Skip to main content

M N Roy V

விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் V பகுதி 5
உலகப்போர் மூலக்கூடாது என்பதை காங்கிரஸ் 1927முதலே பேசத்துவங்கியது. பிரிட்டிஷ் எதிர்ப்பில் காங்கிரசின் ஊசாலாட்ட அணுகுமுறை குறித்து இடதுசாரிகளின் 4 பிரிவுகளுக்கும் விமர்சனம் இருந்து வந்தது. காங்கிரசின் வலது பிரிவு ஒத்துழையாமை என பேசிவந்தது. 1939ல் காங்கிரசின் மத்திய செயற்குழு முடிவை அமைச்சர்கள் ஏற்க நேர்ந்தது. அனைவரும் அமைச்சரவையிலிருந்து விலகி கொண்டனர்.  ராய் பாசிச ஜெர்மனி எதிர்த்த பிரிட்டிஷ் யுத்தம் என ஆதரவு தெரிவித்தார்.  யுத்தத்தின் போக்கை பார்த்து நடுநிலைமை நியூட்ரல் நிலை என பேசத்துவங்கினார்.  காங்கிரஸ் அமைச்சரவை விலகல் என்பதையும் அவர் ஏற்கவில்லை. மக்களை காக்கும் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் அரசாங்கம் விலகக்கூடாது. அதே நேரத்தில் விடுதலைக்கான இறுதி போராட்டத்திற்கான வாய்ப்பாக யுத்த சூழலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.  பலவீனப்படுத்தப்பட்ட அமைச்சரவையால் மக்களின் சிவிலுரிமைகளை காக்கமுடியாது என ராயிடம் காந்தி தெரிவித்துவிட்டார்.
காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் யுத்தத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினர். யுத்த எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றனர். அமைச்சரவை ராஜினாமா சரியானதே என்றனர். காந்தியடிகள் அறைகூவலுக்கு காத்திருப்பது, அவசியமெனில் சத்தியாக்கிரக போராட்ட அறைகூவலை சோசலிஸ்ட்கள் சார்பில் அறிவிப்பது என்ற முடிவையும் அவர்கள் எடுத்தனர். ஏகாதிபத்தியம் எதிர்த்த தேசிய போராட்டம் என்றார் ஜெயபிரகாஷ். யுத்த காலத்தில் நடுநிலை என்பது சரியல்ல, நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு சூழலை புரட்சிகரமாக மாற்றவேண்டும். வேலைநிறுத்தங்கள், வரிகொடா இயக்கம், மக்கள் போராட்டங்களை காங்கிரஸ் கட்ட முன்வரவேண்டும். பார்வார்டுபிளாக், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் தனியாக கொடுக்கும் அறைகூவல் மக்கள் ஈர்ப்பு போராட்டமாக அமையாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜோஷி அறிக்கை வெளியிட்டார். 1940-42 கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் சுபாஷ்போஸ் லெனின், முசோலினி இருவருமே கொண்டாடப்படக் கூடியவர்கள் என்ற கருத்திலிருந்தார்.  சோசலிசம்- பாசிசம் ஒத்திசைவு உருவாக்கம் குறித்து பேசி. வந்தார்.  செப்டம்பர் 8 1939 வார்தா கூட்டதிற்கு போஸ் அழைப்பாளராக வந்தார். காங்கிரஸ் அமைச்சரவை தானாக விலகியிருக்கக்கூடாது, கலைக்கப்பட வைத்திருக்கவேண்டும். அதுதான் சரியான போராட்ட தந்திரமாக இருந்திருக்கும் என்றார். யுத்த நெருக்கடி அற்புதமான விடுதலை போராட்ட வாய்ப்பை நல்கியிருக்கிறது. காங்கிரஸ்  முடிவெடுக்காவிட்டால் பார்வர்ட்பிளாக் தனது பாதையை தேர்ந்தெடுக்கும் என்றார்.  கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள் போலவே ஆட்சிஅதிகாரம் வந்தபின்னர் அரசியல் அமைப்பு அசெம்பிளி என்றார். கம்யூனிஸ்ட்கள் போஸ் அணியினரை விமர்சித்தனர். இடது போல முழங்கினாலும்  ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சீர்குலைவு வேலைகளை செய்கிறார்கள் என்றனர். போருக்கு பின்னர் ஏகாதிபத்தியம் நீர்த்து வலுவிழக்கும் என்ற ராயின் கருத்தை போஸ் விமர்சித்தார்.
நேரு இடதுசாரிகளுடன் சேர்ந்து உடனடி சிவில் ஒத்துழையாமை என பேசினார். படேல், பிரசாத், ராஜாஜி ஒத்துழையாமைக்கு நாடு தயாராகவில்லை என்ற காந்தியின் கருத்தை பிரதிபலித்தனர். இந்த காலத்தில் முஸ்லீம் லீக் தனது பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை நிறைவேற்றி தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது. வைஸ்ராய் லின்லித்கெள காந்தியுடனும் ஜின்னாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் என்பதில் எந்தவித சமரமும் இல்லை என ஜின்னா அறிவித்தார். இடைக்கால அரசாங்கம் என்பது ஏற்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு என்பதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என  காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. வைஸ்ராய் கவுன்சில் என்பதை ஜின்னா ஏற்கலாம் என்றார். இந்துமகாசபாவும் ஏற்கலாம் என்றது. காந்தி நிராகரித்தார். இந்திய பிரதிநிதிகள், மன்னர்கள் பிரதிநிதிகள் கொண்ட யுத்த ஆலோசனை குழு என்பதையும் வைஸ்ராய் முன்மொழிந்தார்.
யுத்தம் தொடர்பாக சமாதானம்- அமைதி உள்ளிட்ட கருத்துக்களை  பேசிட சுதந்திரம் இல்லையேல் சத்தியாக்கிரக போராட்டம் என காந்தி பேசினார். உடனடி கோரிக்கை விடுதலையல்ல பேச்சுரிமை என்றார் காந்தி. ஜூன் 1941 கணக்கின்படி 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரசார்கள் கைதாகினர். போருக்கு எதிராக என்ற புரிதலில் போராட்டத்திற்கு ஆதரவு குறைவது போல் காந்தி உணர்ந்ததால் அக்டோபரில் போராட்டத்தை விலக்கி கொண்டார். சத்தியாகிரகம் மக்கள்திரள் ஒத்துழையாமையாக மாறாததில் ராய் ஏமாற்றமடைந்தார். கம்யூனிஸ்ட்களும், போசிஸ்ட்களும் சிறைநிரப்ப ஆர்வப்படுவதுபோல் தங்களால் முடியாது என்றார். காங்கிரசை லட்சக்கணக்கான பெயரளவு உறுப்பினர்கள் கட்சி என்பதிலிருந்து கேடர்கள் கட்சியாக மாறிடவேண்டும் என பேசத்துவங்கினார். பாசிச எதிர்ப்பு போரிலே வெற்றிபெற சர்ச்சில் தலைமையில் அமைந்த புதிய பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.  தான் ஆர்வமாக செயல்பட்ட LRCயை RDP என்கிற   தீவிர ஜனநாயக கட்சியாக 1940 டிசம்பரில் பெயர் மாற்றம் செய்தார். NDU National Democratic Union என்கிற பரந்த மேடை அமைத்து அதில் இந்துமகாசபா, சுயராஜ்யகட்சியினர், செட்யூல்டு பட்டியல் சம்மேளனம் போன்றவை வந்து சேரவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார். ராயின் முயற்சிகள் பலனளிக்காதது மட்டுமின்றி அவர் நடைமுறை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்ற கருத்தும் பரவியது.
AITUC அமைப்பிலும் ஏற்பட்ட கருத்து  மோதல்களால் பாசிச எதிர்ப்பு தொழிற்சங்க கவுன்சில் என்ற ஒன்றை ராய்குழுவினர் அமைத்தனர். 1941நவம்பரில் இந்தியன் பெடரேஷன் ஆப் லேபர் உருவாக்கினர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் மத்தியில் உறவுகளை பலப்படுத்த  பாகிஸ்தான் கோரிக்கையை கொள்கை அளவில் பரிசீலிக்கலாம், ராய் கூறுவது போல ராஜ்ய அரசாங்கங்களை புதுப்பிக்கலாம் என்ற கருத்தை ராஜாஜி தெரிவித்தார். 1942 ஏப்ரலில் காங்கிரஸ் ராஜாஜியின் கருத்தை நிராகரித்தது. அவர் கட்சியிலிருந்து விலகினார். ஜெர்மனியின் சோவியத் தாக்குதலுக்கு பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்தியாவில் கைதாகி சிறையிலிருந்த தலைவர்களுக்கும் வெளியிலிருந்த தலைவர்களுக்கும் புரிதலில் கருத்துவேறுபாடு இருந்தது. சோவியத்திற்கு ஆதரவு என்பதையும் பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலை போராட்டம் என்பதையும் ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்து இருந்தது. 1942 துவக்கத்தில்  Foreword to Freedom  கட்டுரையில் P C  ஜோஷி  தேசிய அரசாங்கம் என்பதை தெரிவித்தார். நிலைமை மக்கள் யுத்தமாக மாறிவிட்டது என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராயை பிரிட்டிஷ் ஏஜெண்ட் எனவும் வர்ணித்தது. காந்தியைவிட நேரு- ஆசாத்தை பிரிட்டிஷ் ஜனநாயகவாதிகள் நம்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு தீர்மானம் குறித்தும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கமிட்டியில் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சி என்றனர். பாசிச ஆபத்தை முறியடிக்க தேசத்தில் அனைவரின் ஒற்றுமை என்ற முழக்கத்தை வைத்தனர்,  சோவியத் மீதான தாக்குதல் என்பதாலேயே யுத்தத்தின் தன்மை மாறிவிடாது என்று காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்களை விமர்சித்தனர்.  ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் ஆன பிரச்சனைதான்  யுத்தம் என ராய் கூறியதையும் முட்டாள்தனமானது என சோசலிஸ்ட்கள் விமர்சித்தனர். ருஷ்யா வந்ததாலேயே ஏகாதிபத்திய யுத்தம் மக்கள் யுத்தமாக மாறிவிடாது என்றனர்.. பிரிட்டிஷார் வெளியேறட்டும் இந்தியாவின் தலைவிதியை நாம் முடிவுசெய்துகொள்ளலாம் என நரேந்திரதேவ் முழங்கினார்.
பாசிச எதிர்ப்பில் சோவியத்தின் பங்குபாத்திரம் மிக முக்கியமானது என்பதை தொடர்ந்து சொல்லி வந்தார் ராய். பிரிட்டன் சோவியத்துடன் அணிசேர்ந்துள்ள நிலையில் பிரிட்டனுடன் ஒத்துழைக்கமுடியாது என்ற நிலை எடுப்பது சரியல்ல என்றார் ராய். அகிலம் தன்னை அங்கீகரிக்கவில்லை என தெரிந்தபோதும் தனது சோவியத் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்து செய்தி அனுப்பினார்.  தான் மீண்டும் சோவியத்தால் அங்கீகரிக்கப்படலாம்  என்ற அவர் நம்பிக்கைக்கு பலன்கிட்டவில்லை. சோவியத் வழிகாட்டுதல் கம்யூனிஸ்ட்களை  மக்கள் யுத்த முழக்கத்திற்கு கொணர்ந்தது. பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு நேரு தலைமை தாங்கவேண்டும் என ராய் வேண்டுகோள் விடுத்தார், வெள்ளையனே வெளியேறு சூடுபிடித்தது. ராய் குழுவினரும், கம்யூனிஸ்ட்களும்  பங்கேற்கவில்லை. சோசலிஸ்ட்கள் அவ்வியக்கத்தில் தங்களை நாயகர்களாக மாற்றிக்கொண்டனர்.
போஸ் 1941 துவக்கத்திலேயே இந்தியாவை விட்டு வெளியேறினார். கிரிப்ஸ் தூதை நிராகரிக்க வற்புறுத்தினார். போஸ் அமைத்த ஆசாத் ஹிந்த் அரசாங்கம் ராயின் ஜப்பான் அய்யப்பாடுகளை அதிகரித்தது. நேரு கிரிப்ஸ் முன்மொழிவுகளை விவாதித்து முடிவிற்கு வரவேண்டும் என ராய் அணியினர் வற்புறுத்தினர். நேரு, ஜின்னா, ராஜாஜி, அம்பேத்கார், ராய் ஆகியோரை கொண்ட யுத்தகால தற்காலிக அரசாங்கம் அமைக்கலாம் என்ற ஆலோசனையை ராய் அணித்தலைவர் தார்குண்டே  தெரிவித்தார். அவரது ஆலோசனை ஏற்கப்படவில்லை.


1942ன் இறுதியில் நடந்த  தங்கள் ஆர்டிபி(RDP) கட்சி மாநாட்டில் அரசியல் அமைப்பு சட்டப்படி சுதந்திர இந்தியா, நுகர்வோர் கூட்டுறவு இயக்கம், சிறந்த வகையிலான   தொழிற்சங்கங்க நடவடிக்கை போன்ற திட்டங்களுடன் மக்கள் சந்திப்பு இயக்கம் என ராய் அணியினர் முடிவெடுத்தனர். தேசிய ஜனநாயக புரட்சி பொருத்தமில்லாதது என ராய் பேசிவந்தார். தொழிலாளர்- விவசாயிகளுக்கான சமூக திட்டம்தான் இனி மையமாக இருக்கவேண்டும் என்றார் ராய். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை ராய் கைவிட்டாலும் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது குறித்தும் அவருக்கு விமர்சன பார்வை இருந்தது. அனைவருக்கும் வாக்குரிமை, தல அரசாங்கம், கூட்டுறவு இயக்கம், ஊரக வளர்ச்சிதிட்டம், கிராமங்களில் கலாச்சார கல்வி மேம்பாடு போன்றவற்றை மக்களிடம் எடுத்துசெல்ல  ஆதரவு திரட்ட  பொருத்தமான மக்கள் கமிட்டி அமைப்புகளை வலுப்படுத்துதல் என ராய் முன்மொழிந்தார். ஆரம்ப ஆண்டுகளில் கொடியில் காணப்பட்ட அரிவாள் சுத்தியல் என்பதையும் அவர் எடுத்துவிட்டார்.  Flaming Torch என்பதை பொறிக்க துவங்கினார். 

Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு