பற்றி நாம் என்ன பேசுகிறோம் என்பதல்ல, அவருக்கு நாம் எப்படி வாழ்ந்து காட்டுகிறோம் என்பதுதான் நாம் காட்டும் மரியாதை என்றார். அதை வங்கத்தின் சில அறிவுஜீவிகள்
எடுத்துக்கொள்ளாமல் போனார்கள்.
இக்பாலின் கவிதைகளை பெர்சியன் நன்கறிந்த மோதிலால், தேஜ்பக்தூர் சாப்ரு, குன்ஸ்ரு ஆகியோர் அடிக்கடி மேற்கோள் காட்டினர். அதேபோல் வங்கமொழி அறிந்த முஸ்லீம்கள் தாகூரின் கவிதைகளை கொண்டாடினர். காஸி நஸ்ருல் இஸ்லாம் ரவீந்திரை தனது குரு என ஏற்றார். கல்வியாளர் ஹுமாயுன் கபீரிடம் தாகூர் பெரும் செல்வாக்கு செலுத்தினார். பேராசிரியர் அபித் ஹுசைன் காந்தி மற்றும் தாகூர் தாக்கம் கொண்டவராகவே இருந்தார்.
இக்பால் மறைவின்போது தாகூர் இந்த் செய்தியை அனுப்பினார்:
The death of Sir Mohammad Iqbal creates a void in our
literature that, like a mortal wound, will take a very long time to heal.
India, whose place today in the world is too narrow, can ill afford to miss a
poet whose poetry had such universal value
அதேநேரத்தில் 19 ஆம்நூற்றாண்டின் வங்க இலக்கிய உலகில் முஸ்லீம்களுக்கு மய்ய நீரோட்டத்தில் இடமளிக்கப்படவில்லை. ஓரங்கால் இடமே இருந்தது என்பதை முஷிருல் சொல்கிறார். சுரேந்திர பானர்ஜியே கூட இப்படி சொல்ல நேர்ந்தது-
scratch a hindu and you will find him conservative" காங்கிரசின் பத்ரலோக்குகளின் செயல்பாடுகள்- அவர்களின் பேச்சு, காட்டிய அடையாளம் ஆகியவற்றால் முஸ்லீம்கள் தள்ளிப் போகலாயினர். காங்கிரஸ் இந்துக்களின் ஆதிக்கமாகவே அமையும் என்ற எண்ணம் உருவானது. அது இந்து ராஜ்யத்தையே அமைக்கும் என்ற எண்ணமும் வலுப்பட ஆரம்பித்தது.
ஜே எச் புரூம்பீல்ட் இதை சரியாக மதிப்பிட்டார்
If history united the
Bengali Muslim community, so too did its enmity towards the Hindu Bhadralok.
politician had an excellent target for attack in that dominat Hindu minority
that supplied the landlords and their agents, money lenders, lawyers and other
govt officials with whom the Bengali Muslim rural and urban was forced to have
dealings. to charge this group with tyranny and to call for united backing to
break its power was a sure way to arouse popular enthusiasm. And if anger arn
to violence, it was the privileged Hindu minority that was likely to be hurt
most seriously"
காந்தியின் நம்பத்தகுந்த சீடராக ஜி டி பிர்லா இருந்தபோதும் 1942 ஜூலையிலேயே அவர் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுவிடலாம் என்ற கருத்தை வைத்திருந்தார். அது இந்துக்களின் நலன்களுக்கு விரோதமானதல்ல எனக் கருதினார்.
வி எஸ் நைப்பாலும் ’இஸ்லாமின் தீங்கு’ என்பதை எழுதினார்.
Islam as a coherent, transnational, monolithic force engaing in a
unilinear confrontational relationship with the west என்று நைப்பால் எழுதுவதைக் காணலாம். இஸ்லாம் என்பது முஸ்லீம்களின் வாழ்வில் இருக்கிறதே தவிர அது நைய்பாலின் எழுத்துக்கள் மூலம் கிடைப்பதல்ல என்கிற விமர்சனத்தை முஷிருல் வைத்தார். அவருக்கு இஸ்லாம் குறித்த ஆழமான புரிதல் இல்லை. தான் கேட்டறிந்தவைகளிலிருந்து நைப்பால் எழுதியுள்ளார் என்றார் முஷிருல்.
நைப்பால் பாபர் மசூதி இடிப்பை ’வரலாற்றை
balance’ செய்தலாக பார்த்தார். அயோத்யா என்பதை அவர் ’passion’ என்றார். அதை புரிந்துகொண்டு உதவவேண்டும் என்று கூட எழுதினார். முகமது முஜீப் சரியாக எழுதியதை நைப்பால் போன்றவர்கள் எடுத்துக்கொள்ளாததை முஷிருல் சுட்டிக்காட்டினார்
Unless we have decided
in our own minds that medieval Indian History is not the history of the Indian
people, we must courageously examine our present criteria of judgement and
develop a perspective of persons, policies and events of the past that will
enable us to understand and forgive and to obtain a clear vision of the past
and the future"
Hind Swaraj மீதும் நைப்பால் விமர்சனப் பார்வையே வைத்தார். காந்தியை புரிந்து கொள்ள நல்ல வாசல் என அறியப்பட்ட ஆக்கமது. நைப்பாலின் எழுத்துக்கள் குறித்து எட்வர்ட் செயித் கொண்டிருந்த விமர்சனத்தை முஸ்ருல் தந்தார்- ஒருவகை mental suicide- intellectual
catastrophe of the first order என்பது அந்த விமர்சனம்.
18ஆம் நூற்றாண்டில் அயோத்யா- பைசாபாத் பகுதிகள் சுற்றுலாதளமாக- யாத்திரைக்கான தளமாக மாற்றப்பட்டதற்கு ராமனந்த சாதுவும், அவுத் நவாப்களும் காரணமாக இருந்தனர். நவாப் சப்தர்ஜங் பல கோயில்களை பழுது பார்த்து நேர் செய்ய துணைநின்றார். அனுமார் கர்கி எனும் கோயிலுக்கான இடத்தை அவர்தான் வழங்கினார். பல இந்து கோயில் குருமார்களுக்கு முஸ்லீம் அதிகாரிகள் தானம் வழங்கியதையும் முஸ்ருல் குறிப்பிட்டு சொல்கிறார். திப்பு குறித்த மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்டாலும் அவர் பல இந்துக்களைத்தான் உயர் பொறுப்புகளில் வைத்திருந்தார் என்பதை மறுக்க முடியாது. சிருங்கேரியை அவர் போஷித்ததுடன் தனது வெற்றிக்காக வழிபாடு செய்யவும் வேண்டியவராக திப்பு இருந்தார். முஷிருல் இதையும் விமர்சனமாக சொல்கிறார்
At the same time there
is no reason to elevate Tipu to the ranks of a Sufi or place him on a
nationalistic pedestal..He was doubtless generous to Hindus but that does not
make him liberal or secular in an age when these expressions made little or no
sense"
நவீன இந்தியாவில் சையத் அகமது கான் குறித்தும் எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அவர் காங்கிரசிடம் நேயமாக இல்லை. எதிரமரையாக இருந்தார் என்பது சரிதான். ஆனால்
அவரின் சீர்திருத்த முயற்சிகள் சரியாக பார்க்கப்படாததை ஹாசன் சொல்கிறார் .
இந்தியாவின் அற்புத முஸ்லீம்களான ஹகிம் அஜ்மல் கான் பெயரிலோ, டாக்டர் முக்தர் அகமது அன்சாரி பெயரிலோ டெல்லியிலோ அல்லது வேறு இடத்திலோ பூங்கா கூட இல்லை. இவர்கள் இந்தியாவின் இணைவு கலாச்சாரத்தை உயர்த்தி பிடித்தவர்கள் தானே? மைசூரில் பிருந்தவான் கார்டனை வடிவமைக்க அன்று உறுதியாக நின்ற மிர்ஸா முகம்து இஸ்மாயில் பெயர் எங்காவது இருக்கிறதா? நினைவின் ஓரத்தில் கூட இடம் அவர்கள் பெறவில்லையே. டெல்லி புத்தாக்கத்தில் நின்ற மெளல்வி முகமது சகதுல்லா எனும் வரலாற்றாசிரியர், நாவலாசிரியரான மெளல்வி நாசிர் அகமது இவர்கள் நினைவில் இருக்கிறார்களா என்கிற நியாயமான கேள்வியை முஷிருல் எழுப்புகிறார்.
Times of India TV போன்றவை இன்று எப்படி ஆளும் அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கின்றன என்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஆனால் முஷிருல் இதை 1970 களின் இறுதியிலேயே டைம்ஸ் ஆஃப் இந்தியா எடிட்டர் கிரிலால் ஜெயினை வைத்து பேசியுள்ளார். முஸ்லீம்கள் மீதான பாரபட்சத்தை முஷிருல் சொல்வார். உலமா மரபுதனை முற்றிலும் மாற்றிட இந்துத்துவாவின் வெற்றியால்தான் முடியும் என 40 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிலால் எழுதியதை ஹாசன் சுட்டிக்காட்டுகிறார். ஹாசன் இவ்வாறு கிரிலாலுக்கு தன் விளக்கத்தை தந்தார்.
Jain's writings showed no appreciation of Muslim societies,
past or present. Like Nirad Chaudhuri and Naipaul, he was unaware of the
historical situations in which certain deductions made from the Quran were no
longer relevant; Syed Ahmad Khan and Maulana Azad had repudiated them long ago.
Ghalib despised the ulama for claiming special and providential wisdom for
themselves and their friends; Akbar Allahabadi (1846–1921), the poet, ridiculed
the type of casuistry practised by them; progressive writers kept lamenting
that ‘power’ rested in their flowing gowns to hide the wickedness of tyranny.
அருண் ஷோரியின் எழுத்துக்கள் மீதான விமர்சனத்தையும் ஹாசன் வைத்தார். அல்பெருனி, அமீர் குஷ்ரு, மாலிக் முகமது ஜைஸி, அபுல் பாசல், ரஸ்கான், அப்துர் ரஹிம் கான், தாரா ஷிகோ போன்றவர்கள் குறித்து ஏதும் அவர் படித்தது இல்லை. அவர்கள் இந்து கடவுள் பற்றியும், சம்ஸ்கிருத பிரதிகளை பெர்ஷியனில் மொழிபெயர்த்ததையும் அவர் அறிந்திருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார் ஹாசன். மிக உரக்க ஜனநாயகம் பேசிய ஷோரி குஜராத் படுகொலைகள் பற்றி பேசாதாது ஏன் என்ற கேள்வியையும் ஹாசன் எழுப்பினார்.
அருண் ஷோரி குறித்து கீழ்கண்ட மதிப்பீட்டிற்கு ஹாசன் வந்தார்-
Shourie, author of numerous ‘history’ books, who uses historical facts
selectively to reinforce his ideological predilections.
அதேபோல பிரிட்டிஷ் கல்வி பின்புலம் கொண்ட சந்தன் மைத்ரா, ஸ்வப்பன் தாஸ் குப்தா போன்ற அறிவுஜீவிகளும் இப்படி ஒருவகை
bias கொண்டே பேசியும் எழுதியும் வருவதை ஹாசன் சுட்டிக்காட்டுகிறார். இத்தனைக்கும் ஆரம்பத்தில் ஸ்வப்பனுக்கு டிராட்ஸ்கிய பின்னணி இருந்துள்ளது. சந்தன் ஆக்ஸ்போர்ட் பின்னணி கொண்டவர். இவர்களைப் போன்றவர்கள் கோல்வால்கர் எழுதிய பிடிவாத கோட்பாட்டு அம்சங்களில் எப்படி தங்களை கிடத்திக்கொண்டார்கள் என ஹாசன் வினவுவதைக் காண்கிறோம்.
பத்திரிகை மீடியாக்களில் தொடர்புகொண்ட எல்லா அறிவுஜீவிகளுமே அவ்வாறில்லை . பலர் நேருவின் செக்யூலர் ஜனநாயகம் எனும் பார்வையில் நின்று பேசக்கூடியவர்கள் என்பதையும் தனது
45 ஆண்டுகால அறிவுலக அனுபவத்தில் ஹாசன் ஏற்கிறார். அஜித் பட்டாசார்யா, பிரபுல் பித்வாய், பிரான் சோப்ரா, ஹரிஷ் கரே, குல்திப் நாயர், என் ராம், வீர் சங்க்வி, வினோத் மேத்தா, திலிப் பட்காவோங்கர், மாலினி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்களை இந்த பண்புகளுடன் எழுதுபவர்களாக ஹாசன் குறிப்பிடுகிறார்.
கல்விப் பின்புலம் இஸ்லாம் குறித்த வரலாற்றை சேர்த்துக்கொள்கிறதா என்ற கேள்வியை
ஹாசன் வருத்தத்துடன் பதிவிடுகிறார். பெர்சியன் பற்றிய ஆரம் அறிவு கூட இல்லாமல் மத்தியகால இந்தியா குறித்து பேராசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள் பேசுவதைக் காண்கிறோம். உருது நீக்கம் என்பது புலமை நீக்கமாகவும் சேர்ந்தே நடக்கிறது என்ற உணர்வுகூட எழவில்லை. அலிகாரும், ஜமியா மில்லியாவும் கூட
sunni Theology என சுருங்கிப்போகின்றன. முகமது முஜீப் அற்புதமாக ஒன்றை நமக்கு சொன்னார். நமது முரணை அது காட்டியது. The inconsistency between condemning
Western civilization in principle and accepting it in practice was noted but
ignored
ஹாசன் தனது முஸ்லீம் சகோதரர்களுக்கும் இந்திய அனுபவத்தின் பாற்பட்ட தேவையான அறிவுரை ஒன்றை தந்து சென்றுள்ளார்.
Muslims, to make the most of their potential, would be
required to shun obscurantism and take their distinct values and proud and
tolerant culture into the mainstream of political life. They could no longer
subscribe to the infallibility of established dogma; instead, they would be
expected to awaken once more the spirit of conscientious objection to
prejudice, shake off the shackles of the past, and create a social order
conducive to the dignity of the common man and woman.
தங்களது அற்புதமான உன்னதமான நெறிகளை எடுத்துக்கொண்டும் அரசியல் பொதுநீரோட்டத்துடன் உறவுகொண்டும் இருக்க வேண்டும். சில வறட்டுத்தனங்களை தவறே இல்லாதவை என தொடர்ந்து வைத்திருக்கவேண்டியதில்லை. அவசியமில்லா பொருந்தா பழமையிருந்தால் அதிலிருந்து விடுபட கற்கவேண்டும். சாதாரண மனிதருக்கும் பெண்களின் கெளரவத்திற்கும் உரிய சமூக முறைமைகளுக்காக முஸ்லீம்கள் நிற்கவேண்டும் என
விழைந்தார் ஹாசன்.
முஸ்லீம்கள் பெரும் ஆய்வுகளின் மூலம் வரலாற்றை விளக்க, மறுகட்டுமானம் செய்திட வேண்டும். ஆய்வுகள் சில பெரு நகரங்களுடன் நின்றுவிடக்கூடாது. அறிவுஜீவிகள் உருவாக்கும் கண்ணாடிகள் வழிதான் நாம் நம்மை பார்க்க தெரிந்துகொள்கிறோம். அவர்கள் எவ்வளவு நேர்மையாக தருகிறார்கள் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கலாச்சார கட்டுமானங்களை செய்பவர்களாகவும் அதேநேரத்தில் சூழலின் விளைபொருளாகவும் அவர்கள் இருந்து இந்த கடமையை செய்கிறார்கள். இந்த வேலையை மிகவும் பொறுப்புடன் ஆற்ற வேண்டும் என்கிற கடமையில்தான் என் எழுத்துக்கள் என்றார் ஹாசன்.
ஹாசன் எழுத்துக்களை வாய்ப்புள்ளவர்கள் வாசிப்போம்.
Ref : Mushirul Moderate or Militant Images of Indias Muslims
15-7-2022
Comments
Post a Comment