தலித் கம்யூனிஸ்ட் தோழர் ஆர் பி மோர்- நினைவு குறிப்புகள்
Memoirs of a Dalit Communist- The
Many worlds of R B More மராத்தியிலிருந்து
ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்ற நூல். வந்தனா
சோலங்கர் ஆங்கில வழி உழைப்பை
தந்துள்ளார். 2020ல் ஆங்கில புத்தகம்
வந்தது. அற்புத
முன்னுரையை அனுபமா ராவ் தந்துள்ளார். மோரும் அவரது மகனும் தரும் குறிப்புகளைக் கொண்ட
புத்தகம். தலித் பம்பாய் -தலித் மார்க்சியம்- தலித் கம்யூனிஸ்ட் போன்ற சொல்லாடல்கள்
நிறைந்த ஆக்கம். இந்த புத்தகம் சிபிஎம் லெஃப்ட் வேர்ட் பதிப்பகத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.
ராமச்சந்திர பாபாஜி மோர் (1903-1972) பம்பாயின் சாதி- வர்க்க உராய்வு மற்றும் ஊடாட்டத்தின் அனுபவத்தை பெற்றவர். மோரின் வாழ்க்கை பம்பாய் பெருநகரின் சாதி- வர்க்க சமூக அனுபவங்களின் இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கையும்கூட என்கிறார் முன்னுரையில் அனுபமா ராவ்..
இந்தக்காலத்தின் urban dalit modernity என்பதன் உருவாக்கம் என்பதையும் அவர் குறிப்பிடுவார். தலித் மார்க்சியர் ஒருவரின் சரிதை எனக் குறிப்பிட்டு அனுபாமா ராவ் More's account tracks the story of a hetrodox, utopian Marxism which was neither fully comfortable with the Ambedkar movement nor with the Communist party, but which was quitessentially urban and enabled by dalits complex encounters with colonial urbanity." என எழுதுவதைக் காணலாம்.
கொங்கன் பகுதி ராய்காட் மாவட்ட தஸ்காவுன் கிராமத்தில் பிறந்தவர் மோர். அப்பகுதியில் சாதி எதிர்ப்பு போராட்ட மரபு இருந்தது. அங்கு ஓரளவு மகர், சாம்பர் சாதிகளைச் சார்ந்த இராணுவ ஓய்வூதியர்கள் கொஞ்சம் நிலங்களை வாங்கிப்போட்டுகொண்டு படித்த மக்களை உருவாக்கும் கடமையை செய்தனர்.. சாதி அநீதிக்கு எதிராக அங்கு கோபால் பாபா வாலங்கர் முன்னிலையில் இருந்தார். அவர் மோர் குடும்பத்திற்கு உறவினரும் கூட. மோர் அவர்களின் தாய் மாமன் வித்தல் ஜோஷி மராத்திய இலக்கிய ஆர்வலர். அந்தப் பகுதி கல்வி என்பதிலும் சாதி அநீதி எதிர்ப்பிலும் தன் மரபை வாலங்கர் போன்றவர்களால் முன்னெடுத்து சென்றது.
நாங்கள் படித்த வசதி பெற்ற குடும்ப பின்னணி கொண்டவர்கள் என்று மோர் சொல்லியுள்ளார். ஆனாலும் தந்தையார் ஏமாற்றப்பட்டு குடும்பம் சற்று கஷ்ட நிலையில் இருந்த செய்தியை இப்புத்தகம் வாயிலாக அறிகிறோம். மகத் பகுதியில் மோர் உயர் மதிப்பெண்கள் பெற்றவர். மாதம் ரூ 5 கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றும் அங்குள்ள ஆங்கில கல்விக்கூடம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. உயர் சாதி மாணவர்களுடன் சகஜமான சமதையான உறவுச் சூழல் இல்லை என்பதை அவர் மாணவப் பருவம் அவருக்கு உணர்த்தியது.
டீக்கடை பேச்சுக்கூடம் ஒன்றை அவர் சக தலித் தோழர்களுடன் துவக்கினார். பொது நீர்நிலையில் தண்ணீர் உரிமை தலமட்ட போராட்டத்திலும் அவர் முன்நின்றார். 1927 மகத் சத்தியாகிரகம் கொடுத்த நம்பிக்கையது. அதைத்தொடர்ந்து அம்பேத்கர் இயக்கங்களில் அவர் தலமட்டங்களில் பயணித்தார். பத்திரிகை பிரசுரங்களை விநியோகித்தார்.
1930களில் மோர் கம்யூனிசம் நோக்கி நகர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். தொழிலாளர்களை திரட்டும் தொழிற்சங்கவாதியானார். சாதி எனும் பிரச்னைக்கு முகம் கொடுத்து அதைக் குறித்த புரிதல்- செயல்திட்டங்களை கட்சி உருவாக்க வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுத்து வந்தார். அம்பேத்கர் இயக்கத்திலிருந்து கம்யூனிச இயக்கத்திற்கு மோர் மாறிய தருணம் புதிரான ஒன்றாக இருப்பதாக அனுபமா குறிப்பிடுகிறார்.
அம்பேத்கர்
அப்போது தீண்டாமை என்பதை தேசிய பிரச்னை
ஆக்கி உரிமை- நியாய பகிர்விற்கான
போராட்டத்தை பெருமளவு அடையாளப்படுத்திக் கொண்டிருந்தபோது
மோரிடம் ஏற்பட்ட மாற்றத்தை அனுபமா
சொல்கிறார். அதே நேரத்தில் அனுபமா
கீழ்கண்ட மதிப்பீட்டையும் தருகிறார். பம்பாய் சாதி- வர்க்க உறவுநிலைகளின் வரலாறு
என்ற இந்த மாற்றத்தின் தலைமகனாகவும் மோர் இருந்தார்.
More was a bridge between communities with different political ideologies and he played a generative role in imagining a political utopia that transcended the divide between caste and class. This division, played out as a confrontation between Ambedkar and indian Communists, is a history that is specific to Bombay"
தோழர் மோர் சுயசரிதை 1924 வரையிலும் சொல்லப்பட்ட ஒன்று. அதன் பின்னரான சரிதையை அவர் மகன் சத்யேந்திரா எழுதுகிறார். அவரின் பகிஷ்கரித் பாரத் எழுத்துக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கு எழுதியவை, கோகலே இன்ஸ்டிடூட்டில் தலித் அரசியல் செமினார் பங்களிப்பு போன்றவை முக்கியமானதாக அனுபமா எழுத்தின் மூலம் நாம் உணரலாம். சாதி- வர்க்க உரையாடலில் எந்த கோட்பாட்டு ஆவணத்தையும் மோர் தரவில்லை. அதே நேரத்தில் தான் சார்ந்திருந்த கட்சி அமைப்பில் அதற்கான தொடர் குரலாக அவர் இருந்திருக்கிறார் என்பதை இந்த புத்தகம் தாராளமாக எடுத்துப் பேசுகிறது.
மோரின்
பேரன் சிபிஎம் தொடர்பில் இருக்கிறார்
என்ற செய்தியும், அவர் மோர் குறித்த
விஷயங்களை மேலும் தேடுபவராக இருக்கிறார்
என்பதையும் அறிகிறோம். மோர் அவர்களே சிபிஎம் கட்சியின் தலைவர்களுள்
ஒருவராக இருந்து மே மாதம் 11, 1972ல் மறைந்தவர். கட்சி பிரிந்தபின்னர் பம்பாயில் சிபிஎம்
கட்சிக்கான வார இதழான ’ஜீவன்மார்க்’ என்பதை அம்பேத்கர் பிறந்ததினமான ஏப்ரல் 14,
1965ல் மோர் கொணர்ந்தார்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி மோர் குறித்து சில கட்டுரைகளை
20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. சிபிஅய் கட்சியில் சேர்ந்த 1930களிலேயே
’சவால்’ எனும் வாரப்பத்திரிகை ஒன்றையும் மோர் நடத்தியுள்ளார். சிபிஎம் மோர் அவர்களை ’நீலவானில் செந்தாரகை’ என
பதிவிட்டுக்கொண்டது.
அனுபமா பார்வையில் சுபோத் பேரன் தரும் சித்திரம் மோரை தலித் மார்க்சியம் எனும் விரிவான கருதுகோளுடன் பிணைக்கிறது. தன் முன்னுரையில் ’தலித் பம்பாய்’ எனும் ஒன்றை அனுபமா விவரிக்கிறார். பம்பாயின் கட்டுமானம் என்ற விரிவை இது பெறுகிறது.
1872-1881ல் பம்பாய் நோக்கிய தலித்களின் பயணம் 66 சதம் உயர்ந்துள்ளது. அங்கு சென்றடைந்தவர்களின் வாழ்க்கை முழு போராட்டமாகவே இருந்திருக்க முடியும். மோர் அவர்களின் பம்பாய் ஆரம்ப வாழ்க்கை தெருவோரபடுக்கை- நண்பர்கள் அறைகளில் ஒடுங்கிகொள்தல் என்பதாக இருந்துள்ளது.
வீட்டு வாடகை கொடுக்கமுடியாத நிலையில் கட்டைவண்டி ஒன்றில் பாலத்திற்கு அடியில் வாழ்க்கை என அப்பா குறித்து சத்யேந்திரா சொல்கிறார். இந்த நிலையில் அவர்களை பாலத்திற்கு அருகில் டி எஸ் வைத்யா எனும் பம்பாய் கட்சித்தலைவர் தனது தோழர் ஒருவருடன் பார்க்கிறார். தனியாக மோர் துணைவியார் அமர்ந்திருப்பதை பார்த்து நம் தோழன் குடும்பம் இல்லையா என விசாரிக்கிறார். மோர் துணைவியார் சொன்ன நிலையைக்கேட்டு கண்ணீர் வடித்தார் எனச் சொல்கிறார் மகன் சத்யேந்திரா. அவர்களின் அரசியல் வாழ்வு இப்படித்தான் வறுமையுடனான போராட்டமாகவே கடந்தது என சத்யேந்திரா சொல்வதைப் பார்க்கிறோம்.
Docks பக்கம் போய் நின்று தினக்கூலி வாழ்வும் அனுபவமாகியுள்ளது. இதை அனுபமா குறிப்பிடும்போது
More presents a social world teeming with figures for whom class exploitation, caste humiliation, and gendered violence exist as social fact of daily life: the association between dalit as a caste identity and dalitness as a general condition of abjection and destitution is fungible and we see here a from of empathetic identification with the wretched and destitute lives that are an essential part of Bombay's landscape.
Friend's Union என்ற பெயரில் மோர் மார்க்சிய லெனினிய வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். Lal chawl Red Tenement என்கிற குடியிருப்பு பகுதிதான் வகுப்புகள் டெலிஸ்லே சாலையில் நடந்த இடம். கம்யூனிஸ்ட் தலைவர் எஸ் வி தேஷ்பாண்டே, பாபுராப் கரூட், பார்கவ் சோனாவானே போன்றவர்கள் வகுப்பு எடுக்க வந்தனர்.. மாதுங்கா தொழிலாளர்களை திரட்டுவதில் கே எம் சால்வியுடன் மோர் பணியாற்றினார்.
பம்பாயில் ஏழை உழைப்பவர்களின் வீடுகள் இருந்த நிலையை அனுபமா விவரிக்கும்போது எங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை என்பது படிப்பவர்களுக்கு நினைவில் வந்து ஒப்பிடச்சொல்லும்.
அம்பேத்கருடன் உறவும் உரசலும் கம்யூனிஸ்ட்களுக்கு பம்பாயில் இருந்தது. சில நேரம் காங்கிரசாரும் கம்யூனிஸ்ட்களும் அம்பேத்கரை antinational என பேசியதும் உண்டு. அதேபோல் கம்யூனிஸ்ட்கள் மீது அம்பேத்கருக்கும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. அம்பேத்கர் ஆதரவாளர்கள் 1935லேயே முனிசிபல் காம்கர் சங்கம் துவங்கி அதில் மொத்த ஊழியர்களில் 5 சத அளவு உறுப்பினர்களை கொண்டிருந்தனர். ரயில்வேயில், கப்பல் பகுதி தொழிலாளர்களை அவர்கள் திரட்டாமல் இல்லை. அம்பேத்கரின் அய் எல் பி மார்க்சிய தாக்கம் கொண்டிருந்தது என ஜெயஸ்ரீ கோகலே சொல்வதும் இப்புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது. அதேபோல் ராவ்சாகேப் கஸ்பி Ambedkar Anti Marx எழுதியதையும் அனுபமா சுட்டிக்காட்டுகிறார். தோழர் மோர் இந்த conflict and convergence எனும் இந்தக் கால வரலாற்றுடன்தான் பயணித்துள்ளார்.
கொங்கன் பகுதி நிலப்பிரபுக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் அம்பேத்கரும் கம்யூனிஸ்ட் தலைவராக உருவான எஸ் வி பாருலேகரும் செயல்பட்டுள்ளனர். பாருலேகரை கட்சிக்கு கொண்டுவந்த சேர்த்தவர்களில் ஒருவர் தோழர் மோர் என்கிற செய்தி கிடைக்கிறது. 1938 தொழிற்சங்க தகராறு சட்டத்தின் போதும் அம்பேத்கருடன் கம்யூனிஸ்ட்கள் கரம் கோர்த்தேயிருந்தனர். 1942ல் வேறுபாடுகள் உருவாயின.
அம்பேத்கர் தன் ஐ எல் பியை அனைத்திந்திய செட்யூல்ட் காஸ்ட் பெடெரேஷன் ஆக மாற்றம் செய்திருந்தார். பிரிட்டிஷாருடன் விவாதிக்க இந்த மேடை அவருக்கு தேவையாக இருந்தது. சிலநேரம் தொண்டர்கள் மத்தியில் மோதல் கடுமையாகக்கூட இருந்தது. ஹரிஜாதவ் என்கிற கம்யூனிஸ்ட் தோழரை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு அடித்த காட்சியை மோர் மகன் சத்யேந்திரா சொல்கிறார். What analysis might emerge when we priorotise the social experience of the dalit in the place of Proletariat என்கிற சவாலான கேள்வியை இந்த புத்தகம் இந்திய மார்க்சியர்களிடம் முன்வைப்பதையும் காணலாம்.
1953ல் தோழர்
மோர் பொருளாதார மாற்றங்கள் வந்தால் சாதி ஒழிந்துவிடும்
என்ற உரையாடலை கேள்விக்குள்ளாக்கினார். சத்யேந்திரா party protocol governing dissent பற்றி
குறிப்பிடும்போது கட்சிக்குள் ஒருவர் சுதந்திரமாக தன்
கருத்தை வைக்க உரிமை உண்டு-
ஆனால் அதை அவர் வெளியில்
தெரிவிக்க முடியாது என்பதை மோர் அனுபவத்திலிருந்து
சொல்கிறார். மோர் விடாப்பிடியாக கட்சியின் மூத்த தலைவர்களாக
இருந்த அஜாய்கோஷ், இ.எம்.எஸ், ரணதிவே, பசவபுன்னையா ஆகியோரிடம் சாதி – வர்க்கம் பிரச்னையை
விவாதித்துள்ளார்.
அம்பேத்கருக்கு
தோழர் மோர் மீது கோபம்
இருந்ததா எனக் கேட்டால் சத்யேந்திரா
தரும் பதில் கோபமில்லை என்பதாக
கிடைக்கிறது. மோரை அம்பேத்கர் பாராட்டியே
வந்ததாக சத்யேந்திரா சொல்கிறார். இப்படியொரு கேள்வியை அம்பேத்கர் மோரிடம் வைத்ததாகவும் சொல்கிறார்.
“ I wonder whether the Communist Party
which belongs to Brahmins, will appreciate your dedication and honesty? அதாவது பிராமணர் கட்சியாக இருக்கும் அதில்
உன் நேர்மை மதிப்பை பாராட்டை பெறுமா?.
அம்பேத்கர்
தன் கட்சியின் வேட்பாளராக மோர் நிற்கவேண்டும் எனச் சொன்னபோது அதை மோர் ஏற்கவில்லை.
இருந்தபோதிலும் அம்பேத்கர் மோரின் திறமையை அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்தபோதும்
தன் ஜனதா பத்திரிகையில் பயன்படுத்த விழைந்தார். அவரை எடிட்டோரியல் குழுவில் இணைத்தார்.
1945 ஐ எல் ஓ மாநாட்டிற்கு மூத்த தொழிற்சங்கத் தலைவர் என் எம் ஜோஷியுடன் மோர் பாரிஸ்
சென்றார். இந்த ஏற்பாட்டில் தொழிலாளர் அமைச்சர் என்கிற வகையில் அம்பேத்கரின் பங்களிப்பு
முதன்மையானது. பாரிஸ் மாநாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் தொழிலாளர்களின் பிரத்யோகப் பிரச்னைகளை
மோரால் எடுத்து வைக்க முடிந்தது.
இந்த புத்தகம் தலித் கம்யூனிஸ்ட் வரலாறாகவும், அதேநேரத்தில் பம்பாயின் ஓரப்பகுதி வாழ் மக்களின் கதையாக- அவர்களின் உரையாடலாக செயல் குறித்த பதிவாகவும் இருக்கிறது என்பது அனுபமா தரும் அறிமுகம். மார்க்சியம் போன்ற உலக விடுதலை குறித்து உலகளாவியம் குறித்து பேசும் செயல் தத்துவம்- பம்பாயின் ஓரப்பகுதி மக்களால் எப்படி உள்வாங்கப்பட்டது என்பது குறித்த பதிவாகவும் இந்த புத்தகத்தை பார்க்கலாம்.
8-5-2022
Comments
Post a Comment