https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, January 16, 2017

Review :Makers of Modern India- Ramachandra Guha

வரலாற்றசிரியர் ராமசந்திர குஹா தொகுத்த Makers of Modern India நவீன இந்தியாவின் சிற்பிகள் என தமிழ்வடிவில் திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகம் 2014ல் வெளியிட்ட புத்த்கம். கிண்டில் தமிழ் புத்தக வரிசையில் கிடைத்ததால் படிக்கமுடிந்தது. விலை ரூ 400. ஆங்கில புத்தகம் 270ல் கிடைக்கலாம்.

மகாத்மா காந்திஜவாஹர்லால் நேருபி.ஆர். அம்பேத்கர், · ராம்மோகன் ராய்ரவீந்திரநாத் தாகூர்பாலகங்காதர திலகர், பெரியார், · முகம்மதுஅலி ஜின்னா,· சி.ராஜகோபாலச்சாரி,· ஜெயப்பிரகாஷ் நாராயண்,· கோபாலகிருஷ்ண கோகலே,· சையது அகமது கான்,· ஜோதிராவ் ஃபுலே,· தாராபாய் ஷிண்டே,· கமலாதேவி சட்டோபாத்யாய், · எம்.எஸ்.கோல்வல்கர்,· ராம் மனோகர் லோஹியா,· வெரியர் எல்வின்,· ஹமீத் தல்வாய்  என 19 பெரியவர்களின் முக்கிய சொற்பொழிவுகள், கட்டுரைகள் என கருதப்பட்டவை அவர்கள் குறித்த் குஹாவின் முன்னுரையுடன் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. அற்புத சிந்தனை தெறிப்புகளை அனைத்து முன்னோடிகளின் பேச்சு- எழுத்தில் ஒருவர் காணமுடியும்.  அவர்கள் நமது நாட்டின் மக்கள் வளர்ச்சிக்காக சமுக நல்லிணக்கத்திற்காக மத ஒற்றுமைக்காக, ஒடுக்கப்பட்டவர்பால் மிகுந்த கரிசனத்துடன் பேசியவை காணப்படுகின்றன. இது மாதிரியான தொகுப்பு ஒன்றை ராமசந்திரா தான் கொணரவேண்டும் என்பதில்லை. எவர் வேண்டுமானாலும் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் அதற்கான Resources- அதில் பொருத்தமான தேர்வு என்பதில் ராமசந்திராவின் நவீன இந்தியா குறித்த – வரலாற்றுப் பார்வை, தவிப்பை நம்மால் உணரமுடியும்.

தமிழில் இப்படிப்பட்ட நூல்கள் நமது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள உதவும். ஒருவருக்கு எதிராக தொடர்ந்து மற்றவரை நிறுத்தி அவர்கள் போராடிய காலச்சூழல், தேவைகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளாமல் சிலரை புனிதப்படுத்தி மற்றவரை வில்லனாக்கும் பார்வையிலிருந்து இப்புத்தகம் மாறுபட்டு நிற்கிறது. அவரவர் முயற்சியில் நாட்டின் முழுமையான அல்லது பகுதிசார்ந்த மேம்பாட்டிற்கான அப்பெருமகனார்களின் முயற்சி - சில மிக உயர்ந்த அவர்களின் பேச்சு- எழுத்துக்களை குஹா காட்ட முனைந்திருப்பது பாராட்டிற்குரியது. கோல்வால்கரை சேர்க்க முடிந்த அவரால் எந்தவொரு கம்யூனிஸ்ட் போராளியையும் சேர்க்கமுடியாமல் போனதேன். விடுதலைக்கு முன்பாக பிரிவுகளாக இயங்கினாலும் சோசலிஸ்ட்கள், போஸ் என இட்துபிரிவினரை எடுத்துக் கொண்டவர் சோவியத்- கோமிண்டர்ன் சொற்படி கேட்டவர்கள் என்பதால் பிற இரு இட்து பிரிவுகளாக இருந்த எம் என் ராய், கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொள்ளாமல் விட்டதை ஏற்க முடியவில்லை. அவர்களிடம் எந்த ஒரிஜினாலிட்டியையும் குஹா காணவில்லையா – அவர்கள் மேற்கூறிய தலைவர்கள் போல் சுயமாக சிந்திக்காதவர்கள் வகையினரா என்ற கேள்விகள் எழும்புகின்றன. இதற்கான பதிலை குஹா தனது முன்னுரையில் ஆம் அவை இறக்குமதி கொள்கைகள் என்கிறார். மார்க்சியம் மட்டும் இப்புத்தகத்தில் இடம் பெற வைக்கப்படவில்லை என்கிறார்.  மற்றவர் எவருக்கும் எந்த வெளிநாட்டிலிருந்தும் சிந்தனையாளர்கள் பாதிப்பு இருக்கவில்லையா? டால்ஸ்டாய், தோரோ, கரிபால்டி, மாஜினி என சிந்தனைப் பற்றாதவர் எவர். ஆங்கில ஆட்சியின் ஊடாக வளர்ந்த மேற்கித்திய சிந்தனையாகத்தானே சம்த்துவம், சுதந்திரம் , சகோதரத்துவம் வந்தது. அய்ரோப்பிய சிந்தனைகள்  ஊடும்பாவுமாக இத்தலைவர்களை கவ்வி பற்றவில்லையா?  இப்புத்தகத்தில் மார்க்சியம்- அதை பிடிவாதமாக ப்ற்றிகொண்டு செயல்பட்ட ஏதாவதொரு தலைவர் பற்றி சொல்லியிருக்கலாம். கேரளாவில் அனுபவமான நம்பூதிரி, சிந்தனையாளர் தாமோதரன், அச்சுதமேனன் அல்லது மேற்கு வங்க 25 ஆண்டுகள் ஆளும் அனுபவத்துடன் வாழ்ந்த ஜோதிபாசு  என எடுத்து பேசியிருக்கலாம். விவசாய புரட்சி குறித்த பேச்சுக்கள் இடம் பெற்றது போல் தொழிற்சங்க இயக்கத்தில் வாழ்ந்த முன்னோடிகள் டாங்கே , ரணதிவே ,கம்யூனிஸ்ட் அல்லாத என் எம் ஜோஷி, என எவரையாவது எடுத்து அவர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கலாம். எம் என் ராய் எடுத்து அவரின் மார்க்சியம் சார்ந்த, கம்யூனிசத்திற்கு அப்பால் என்பதை பேசியிருக்கலாம். மார்க்சிய  எழுத்துக்களுடன் தொடர்புடையவன் என்ற வகையில் இப்புத்தகத்தில் குறையாகபடுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்புத்தகம்  நேரமுள்ளவர்களால் படிக்கப்படுவது அவசியமானது..

No comments:

Post a Comment