Skip to main content

தோழர் டாங்கேவின் 1947 சோவியத் சந்திப்பு... (75 ஆம் ஆண்டு)

 

தோழர் டாங்கேவின் 1947  சோவியத் சந்திப்பு...    (75 ஆம் ஆண்டு)

 

அதிபர் கோர்ப்பசாவ் வீழ்ச்சியுடன் சோவியத் உடைவும் ஏற்பட்ட சூழலில் உலகம் 1990களில் பெரும் விவாதங்களை பெருக்கிக்கொண்டதை அறிவோம். பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயர்கூட விவாதமாகி சில கட்சிகள் பெயரையும் மாற்றிக்கொண்டன. இவை அனைவரும் அறிந்த விஷயம்.  இங்கு 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பரிமாற்றம் தரப்பட்டுள்ளது. அன்று அது இரகசிய ஆவணம். இன்று பொதுவெளி ஆவணம். அந்த உரையாடல் எந்த அம்சங்களை முக்கியத்துவப்படுத்தியது என்பது வரலாற்றை பார்க்கும்  எவருக்கும் ஆர்வம் கூட்டுவதாக அமையும்.





விடுதலை காலத்தில் இரு நாடுகளாக இந்தியா- பாகிஸ்தான் என உருவானபோது தோழர் டாங்கே சோவியத் தலைவர்  கோமின்பார்ம் பொறுப்பாளர் (Communist Information Bureau)ஜடானோவ் அவர்களை செப்டம்பர் 6, 1947ல் சந்தித்தார். இதுபோன்ற சில ஆவணங்களை இப்போது பொதுவெளியில் கிடைக்கச்செய்துள்ளனர். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்  Notes of the Discussion of Comrade A A Zhdanov with Com Dange CC of CPI  என்கிற 4 பக்க குறிப்பாக கிடைக்கிறது. அந்த தேதியில் அந்த ஆவணம்  top secret  என முத்திரையாகியிருந்தது.

 உரையாடலின் போது தோழர் எம் சுஸ்லாவ் இருந்தார். சுஸ்லாவ் அப்போது  AUCP B ( CPSUவிற்கு முந்திய பெயர் -  All union Communist Party Bolsheviks)செயலர். உரையாடலை ருஷ்ய மொழியில் எழுதி வைக்க  கட்சியின் வெளிநாட்டுப்பிரிவு துணைத்தலைவரான எல் சி பாரனாவ் இருந்தார். மொழிபெயர்ப்பாளராக தோழர் அய்.அய். கோஸ்லாவ் (வெளிநாட்டுத்துறை மொழிபெயர்ப்பு பிரிவு)  இருந்தார். ருஷ்ய குறிப்பு செப்டம்பர் 8, 1947 அன்று தயாராகியுள்ளது. ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட இக்குறிப்பை ஆங்கிலத்தில் தஹீர் அஸ்கர் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்பு எப்போது என குறிப்பேதுமில்லை.

 

அந்த உரையாடலில் நாடு பிரிவினை என்கிற யதார்த்தம் புரிந்துகொள்ளப்பட்டு சோவியத் தலைவர் ஜடானோவால் ஆலோசனை நல்கப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே அவர் தெளிவுபடுத்திவிடுகிறார். தோழர் டாங்கே அவர்களே, நாங்கள் சொல்வது ஆலோசனைதான். ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் தங்கள் உரிமை . பயனளிக்கும் என்றால் மட்டுமே பரிசீலிக்கலாம். டாங்கே அந்த உணர்வை கணக்கில் கொள்வதாக பதில் அளிக்கிறார். ஜடானோவ் தொடர்கிறார்.

சோவியத் கட்சி இரு நாடுகள் உருவாகிவிட்டதை ஏற்கிறது. இரு நாட்டிற்கும் தனித்தனி கம்யூனிஸ்ட் கட்சி தேவை. இரண்டும் நல்ல உறவுகளுடன் இந்து- முஸ்லீம் ஒற்றுமை மேலோங்க புரிதலுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும்.

 உங்கள் இரு கட்சிகள் தோழமைக்கு அடையாளமாக இருக்கவேண்டுமே தவிர பகைமைக்கு இருக்கக்கூடாது.  உங்களால் அதை செய்ய இயலும். ”

 

அடுத்து எங்கள் ஆலோசனை கட்சியின் பெயர் குறித்த விஷயமாகும். நீங்கள்  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா என்பதை  Workers Pesants Party or Part of Labour  என்றோ மாற்றிக்கொள்ளலாம். விவசாயிகளிடம் நம்பிக்கையை அது அதிகமாக்கும். கம்யூனிஸ்ட் என்ற பெயர் குறித்து அவர்கள் அச்சப்படுகின்றனர்.. அவர்களின் நம்பிக்கை பெற்ற பின்னர் கூட கம்யூனிஸ்ட் கட்சி என நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இந்தியாவில் உடனடி நோக்கம் கம்யூனிசம் இல்லை என்பதால் அந்தப்பெயரைச் சொல்லி -  no need to annoy people with Communism.  நிலைமைகள் மாறும் கட்டத்தில் நாம் மக்கள் நாம் முன்வைக்கும் ஜனநாயக முழக்கங்களில் நம்முடன் நிற்கும்போது நாம் பேசிக்கொள்ளலாம். இதை உரையாடும்போது ஜடானோவ் வடகொரியா அனுபவத்தை எடுத்துரைத்தார்.

 தாங்கள் தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்திய கம்யூனிஸ்ட்களை  stop being communists  என்றாக்குகிறோமே என நினைக்கவேண்டாம். எங்களின்  pure heart லிருந்து வந்த ஆலோசனைதான்.”

அடுத்து முக்கியமான பரந்த மேடை பற்றியதானது. முதலாளித்துவ வேர்களை அழித்திட ஜனநாயக மாற்றங்களை விரைவுபடுத்தி தொழிலாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிடவேண்டும். இது சோசலிச மாற்றம் பெற உரிய சக்திகளின் சேர்மானம் அவசியம். இதை பொதுவாக சொல்கிறோமே தவிர இந்திய கம்யூனிஸ்ட்கள் இருக்கும் நிலைமைகளை புரிந்துகொண்டு சிறப்பாக இதை செய்ய திறமையானவர்கள் என்பதை அறிவோம். ”

அடுத்து எங்களது விஷயம் இந்தியாவில் சாதிகள் குறித்தது. அதாவது  On caste Differences and the struggle for eradication of the remnants of the caste system.  சாதிகள் இருப்பது தொழிலாளர் தங்களை வர்க்கமாக முன்னெடுத்துச் செல்ல தடையாக இருக்கிறது-  இந்த எச்சங்கள் பெரும் கஷ்டங்களை உருவாக்குவதாக இருக்கும். இந்த எச்சங்களை துடைத்தெறிய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். இது உடனடியாக களையமுடிந்த ஒன்றல்ல என்பதை நாங்கள் அறிந்தேயிருக்கிறோம். அதில் அதிகவனம் செலுத்துங்கள். (We consider com Zhdanov continued- that this is the most reactionary vestige and poses the biggest difficulty for Indian Communists. The Communist party must make all efforts in order to eliminate these vestiges, though we are awarw that this cannot be achieved in the near future.We request that the Indian communists - com Zhdanov said- pay serious attention to this question.) ”

மேலே சொல்லப்பட்டவைதான் AUCP B  மத்திய கமிட்டி முன்வைக்கும் அடிப்படை ஆலோசனைகள். இந்திய கம்யூனிஸ்ட்கள் இங்கு படிக்க வர தடையில்லை. தொழிற்சங்க பிரதிநிதிகள் அடிக்கடி வரலாம். கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேரடி உறவை விரும்புகிறோம். பிரச்னை எனில் occassional  ஆக வைத்துக்கொள்ளலாம். நீங்கள் சோவியத் மக்கள் குறித்து ரேடியோ பிரச்சாரங்களை செய்யுங்கள்.”

தோழர் டாங்கே  நன்றி தெரிவித்துவிட்டு இந்த ஆலோசனைகளை நாடு திரும்பியவுடன் மத்திய கமிட்டியில் வைப்பதாக தெரிவித்தார். ”

மேற்கண்ட ஆலோசனைகள் அதை டாங்கே  தங்கள் கட்சியில் தெரிவிக்க ஏற்பு என்பதுடன் அந்த உரையாடலின் சுருக்கம் முடிவடைந்துள்ளது.

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு