மெளலானா ஆசாத்தும் இந்திய ஒற்றுமையும்- பெருங்கனவு
திரு ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றின் தலைப்புதான் Azad and The Unity of India. அவரது உரையை 1992ல் கலாச்சார உறவுகள் கவுன்சில் வெளியிட்டது. மெளலானா அவர்களின் வாழ்க்கை ஒருவகையில் நமக்கு தேவையான இந்திய செய்தியாகவும் இருக்கிறது. அமைதி, நட்புறவு, பரஸ்பர நல்லெண்ணம்- ஒத்துழைப்பு, மானுடம் ஒன்றே என்ற மனவிரிவு என்பதுதான் அச்செய்தியின் சாரம். இதை தன் வரவேற்புரையில் டாக்டர் சங்கர் தயாள் சர்மா குடியரசு துணைத்தலைவராக குறிப்பிட்டிருந்தார்.
மெளலானா இதயமும் மூளையும் இணக்கப்படுத்திய அபூர்வ தலைவர். பன்மொழி, பல சமய, ஏராள சமூக பழக்க வழக்க இந்தியா என்பதை அவர் தீவிரமாக உணர்ந்தவராக இருந்தார். மதம் வேர் பற்றியிருக்கும் மெக்காவிலிருந்து அவரது வாழ்வு துவங்கியது. குடும்பத்திற்கு அடக்கமான மகன் தான் ஆனாலும் ஆங்கில கல்வியின் அவசியம் என்பதில் அழுத்தமான உணர்வையும் பெற்றார்.
அரபி கற்று குரானின் சுராக்களை அறிந்தவராக ஆகிட சூழல் உதவியது. இஸ்லாமிய கல்வியில் ஒருவர் 20 ஆண்டுகளில் பெறவேண்டிய தேர்ச்சியை தனது 15 ஆம் வயதில் மெளலானா பெற்றார் எனில் அவரது ஆர்வத்தையும் கற்றல் திறனையும் நம்மால் உணரமுடியும்.. அவரின் பெர்சிய மற்றும் உருது மொழித்திறனும் மேம்ப்பட்டவையாக இருந்தன.
சூபி அறிதலும், சர் சையத் அகமதுகான் அவர்களின் கல்வி ஏற்பாட்டு அணுகுமுறைகளும் இளம் மெளலானவை ஈர்த்தன. மரபார்ந்த விரிவுரைகளை பொருத்தமாக வெளிப்படுத்துவதில் தவறில்லை என்பதை அவரது நவீன அறிதல் முறை அவருக்கு உணர்த்தத் துவங்கியது. அவரால் பெர்சிய மொழியாக்க பைபிளை மட்டுமின்றி ஆங்கிலவழி பைபிளையும் படிக்காமல் இருக்க முடியவில்லை. மெளலானா இந்து, யூத, பார்சி இலக்கியங்களையும் கற்கலானார். பகாய் எனும் நாத்திகவாத சிந்தனைக்குள்ளும் அவர் சென்று வந்தார்.
ஷாஜகானின் புதல்வர், அவுரங்கசேப் தமையன் தாராசுகோ குறித்து மெளலான கட்டுரை ஒன்றை எழுதினார். தத்துவங்களுடன் குறிப்பாக சூபி சிந்தனையாளர்களுடன் தாரா உரையாடிய தன்மையை மெளலான எடுத்து வைத்தார்.
முஸ்லீம் லீக் துவக்கப்பட்ட 1906ல் மெளலான டாக்காவில் இருந்தார்.. அவருக்கோ வங்க புரட்சியாளர்கள் ஈர்ப்பு. ஆனால் அவர்களில் பலர் இந்துக்கள். மெளலானாவின் கூர்மதியால் அவர் உள்வட்டத்திற்குள் செல்ல முடிந்தது. 1912ல் அல் ஹிலால் எனும் பத்திரிகையை அவர் துவங்கினார். பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்குள்ளாகி 1914ல் பத்திரிகை நின்றது.
நபிகள் வாழ்க்கை நிகழ்விலிருந்து இந்து- முஸ்லீம்கள் One nation என்பதை ஆசாத் சொல்லத்துவங்கினார். அவர் இவ்வாறு எழுதினார்.
“
If I say that the Muslims of India cannot perform their duty unless they are
united with the Hindus. It sisin accordance with the tradition of the prophet
who himself wanted to make a nation of Muslims and non- Muslims"
மகாத்மா காந்தி அவர்கள் தன் அனுபவத்தில் இப்படி சொன்னதைப் பார்க்கிறோம்
Hinduism
is not an exclusive religion. In it there sis room for the worship of all the
Prophets in the world...Hinduism tells everyone to worship God according to his
own faith or Dharma and so it lives at peace with all religions"
மகாத்மாவின் இந்த புரிதலை ஆட்சியாளர்கள்- இன்றைய அரசியல் இழக்கும்போது என்ன நேரிடைகிறது என்பதை நாம் வாழும் இந்நாட்களில் கண்டுவருகிறோம்.
ஆசாத்தின் 1920 சிறைவாசம் ராஞ்சியில் தர்ஜூமான் எனும் குரான் மொழியாக்கத்தை அவர் எழுத உதவியது. ஆசாத் இப்படி எழுதினார். கடவுள் விரும்பியிருந்தால் உலகம் முழுக்க ஒரே மக்கள் என்பதாக இருந்திருப்போம். பல பிரிவான மனிதர்களாக அவர் நம்மை சோதிக்கலாம். நாம் நமது நற்காரியங்களில் மட்டும் போட்டியிடலாம். வேறுபாடுகளை அதிகமாக்கும் போட்டிகள் வேண்டாம்.
சிறைவாசத்திற்குப் பின்னர் காந்தியுடன் நெருக்கம் உறவு உருவானது. அவரின் அகிம்சை- ஒத்துழையாமை ஆசாத்தை ஈர்த்தது. முஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றாக போராடுவது என்பது உத்தி சார்ந்த ஒன்றல்ல- அது இயற்கையான விழைவாகட்டும் என்றார் ஆசாத்.
ஆசாத்திற்கு இளம் வயதிலேயே அற்புத வாய்ப்பு 1923ல் கிட்டியது. காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரையாற்றினார். அவரது உரையில் தெறித்த அற்புத வரிகளை திரு ஆர்.வி அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
“
If an angel descends from the heavens today and proclaims from Qutb Minar that
India can attain swaraj within 24 hours provided I relinquish my demand for
Hindu- Muslim Unity, I shall retort to it: No my friend , I shall give up
Swaraj- but not Hindu Muslim Unity, for if Swaraj is delayed, it will be loss
for India- but if Hindu- Muslim unity is lost, it will be a loss for the whole
of mankind"
1935
GOI சட்டப்படி
1937 தேர்தல் நடந்தது. உ.பி மந்திரிசபையில் முஸ்லீம்லீக் பிரநிதிகள் இருவராவது இடம்பெறவேண்டும் என்ற பேச்சுவார்த்தை ஆசாத் முயற்சியால் நடந்தது. காங்- லீக் இணைந்து வேலை என்பது நல் உதாரணமாக அமையும் என்கிற சிந்தனை ஆசாத்திடம். காங்கிரசில் இருந்தவர்கள் ஓரிடம் என நிலைமையை சற்று விபரீதமாக்கினர். அப்போது ஆசாத் இந்த அனுபவத்தை வேதனையுடன் இவ்வாறு பதிவிட்டார்
All students of Indian politics know that it
was from UP that the League was reorganised. Mr Jinnah took full advantage of
the situation and started an offensive which ultimately lead to Pakistan" இது சரியா
இல்லையா என்பதை வரலாறு தீர்மானித்துக்கொள்ளும் என தன் உரையில் இதை ஆர்.வி தொட்டுக்காட்டினார். அதாவது ஒற்றுமைக்கான வழிகளை எதன் பொருட்டும் அடைக்காமல் இருக்க முடியுமா என்பது ஆசாத் கருத்தில் மேலோங்கி நிற்பதை காணமுடியும்.
ராம்கர் காங்கிரஸ் 1940 மாநாட்டிலும்
ஆசாத் தலைமையுரை ஆற்றினார். அதில் இஸ்லாம் 11 நூற்றாண்டுகளுக்கு
முன்னர் தனது சிறந்த விழுமியங்களையும்
கூடவே சேர்த்துக்கொண்டுதான்
இங்கே இம்மண்ணில் தன்னையும் ஒன்றாக வைத்துக்கொண்டது. ஆசாத் மொழியிலேயே சொன்னால்:
We brought our tresures with us and India too
was full of riches of her own precious heritage. We gave her what she needed.
The most precious gifts from Islam's treasury, the message of human equality.
Full eleven centuries have passed since then. Islam has now as great a claim on
the soil of India as Hinduism" தங்கள் கிட்டங்கியிலிருந்து அற்புதமான சமத்துவம் என்ற இந்திய சமூகத்திற்கு தேவைப்பட்ட கொடையை இஸ்லாம் வழங்கியது. இந்தியாவின் உயர் வளத்துடன் இஸ்லாம் தனது உயர் வளத்தையும் இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சேர்த்து இந்துயிசம் போலவே சமதையான உரிமையாளராக இஸ்லாம் இருப்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது.
கிரிப்ஸ் தூதுக்குழுவினரிடம் காந்தி, நேருவிற்கு இணையாக ஆசாத்தும் இந்தியா எனும் ஒன்றுபட்ட கருத்தாக்கத்தை உங்கள் மொழிவுகள் சிதைத்துவிடும் என எடுத்துரைத்தார். கிரிப்ஸ் நிராகரிப்பை காங்கிரஸ் மூலம் செய்யவைத்தார் ஆசாத். 1942 குவிட்
இந்தியா காலத்தில் ஆசாத்தும் அகமதுநகர் சிறைவாசத்தில் வைக்கப்பட்டார். அவரது இருண்ட சிறைக்குள் மேலும் மனத்தாக்குதலாக வந்தது துணைவியார் ஜூலைகா அவர்களின் மரணம் எனும் துயர். இக்காலம் காந்தியின் கஸ்தூர்பாவும் துயரைவிட்டுச் சென்ற காலம்.
ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கை தீவிரமானது. இருதேச கோட்பாடு வலுவாக பேசப்பட்டது. முஸ்லீம் நியமனம் என்றால் அதை காங்கிரஸ் செய்யக்கூடாது என்ற குரலும் வந்தது. ஆசாத் இந்தியர் அனைவரும்
ஒன்றே- ஒரே தேசம் எனப் போராடி பார்த்தார். தன் தியாகம் அதற்காக பெரும் பொருட்டல்ல என செயல்படலானார்.
காங்கிரஸ் செயற்குழுவில் ஜூன் 14, 1947ல் பிரிவினை வேண்டாமே- சுதந்திரம் பெறுவது தள்ளிப் போனாலும் பரவாயில்லை என அவர் பேசிய குரலுக்கு வலு சேரவில்லை. இந்த அரசியல் தோல்வி நமது கலாச்சார பிளவினையும் கொண்டுவந்து சேர்த்துவிடக்கூடதென்றார்.
Ensure that our culture is not divided
என்ற தனிக்குரலை அவர் எதிரொலித்தார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை தான் குரான் வழிப்பட்டே சொல்வதாக அவர் பேசிவந்தது அவரின் பெரும் தனிச் சிறப்பாக பார்க்கப்பட்டது.
மெளலானாவுடன் நன்கு பழகிய அவரது தனிசெயலராகவும் இருந்த டாக்டர் ஹுமாயுன் கபிர் சொல்வார் “
He was the personification of the collective pride of the Indian
Republic"
மெளலான
அபுல் கலாம் ஆசாத் கல்வி அமைச்சராக இருந்தபோதும்
அரசியலமைப்புசபை வாதத்திலும்
கல்வி யூனியன் பட்டியலில் இருப்பதை விழைந்தார். விடுதலை இந்தியாவின் பரந்த ஒற்றுமை என்பதே அதன் உள்ளீடாக இருந்தது. ஒன்றுபட்ட இந்தியா பிளவுபடாமல் இருந்திருக்க வேண்டும் என்கிற விழைவை அவர் எப்போதும் தன் இதயத்தில் சுமந்தவராக இருந்தார். அன்று
பிளவுண்ட இந்தியா வரலாற்றின் பகுதியாகிவிட்டது. விடுதலைக்குபின்னரான
இன்றைய இந்தியா தனது புதல்வர்களின்
ஒற்றுமை விழைவை காக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
ஆசாத் eclectic human beings என்ற வகைப்பட்டவராக வாழ்ந்தார்.
ஞானம் என்பது பெரும்பரப்பு - எவரின் ஏகபோகத்திற்குள்ளும்
அது அடங்குவதில்லை என உணர்ந்தவராக இருந்தார். ஆசாத்துகள் பெருகுவது
இந்திய எதிர்காலத்திற்கு நற்பேறு..
23-5-22
Comments
Post a Comment