https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, May 19, 2022

NFHS 5 சர்வே

                                                                                     NFHS 5

NFHS 5 என்கிற தேசிய நல்வாழ்வு குடும்ப நலன் சர்வே வெளியாகியுள்ளது. 700 பக்கங்களுக்கும் மேலான பெரிய அறிக்கை. ஜூன் 2019 மற்றும் ஏப்ரல் 2021 கால இடைவெளியில் 6.36 லட்சம் குடும்பங்கள்- 7.24 லட்சம் பெண்கள் மற்றும் 1.01 லட்சம் ஆண்களிடமிருந்து சர்வே நடத்தப்பட்டு முடிவை தொகுத்து தந்துள்ளனர். 707 மாவட்டங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

 1992-93 துவங்கி நடத்தப்படும் இந்த சர்வே தனது 5வது தொகுப்பை மார்ச் 2022ல் வெளியிட்டுள்ளது.குடும்பங்களுக்கான நீர் வசதி, சுகாதார சூழல், கழிவுநீர் போக்கு வசதி, கழிப்பறை தன்மை, வீட்டு தரை, மேற்கூரை தன்மை, சுவர், வீட்டுத்தளவாடங்கள், நல்வாழ்வு, காப்பீடு, நிலம், கொசுவலை, குழந்தைகள் 18 வயதுக்குள் விவரம் இன்னும் பல தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஜனன மரண பதிவு, ஆதார் கார்டு பெற்றமை, புகையிலை- போதை வஸ்து-உடல் அங்க ஹீனம்- டிபி போன்ற நோய்த்தன்மை, எரிபொருள் அடுப்பு வசதி, கல்வி- பள்ளி சூழல், மதம், சாதி, மீடியா பழக்கம், பேறுகால விவரம், ருதுவான பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு தடுப்பு முறைகள், நல்வாழ்வு பணியாளர் உறவுகள், மணம்- உடலுறவு தொந்திரவுகள்- பலதார மணம்- கணவன் பின்புலம்- பெண் வேலை சூழல் போன்றவைகளுடன் :

பெண் முடிவெடுக்கும் நிலை- வங்கி கணக்கு, செல்போன், மருத்துவமனை வசதிகள், எச் ஐ வி, குடும்ப வன்முறை நிகழ்வுகள், ஆண் பெண் குழ்ந்தைகள் உயரம், வயது, எடை, ஹீமோகுளோபின், இடுப்பு, இரத்த அழுத்தம்- இரத்த சோதனைகள், இரத்த சோகை, மலேரியா காய்ச்சல் போன்ற பல்வேறு விவரங்களை தரவுகளை நம்பத்தகுந்த  -  data quality- மூலம் தந்துள்ளதாக அதன் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 27929 குடும்பங்கள் மூலம் இந்த சர்வே பெறப்பட்டுள்ளது.  அகில இந்தியா முழுதும் எடுக்கப்பட்ட இந்த சர்வே மூலம் அவர்கள் தரும் சில முக்கிய முடிவுகள்:

96 சத மக்களுக்கு குடிநீர் வசதி உள்ளது

59 சத குடும்பங்கள் சுத்தமான எரிபொருளை சமைக்க பயன்படுத்துகின்றனர்

சூழல்சுத்தம் என்றால் 69 சத குடும்பங்களுக்கே அமைந்துள்ளது

90 சதம் ஆதார் பெற்றுள்ளனர்

96 சதம் வங்கி அல்லது அஞ்சலக கணக்கு இருக்கிறது.

95 சத ஊரக குடும்பங்கள் மின்வசிதி பெற்றுள்ளன.

89 சத ஜனன பதிவும், 71 சத மரணப் பதிவும் நடந்துள்ளன

3 சத குழந்தைகள் அநாதைகள் 

நர்சரி செல்ல்லும் 2-4 வயது குழந்தைகள் 40 சதம்

ஆரம்ப பள்ளியில் வருகை 83 சதம், உயர் பள்ளி எனில் 71 சதம்

புகையிலை பழக்கம் ஆண்களில் 38 சதம், பெண்களில் 9 சதம்

36 சத குடும்பங்களில் கொசுவலை

வடிகட்டியோ காய்ச்சியோ குடிநீரை குடிக்கும் குடும்பங்கள் 31 சதம்

69 சத குடும்பங்கள் பகிர்வு கழிப்பறையை பயன்படுத்தவில்லை. தனியாக வைத்துள்ளனர். 

19 சதம் இன்னும் திறந்தவெளி கழிப்பு முறைதான்.

52 சத குடும்பங்களுக்கு சிறு அளவாவது நிலம். 

உழுவதற்கு மாடுகள்  வைத்திருக்கும் குடும்பங்கள் 58 சதம் .

கை கழுவ 75 சத குடும்பங்கள் சோப் பயன்படுத்துகின்றனர்

பெண் தலைமை கொண்ட குடும்பங்கள் 18 சதம்- 

வீட்டில் 60 வயதுக்கு மேலானவர் 12 சதம். இது சென்ற சர்வேவிட கூடியுள்ளது. ஆனால் 15 வயதிற்கு குறைவானவர் என்பது குறைந்துள்ளது.

குடும்பத்தில் முன்னர் 4.6 உறுப்பினர் இருந்தால் இந்த சர்வேயில் 4.4 ஆகியுள்ளனர்.

ஏழை குடும்பத்தில் ’பள்ளி ஆண்டுகள்’ எனப் பார்த்தால் ஆண் 3.7 years   பெண் 0.4 years. சற்று வசதி கூடியவர் குடும்பக் கணக்கில் இது 10 , 9.3 என இருக்கிறது. வசதி இருந்தால் பள்ளி ஆண்டுகள் கூடுதல் என்ற நேர்விகிதம்.

எல்பிஜி வாயு கிராமங்களில்  பயன்பாடு 42.3  சத குடும்பங்களில். கெரோசின் 0.4, விறகு 43.7 சதம், கரி 1.0, புல் வைக்கோல் 2 சதம்,  சாண விராட்டி 5.7

மேம்பட்ட சானிடேஷன் எனும் சுற்றுப்புற தூய்மை சர்வேயில் தமிழ்நாடு 72.6 என்றால் பாண்டி 84.9, கேரளா 98.7, ஆந்திரா 77.3, அந்தமான் 88, கர்நாடகா 74.8, தெலங்கானா 76.2 என தென் இந்தியாவில் இருப்பதைக் காணலாம். ஒப்பீட்டில் தமிழ்நாடு மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அறியமுடிகிறது.

 ஊரகப் பகுதி வாழ் இந்து குடும்பங்கள் 74 சத கழிப்பிட வசதி பெற்றவர் எனில் இஸ்லாமியர் 85.4, கிறிஸ்துவர் 87.2, சீக்கியர் 96.7, புத்தர்கள் 82.8, ஜைனர்கள் 88.1 பெற்றுள்ளனர். இதில் இந்து குடும்பங்கள் மேலும் விழிப்பும் கழிப்பிட வசதியும் பெற வேண்டிய அவசியமுள்ளது.  சாதி எனப்பார்த்தால் எஸ்சி குடும்பங்களில் 71.2, எஸ் டி 65.1, பிசி 75.7, பிறர் 87.8 குடும்பங்கள் இந்த வசதியை கொண்டுள்ளன.

 தமிழ்நாட்டில் ஊரக குடும்பங்களில் 71.7 சதம், பாண்டி 79.7, அந்தமான் 94.8, ஆந்திரா 80.3, கர்நாடகா 75.9, கேரளா 99.8, தெலங்கானா 83.1 சதம் ’டாய்லட்’ வசதி பெற்றுள்ளன. இதிலும் தமிழ்நாடு கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

சமைக்க தனி இடம் உள்ள குடும்பங்கள் 48.8, வேறு கட்டிடங்களில் 13.7, திறந்த வெளி 9.9, வீட்டிற்குள் தனி இடமென்று இல்லாமல் 27.3 சத குடும்பங்கள்

 சமையல் தினம் எனும் குடும்பங்கள் ஊரகப் பகுதியில் 27.5 சதம், வாரத்தில் எப்பவாவது என்கிற குடும்பங்கள் சதம் 8.8, அடுப்பு மூட்டா குடும்பங்கள் 54.6 சதம் என அறியும்போது இந்தியா போகவேண்டிய தூரம் குறித்த கவலை மேலிடுகிறது. ஆட்சியாளர் தங்கள் பொறுப்பைக் கூட்டிக்கொள்வார்களா?

wealth quintiles  எனும் வசதி குறியீட்டை நலிந்தவர், ஏழைகள், நடுவானவர், சற்று உயர்ந்தவர், உயர்ந்தவர் என 5 பகுதிகளாக சர்வே எடுத்துள்ளனர். இந்திய சராசரி முறையாக 20: 20 :20 :20 :20  Gini coefficient 0.20  என்பதை வைத்துக்கொண்டு கணக்கிட்டுள்ளனர். தென் இந்தியா பகுதிகளில்

 அந்தமான் 12.3,24.4,22.7,23.3,17.3 என்று கினி 0.22 ஆக இருக்கிறது. கேரளா 0.8, 4.7,17.9.36.5,40.1 கினி 0.10 ஆக இருந்து முன்னேறியதைக் காட்டுகிறது. கர்நாடக 7.3,18.2,28.4,27.2,19 கினி 0.16 என 50 சதம் முன்னேற வேண்டியதைக் காட்டுகிறது. தமிழ்நாடு 4.8, 15.2, 26.4,29, 24.6 என 45 சதம் குடும்பங்களில் கவனம் செலுத்த வேண்டியதைக் காட்டுகிறது. தெலங்கானாவிட ஆந்திரா இதில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாநிலமாக இருக்கிறது. கேரளா முன்னேறிய மாநிலமாக தெரிகிறது

இந்த சர்வேயை உள்நுழைந்து தேடுவோர் இந்திய கிராமங்கள் வாழ் குடும்பங்களின் வளர்ந்து வரும்- வளரவேண்டிய சமூக பொருளாதார ஆரோக்கிய காரணிகளை காட்டும். போகவேண்டிய திசையை  ஒரளாவது சர்வே காட்டியுள்ளது. இனி திட்டமிடுவோர் அதற்கு முகம் கொடுத்து சீர் செய்ய முன்வரவேண்டும்.

19-5-2022


No comments:

Post a Comment