Skip to main content

ஹெகல் சிந்தனையில் இந்தியா

 

                    ஹெகல் சிந்தனையில் இந்தியா  

Hegel's India A Reinterpretation with Texts by Aakash Singh Rathore and Rimina Mohapatra என்கிற ஆக்கம் வந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன.  OUP  வெளியிட்டுள்ளனர். ஹெகலின் சிந்தனைக் கூடத்தில் இந்தியா பெருமளவு இடம் பெற்றுள்ளது என்பதை நிறுவும் புத்தகமாக ஆகாஷ்ரதோரும், ரிமீனா மகோபாத்ராவும் எழுதியுள்ளனர்.  அவர்கள் ஹெகலின் இந்திய சிந்தனைகளை 80 ஆயிரம் வார்த்தைகளில் முதல்முறையாக கொணர்ந்துள்ளதான தகவலைத் தருகின்றனர்.



இந்திய சாதிகள் குறித்து பெரும் விமர்சகராக ஹெகல் இருந்துள்ளார். சில காலம் இந்திய சிந்தனைகள் அவரை ஆட்டிப்படைத்துள்ளன. அவரது முழுமுதலானது என்கிறஅப்சல்யூட்’ ஒருவகை பிரம்மனா என்கிற கேள்வியையும் அவர் வினவிக்கொண்டிருந்திருக்கிறார்.



 பிராம்மண ஆசிரியர்கள் என்போரின் ஆதி எழுத்துக்களை சந்தேகத்துடன்தான் அணுகவேண்டும் என்ற எண்ணம் ஹெகலிடம் இருந்திருக்கலாம். பெரும்பான்மையினரை மிக தாழ்ச்சியாக நடத்தியவர்களின் எழுத்துக்களை அப்படி பார்க்கவேண்டிய அவசியம் இருப்பதாக ஹெகல் கருதியிருக்கக்கூடும்- அவர்கள் படித்தவர்கள் என்ற வகையில் பிறரை உயர்த்தியிருக்கவேண்டும்- ஆனால் அடிமைப்படுத்திவிட்டனர் (enslaving rather than elevating people)  என்கிற பார்வை ஹெகலிடம் படிந்தது.

அழகான வரிகளையும் ஆசிரியர்கள் தருகின்றனர்.  Hegel's procedure in the Phenomenology is that the nature of a religion informs the nature of its people and polity. அதாவது மதம் அதன் இயல்பில் தன் மக்கள் குறித்தும் அதன் பின்னரான அரசியல் பற்றியும் காட்டிவிடும்.

பினோமெனலாஜியில்  இயக்கவியல் பற்றி சிறு உதாரணத்துடன் ஹெகல் அழகாக விளக்குவார். மொட்டு, பூ, பழம் என்பது ஒன்றிலிருந்து ஒன்று நிலைமறுத்து வந்தாலும் அவை அடுத்தடுத்து வரும் கட்டங்களாக அதே தாவரத்தின் தங்களுக்குள்  elements of an organic unity கொண்டு உருவாவதை சொல்வார். எனவே இங்கு ஹெகல் பேசுவது  annihilation  அல்ல. மாறாக picking up and preservation .  இதனை ஹெகல் result contains in essence that from which it results எனப்பேசுவார். இன்னும் சொல்லப்போனால் அங்கு  not ending in nullity  but it results in knowledge  என்கிற புரிதல் கிடைக்கும் என்கிறார் ரதோர்.

 வரலாற்றின் தத்துவத்தில் ஹெகல் நல் அரசு என்பதை உண்மையில் தனிமனிதர் எவருக்குமான சுதந்திர அனுபவிப்புத்தான் என்று சொல்வார். அதாவது அரசின் அத்தனை நிறுவனங்களும் எதற்கெனில்  actualization of freedom  என்பதற்குத்தான் என ஹெகலை புரிந்துகொள்ளலாம்.

என்சைக்ளோபீடியா வேலையில் ஹெகல் ஈடுபட்டிருந்தபோது அவரது இந்திய தேடல் கூடியதாக சொல்லலாம். அவரிடத்தில் வில்ஹெல்ம் ஹம்போல்டின் பகவத்கீதை 1826ல் கிடைத்தது. ஹம்போல்ட் எழுதியதைவிட பெரிதாக ஹெகல் அதற்கு ரிவ்யூ எழுதினார். அதைப் பார்த்துவிட்டு ஹம்போல்ட் பிப்ரவரி 25, 1827ல் அவருக்கு பதிலும்  எழுதியுள்ளாராம். தனது எழுத்தை பொதுப்பார்வையில் பரவலாக சேர்த்தமைக்கு ஹம்போல்ட் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் 1828ல் வேறு ஒரு நண்பர்க்கு எழுதும்போது நான் தத்துவவாதியில்லை என நிறுவ ஹெகல் முயன்றுள்ளார் என தன் வருத்தத்தையும் ஹம்போல்ட் பதிவு செய்துள்ளதாகவும் அறிகிறோம்.

இந்திய கலை, மதம், தத்துவம் மீதான எதிர்மறை மற்றும் விமர்சனப் பார்வையை ஹெகல் கொண்டிருந்ததால் அவரது இந்திய எழுத்துக்கள் அகாடமிக் வட்டாரங்களில் பெரிதாக எடுத்துகொள்ளப்படவில்லை என ராபர்ட் பெர்னாஸ்கோனி எழுதியுள்ளதாக ரதோர் தெரிவிக்கிறார்.

ஹெகலின் Philosophy of History, The Philosophy of Art, the Philosophy of Religion and the History of Philosophy  என அனைத்திலும் அவர் இந்தியா குறித்து பேசியிருப்பதாகவும் அவை பொதுவாக  negative, critical and dismissive  என்கிற முடிவிற்கு இந்த ஆசிரியர்கள் வந்துள்ளனர். ஹெகலுக்கு நேரிடையாக  இந்திய மொழிகள் எதிலும் பரிச்சயமில்லை.  இப்படி அவர் மூல பிரதிகளை பார்க்காமல் கருத்துக்களை வெளியிட்டதால் அவர்மீதுஇனவாதி’நடிப்பு புலமையாளர்’ என விமர்சனங்கள் எழுந்தன. வில்ஹெல்ம் ஹல்ப்ஃபாஸ் என்பார் ஹெகல்பூமியை’ அய்ரோப்பியமயமாக்க முயற்சிக்கிறார் என விமர்சித்தார். அதேபோல் நமது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்  Hegel related the past history of thought as a collection of errors over against which stood out his own idealism as the truth என விமர்சித்தார்.

அவரது அய்ரோப்பிய மய்ய வாதம் என்பது அவர் மீதான முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக இருந்தது. கார்ல் பாப்பர் போன்றவர்கள் நாஜிகள் தங்கள் இனவாதத்தை ஹெகலிடமிருந்து பெற்றனர் என விமர்சித்தனர். அவர்தான் நாஜிசத்திற்கான பார்முலாவைத் தந்துள்ளார் என்ற விமர்சனமும் அவர் மீது வால்டர் காப்மானால் வைக்கப்பட்டது.

ஹெகலுக்கும் ஷெலிகல் எனும் அறிஞருக்குமான தத்துவப்போரில் இந்தியா களமாக்கப்பட்டுவிட்டது என ஹெகல் எழுத்துகளை வர்ணிப்போருமுண்டு.

ஹெகலுக்கு ஹம்போல்ட் எழுதிய  On the Episode of Mahabharata known by the name Bhagavad Gita  என்பதும் வில்கின்ஸ் அவர்களின் கீதை மொழிபெயர்ப்பிற்கு அப்போதிருந்த இந்திய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் எழுதிய முன்னுரையும் கிடைக்கிறது. ஹம்போல்ட்டும்- ஷெலிகெலும் கீதையின்  wisdom  மீது ஆக உயர்ந்த பார்வையைத் தருவதை ஹெகலால் ஏற்க முடியவில்லை. ஹேஸ்டிங்க்ஸ் அதை அய்ரோப்பியர்களுக்கு ஒருவகை  obscurity, absurdity, barbarian customs, depraved morality  உடைய பாட்டுக்கள் என அறிமுகப்படுத்துவதையும் அவர் silly warning   என ஹெகல் நிராகரித்துவிடுகிறார். வில்கின்ஸ் பார்வையில் சற்று மேலான மதிப்பீடுகளே தரப்பட்டதையும் ஹெகல் பார்க்கிறார். நேரிடையாக இல்லாவிடினும் அந்த பிரதி வேதங்களை  challenge  செய்ததாக வில்கின்ஸ் நினைத்தார்.

புரூக் என்பார் ஒரு கேள்வியை ஹெகலை நோக்கி வைக்கிறார். முதல் என்சைக்ளோபிடியாவிலிருந்து இரண்டாவது எடிசனில் 1827ல் இந்தியா குறித்து அவர் விரிவாக எழுதினார் என்பதை தவிர இந்திய சிந்தனைகள் ஹெகலிடம் என்ன மாறுதலை உருவாக்கின- ஏதுமில்லை என பதிலை புரூக் தருகிறார்.

ஹெகலின் இந்திய சிந்தனையை பேசவந்த ஹெர்லிங் என்பார் இந்திய சமயப்பட்ட சிந்தனை பழமைவாய்ந்த அதன் innocent pastல் இல்லை-  European presentல் தான் உட்கார்கிறது என எழுதினார்.

ஹெகலின் தீராத தேடலை குறித்து இந்நூலாசிரியர்கள்  பாராட்டி சொல்கின்றனர். உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் சிந்தனைகளை எப்படியாவது கண்டு அதை ஒரே இடத்தில்  compendium of complete knowledge  ஆக்கவேண்டும் என்பதில் ஹெகல் முனைப்புடன் செயல்பட்டார். இதன் விளைவுதான் அவரின் என்சைக்ளோபீடியா முயற்சி என்பதைக் காண்கிறோம்.

ஹெகலின்அப்சல்யூட்’ என்பது lifeless  உலகமன்று. இந்த உலகமே இருப்பவர்களால் உருவாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது என்றுதான் அவர் கருதினார்.. அதாவது இதில் உண்மை என்பது அவருக்கு mediation தான். எல்லாமே செயல்கள் மூலம் கூடுவதுதான். அவரின்முழுமுதல்’ என்பது தேங்கி அப்படியே நிற்கும் ஒன்றல்ல.

இந்திய சிந்தனையை அவர் ஒருவகை மயக்கநிலை delirious bliss in opium  என காட்டுகிறார். அதுசோம்னாபுலர்’ தூக்கத்தில் நடப்பது என்கிறார். அதன் முரண்களை இவ்வாறு சொல்கிறார்.

The dreaming Indian is therefore all that we call finite and individual- and at the same time- as infinitely universal and unlimited- something intrinsically divine "  எனக் காட்டுகிறார். ஹெகல் கண்டடைந்த அடுத்த புள்ளியாக இந்நூலாசிரியர்கள் சொல்வது  a lack of recognition of freedom and inward morality in Indian thought  எனப் பார்க்கமுடிகிறது. அதாவது சுதந்திரமின்மையும்- உள்ளான நெறியின்மையாக ஹெகல் பார்த்துள்ளார் என இந்நூல்வழி அறிகிறோம்.

இந்நூலசிரியர்கள் வேறு ஒரு ஒப்புமையும் தருகிறார்கள். ஹெகல் இந்தியாவில் அறியப்பட்டவராக இருந்தாரோ இல்லையோ புத்தர், கபீர், ரவிதாஸ், துகாராம், குருநானக் போன்ற முன்னோடிகளின் சிந்தனைகளும் தற்காலத்திய பூலே, அயோத்திதாஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியவர்களின் பிராம்மணர் குறித்த விமர்சனம்- சாதி குறித்த விமர்சனங்கள் ஹெகல் செய்வது போல இருக்கிறது. இதை இந்நூலாசிரியர்கள் அவரின் எழுத்துக்களிலிருந்து பெறுகின்றனர்.

Hegel finds in Indian religious symbolism "the unbeautiful, the mad, the fantastic character of the art.Hegel argues, quite unequivocally, that the fundamental basis,in every form of religion, is that "God is essentially Spirit"; on the contrary, we see in Indian religion depictions of God in a natural existence.

But Indian thought still dwells in the "region of caprice, confusion and feebleness subject- into this measureless splendor and enervation.

Brahma is the most distant unity, the self enclosed unity. Second Vishnu is manifestation , is life in human form. The fundamental characteristic of shiva is on the one hand the prodigious life force, on the other what destroys, devastates the wild energy of natural life

  நான் பிரம்மன் என்பதை ஹெகல் தன் பார்வையில் பேசுகிறார். அது அப்ஸ்ட்ராக்ஷன் - மனிதன் தன்னை ஒருமுகப்படுத்திகொள்ளும் சிந்தனை. அக்கடவுளை எவரும் வழிபடுவதில்லை. அவருக்கு பொதுவாக கோயில்கள் இல்லை- பூசைகள் இல்லை. இந்துவிடம் உருவ வழிபாடா எனக்கேட்டால் சந்தேகமின்றி ஆமாம் என்பார். எப்படி வழிபடுவாய் எனக் கேட்டால் மனதை மொழியை சிந்தையை கட்டுகுள் வைத்து கண்ணைமூடி தியானிப்பேன் என்பார். நானே பிரம்மன் என்பதை உணர்வேன் என்ற பதிலும் கிடைக்கும்.  இந்த முரணை ஹெகல் கொணர்கிறார்.

ஹெகல் மானுட சுதந்திரம் என்பது   being with himself not in emptiness, but in willing, knowing, acting  என்று விளக்குவார். ஆனால் இந்துவிற்கோ  complete submergence and stupefaction of the consciouness is what is highest, and who maintains himself in this abstraction and has died to the world is called a yogi"

Brahmans those born again, twice born through birth, first naturally, and then as thinking men. This is a profound idea. The thought of man is looked upon here as the source of his second existence, the root of his true existence, which gives to himself by means of freedom"

  பின்னர் மனுநீதி சொல்லும் தண்டனைகள் பற்றி ஹெகல் பேசுகிறார். இந்திய மதம் என்பது காரணகாரிய அறிவிற்கு பொருத்தமில்லாத பல மூடநம்பிக்கைகளையும் சடங்குகளையும் கொண்டு நகர்வதை சொல்கிறார். கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறும் சதி பற்றி சொல்கிறார்.. சுதந்திரமற்ற வாழ்வு- வாழ்வின் மதிப்பறியா ஓர் முறை என சாடுகிறார்.

இந்திய சிந்தானா மதவழிப்பட்ட   இந்தப் போக்கு அவருக்கு பெரும் தொந்திரவை தந்துள்ளது. All that is indifferent is fixed, while all that belongs to right and morality is thrown away and abandoned to caprice- a condition inherently justified, and was always merely a condition on sufferance, a contingent and a perverted one

பகவத்கீதையில் கிருஷ்ணன் பேசுவதைக் குறிப்பிட்ட ஹெகல் அதை expression of Pantheism- அனைத்தும் இறையுருவே எனும் விவரிப்பு  என்கிறார். சுப்ரீம் ஸ்பிரிட்டில் பேசும் கிருஷ்ணன் எழுப்பும் வாதத்தால் முன்னர் புகழுடன் இருந்த சிவா, இந்திரன் போன்ற பிற தெய்வங்கள் முக்கியத்துவம் இழப்பதாகின்றன.

இந்து தத்துவம் என்பது featureless unityக்கும்  abstract thoughtக்கும் இடையேயான முறிவாக இருக்கிறதென்றார் ஹெகல். மேலும் கடும் விமர்சனங்களை அவர் முன்வைக்கிறார். அதை monstrous inconsistency  மற்றும் maddest of polytheisms என்கிறார்.

இந்திய தத்துவத்தின் தன்மைகளாக ஹெகல் புரிதலை இவ்வாறு வரிசப்படுத்திக்கொள்ளலாம்.

தனிமனிதர் உணர்வு என்பதற்கு இடமில்லை. அதில் சுதந்திரம் குறைவு

’சப்ஜக்டிவிடி’ என்பது தூக்கலாக இருக்கிறது

சமய கருத்துக்கள் individualised  எனும் நிலையில் இல்லை

அங்கு பிரம்மா, விஷ்ணு, சிவா எனக் கடவுளர் பலர் இருந்தாலும்  individual forms of divinity  இருந்தாலும் அங்கு individuality இல்லை

Dry dead understanding  இருப்பது போன்ற சிலவற்றை ஹெகலை முன்வைத்து இந்நூலாசிரியர் விவரிக்கிறார்.

வேறு ஓர் இடத்தில் அதன் உயர்ந்த கலாச்சாரம் என்கிற மதிப்பீட்டை தந்துவிட்டு அதன் தத்துவம் சமயமாக அடங்கிப்போவதை ஹெகல் சொல்கிறார்

Hegel's remark that all Indian philosophical systems, whether atheistic or theistic, were united

 in their ultimate aim: to seek "the means whereby eternal happiness can be attained before, as well as after, death a stage characterized by pure bliss and limitlessness:

சாங்கியம் வேதமரபை மறுத்தல் என்பது கால்நடைகளை வேள்விக்கு உட்படுத்தி அழித்தல் என்பதில் இருக்கிறது. அதன் சிந்தனை மீதான நாட்டம் - விஞ்ஞான தேடல் ஹெகலுக்கு ஈர்ப்பை தந்தன.

இந்திய சிந்தனை மரபை கேலி பேசும் வகையில் ஹெகல் மரியாதையற்ற மொழியில் விமர்சித்திருப்பது நியாயமாகாது என ஹெர்ரிங் என்பார் விமர்சித்துள்ளார்.

300 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஆரம்ப 90 பக்கங்கள் ஹெகலின் இந்திய பிரதிகள் குறித்து இந்நூலாசிரியர்கள் புரிந்துகொண்ட எழுத்துக்களாக அமைந்துள்ளன. மீதியுள்ள பக்கங்களில் ஹெகலின் Texts கொடுக்கப்பட்டுள்ளன .

1. On the episode of mahabharata known by the Name  Bhagavad Gita

2. Philosophy of History

3.Lectures on the Philosophy of Fine Art

4.Lectures on the Philosophy of Religion

5. The Philosophy of Mind

6. Lectures on the History of Philosophy

7. Fragments: Oriental Spirit, Logc and Right

 என அவர் பிரதிகளை இப்புத்தகத்தில் ஆசிரியர்கள் இணைத்துள்ளனர். அவர் எழுத்தை அவ்வளவு எளிதாக படிக்க முடியவில்லை. அந்த அளவில் முதல் 90 பக்கங்களில் ரதோரும், ரிமீனாவும் என் போன்றவர்க்கு தங்கள் பெரும் உழைப்பின் மூலம் உதவியுள்ளனர். இந்த ஆசிரியர்களின் விவரிப்புகளில் ஹெகல் பிரதிகளை நேரிடையாக படிப்போர்க்கு வேறுபாடு கூட வரலாம். ஆனால் இந்தியாவின் பழம் சிந்தனைகள் குறித்து பெரும் சிந்தனையாளரான ஹெகலின் பார்வை என்ற அளவில் இந்த புத்தகம் தன் தத்துவ இடத்தை எடுத்துக்கொள்ளலாம்.

8-5-2022

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...