Skip to main content

P C JOSHI பி சி ஜோஷி

 P  C  ஜோஷி
                              -ஆர்.பட்டாபிராமன்
ஜோஷி தனது 28ஆம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட்அரசியல் இயக்க  தலைமை பொறுப்பிற்கு வந்தவர்.   கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பை துணிச்சலுடன் எடுத்துக் கொண்டவர். நூற்றுக்கும் குறைவாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடுதலையின் நெருக்கத்தின் போது 80 ஆயிரமாக உயர்த்தியவர். பன்முகத் தன்மை கொண்ட பல்வேறு பிரிவுகளுடன் விவாதித்து நெருக்கமாக விழைந்தவர். எழுத்தாளர், கலைஞர், கவிஞர், அறிவாளிகள், விஞ்ஞானிகள் என தோழமை கொண்டவர். நாட்டின் விடுதலை குறித்த பார்வை உட்கட்சி சச்சரவுகளால் தனது தலையாய இடத்தை பறி கொடுத்தவர். அவரது தேசிய முன்னணி என்கிற அரசியல் முன்னெடுப்பு அன்றுள்ள சூழலில் விவாதங்களை கிளப்பியது.
ஜோஷி அல்மோர எனும் இமாலய அடிவாரத்தில் எப்ரல் 14, 1907ல் பிறந்தவர். முழுப்பெயர் பூரண சந்திர ஜோஷி. தந்தையார் பண்டிட் ஹர் நந்தன் ஜோஷி தலைமை ஆசிரியராக இருந்தவர். தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தார். தாயார் மாலதிதேவி. ஜோஷியின் 10வது வயதில் நோய்வாய்பட்டு இறந்தார்.
அன்றுள்ள சூழலில் மற்ற அனைவரையும் போல் பள்ளிகளில் காந்தி குறித்த பேச்சறிந்தார் ஜோஷி. சுயராஜ்யம் என்ற முழக்கம் பாலகன் ஜோஷியிடம் விடுதலை தாகத்தை எற்படுத்தியது. மீரட் மாவட்டம் ஹபூரில் தனது மெட்ரிக்  கல்வியை 1920 ல் முடிக்கிறார். இண்டர்மீடியட்டில் சமஸ்கிருதத்தில் தங்க மெடலை பெறுகிறார். 1924ல் அலகாபாத் பலகலை கழகத்தில் பொருளாதாரம், ஆங்கிலத்தில் பட்டம் பெறுகிறார். 1928க்குள் MA LLB ஆகிறார்.

அலகாபாத் நகரம் மதன்மோகன் மாளவியா தாக்கத்திலும் மோதிலால் நேரு தாக்கத்திலும் இருந்த நேரமது. மோதிலால் பக்கம் நிற்பவராக ஜோஷி மாறுகிறார்.. கதர் ஆடையுடன் நவஜவான் பாரத்சபா உறுப்பினராகிறார். ஜவஹர்லால்நேரு தலைமையில் செயல்பட்ட அலகாபாத் இளைஞர் கழக உறுப்பினராகிறார். ஆனந்த்பவன் ஈர்ப்பு மையமாகிறது. 1928 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் பிரச்சினைகளில் நேருவின் நிலைபாட்டில் ஜோஷி அதிருப்தியுற்றார்.  அல்மோர மாவட்டம் சார்ந்த அப்தர் அலி என்கிற தொழிற்சங்க தலைவர் மூலம் அவருக்கு ரஜினி பாமித்ததின் “நவீன இந்தியா” எம்.என்.ராயின் இந்திய அரசியலின் எதிர்காலம் போன்ற எழுத்துக்கள் கிட்டின.  எம்.என் ராய் மீது மரியாதை ஏற்பட்டது. தோழர் ரஜினி பாமிதத் எங்கள் வழிகாட்டியானார் என ஜோஷி பின்னர் குறிப்பிடுகிறார். லேபர் மன்த்லி கிடைக்கிறது.
மீரத்தில் செப் 1928ல் விவசாய தொழிலாளர் கட்சியுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார் ஜோஷி. அதன் இணைச்செயலராகிறார். சர்தேசாய், பரத்வாஜ் போன்றவர்களின் தோழமையும் கிட்டுகிறது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான மரியாதை உயர்கிறது. பிலிப் ஸ்பிராட், பென்பிராட்லியுடன் விவாதங்கள் நடைபெறுகின்றன. பிலிப் கேம்பிரிட்ஜ் பட்டதாரி. பிராட்லி பொறியியல் தொழிலாளி பகுதியிலிருந்து கட்சிக்கு வந்தவர். கட்சி அமைப்பை கட்டுவது குறித்த பயிற்சியை அவர்கள் தந்தனர். காந்தி குறித்த எதிர்மறை கருத்துக்களே தரப்பட்டுவந்தது.
பிரிட்டிஷார் 1929ல் தொழிற்த்கராறு சட்டம் மூலம் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்தனர். 1929 மார்ச்சில் போராடிய அனைத்து முக்கிய தலைவர்கள் டாங்கே,காட்டே, மிராஜ்கர், அதிகாரி, முசாபர், தாரணி, பிராட்லி, ஸ்பிராட் என 31 தோழர்கள் விசாரணை கைதிகளாகினர். 22 வயதான ஜோஷியும் விடுதியிலிருந்து தூக்கி வரப்பட்டார். மீரத் சதிவழக்கு என பின்னர் இது வரலாற்றில் இடம்பெற்றது. மோதிலால் தலைமையில் தோழர்கள் பாதுகாப்பு கமிட்டி ஒன்ற காங்கிரஸ் அமைத்தது. காந்தி நேரிடையாக வந்து சிறையில் தோழர்களை சந்தித்தார். சிறையை மார்க்சிய கல்விக் கூடமாக தோழர்கள் மாற்றினர். அனைவரும் தங்களை சாதியற்றவர்கள் என பதிவுசெய்து கொண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கண்டன உரைகளை வழக்கு விசாரணயின்போது வெளிப்படுத்தினர். சோசலிச புரட்சி என பேசினர்.

ஹிரன்முகர்ஜி ஆங்கில புலமையை அனைவரும் அறிவர்.  ஜோஷி மிக நேர்த்தியாக  ஆங்கிலத்தில்  ஆவணங்கள் உருவாக்குவதில் தேர்ச்சியை காண்பித்தார் என ஹிரன் பதிவிடுகிறார். சிறையில் மிக பணிவுடன், இணக்கமாக நடப்பவராக ஜோஷியிருந்தார். அவரின் தோட்டப்பயிற்சி பாராட்டை பெற்றது. 1933ல் வெளிவந்த பின்னர் தொடர்ந்து ஜோஷி கட்சி வேலைகளில் ஈடுபட்டார். டெக்ஸ்டைல் தொழிலாளர் போராட்டம் மீண்டும் இரு ஆண்டுகள் சிறைக்கு அவரை அனுப்பியது. இம்முறை துணிவெளுத்தல், தோட்டவேலைகள் தரப்பட்டன.
தோழர்கள் ரணதிவே போன்றவர்கள் தந்த தீவிர முழக்கங்களால் கட்சியில் பிரிவினை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியே மிக ஆரம்பநிலையில்தான் இருந்தது. அதில் போல்ஸ்விக் என பேசியதில் மேலும் பலவீனம் ஏற்பட்டது. அகிலத்தின் 7வது மாநாடு 1935ல் காங்கிரஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற புரிதலுக்கு வந்தது. அய்க்கிய முன்னணி தந்திர பார்வையில் பென்பிராட்லி தீசீஸ் பிப்ர்வரி 1936 இம்ப்ரிகார் இதழில் வெளியிடப்பட்டது.  காங்கிரசுடன் இணைந்தா என்ற தயக்கம்  நெருடல் இங்கிருந்த இளம் கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. ரஜினிபாமிதத் பல்வேறு குழுக்களுடன் விவாதித்து அனைத்திந்திய ஒருங்கிணப்பை வலியுறுத்தினார். கட்சி மையம் ஒன்றை பலப்படுத்தி  செயல்பட முடிவானது. தோழர் ஜோஷியிடம் பொதுச்செயலர் பொறுப்புகொடுக்கப்பட்டது. சர்வதேச இயக்கத்தலைமை வழிகாட்டலுடன் இவை யாவும் செய்யப்பட்டன.

மிஷல் காரி என்கிற ஐ சி எஸ் மற்றும் தோழர் மிஷல் ஸ்காட்  உதவியுடன் கல்கத்தாவில் மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. ஜோஷி, அஜாய், பரத்வாஜ் சந்திப்புடன் சூரத்தில் ஜூன் 1936ல் ஜோஷி பொதுச்செயலராக அறிவிக்கப்படுகிறார். மேற்கு பகுதிக்கு அஜாய், வடக்கிற்கு பரத்வாஜ், தென்பகுதிக்கு காட்டே பொறுப்பாக்கப்படுகின்றனர். 1936ல் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படுகிறது.  AISF  அமைக்கப்படுகிறது.  1935ல் பாரிசில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் தாக்கம் இங்கும் ஏற்பட்டது. பாசிச கலாச்சாரத்திற்கு எதிரான குரலை அங்கு கார்க்கி, மால்ரக்ஸ், ஈ எம் பாஸ்டர் எதிரொலித்தனர். 1938ல் விவசாயி- கவிஞர் கூட்டு மாநாடு என்ற புதுமை பரிதாபாத்தில் நடந்த்து.1945ல் உருது எழுத்தாளர் மாநாடு ஒன்று அய்தராபாத்தில் சரோஜினிதேவி நாயுடு தலைமையில்  நடைபெற்றது.  இவ்வனைத்திலும் உத்வேக பங்களிப்பை நல்கினார் ஜோஷி.
ஜமின்தாரி ஒழிப்பு என்ற முழக்கத்தில் கிசான் சபாக்கள் உருவான  காலமும் இதுதான்.  National Front பத்திரிக்கையும் துவங்கப்பட்டது. ஜோஷியுடன்  டாக்டர் அதிகாரி கல்கத்தாவில் செயல்பட்டுவந்தார். ஜோஷி, அதிகாரி, பரத்வாஜ் , அஜாய் பத்திரிக்கை ஆசிரியர்குழுவில் செயல்பட்டனர். 1938ல் கட்சியின் மையம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. தேசிய காங்கிரசும் தொழிலாளிவர்க்கமும் என்ற பிரசுரத்தை கட்சி வெளியிட்டது. அரசியல் போராட்டங்களில் பங்கேற்பீர் என்ற வேண்டுகோளும் விடப்பட்டது. சுபாஷ்போஸ் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என  கட்சி நிலை எடுத்தது
தோழர் ஜோஷ்யின் னிசிறப்பு மணிக்கணக்காக இளைஞர்களுடன் தனிஉரையாடல்களை மேற்கொள்வது- அதன் மூலம் தோழர்களை ஈர்ப்பது என்பதாக இருந்தது. 1942 வெள்ளைய்னே வெளியேறு இயக்கத்தின் போது கட்சி பல விமர்சங்களை சந்தித்தது. வங்க பஞ்சத்தில் மக்கள் பணியாற்றி கட்சி தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என பெரும் களப்பணிக்கு ஜோஷி திட்டமிட்டு கட்சித்தொண்டர்களை இறக்கினார். பஞ்சத்தின்போது ஒருகோடி மக்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவெல்லாம் பிணங்கள் என்ற நிலை. பல்லாயிரக்கணக்கான பெண்கள்  அன்றாட வாழ்க்கைக்கே விபச்சாரிகள் ஆக்கப்பட்ட சூழல் இருந்தது. பெண்கள் சுயபாதுகாப்பு அமைப்பை  ஒன்றை நிறுவி ஏராள இளம் பெண்களை காத்திட , மீட்டெடுக்க இயக்கம் ஒன்றிற்கு ஜோஷி வழிகாட்டினார். கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியாற்றிட ஆயிரக்கணக்கில் உவுகூடங்கள் தேவைப்பட்டன. கட்சி  நூற்றுக்கணக்கன உவுகூடங்கள் அமைத்திட ஜோஷி வழிகாட்டினார். தாமே நேரில் சென்று செயல்படும் தோழர்களை உற்சாகப்படுத்தினார். ப்பான் பாசிதிர்ப்பு முழக்கங்களுடன் விடுதலையை கோரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஜோஷி அமைக்க செய்தார். வங்கம் வீழ்ந்தால் இந்தியா வாழாது என்ற முழக்கத்துடன் வங்க நிலைமைகளை  தேசிய பிரச்சனையாக்கினார். தேசிய அரசாங்கம் என்ற முழக்கத்தை ம் என் ராய் ஆதரவாளர்கள் பேசிவந்தனர். ஜோஷியும் கல்கத்தாவில்  நிலைமைகளை சீராக்கிட தேசிய அரசாங்கம் என்றார். டாக்டர் ஷியாமபிரசாத் போன்றவர் உதவட்டும் என்றார். அந்த அளவிற்கு வங்க மீட்பு என்பதில் அக்கறை செலுத்தினார்.
1943ல்  இந்திய மக்கள் நாடக மன்றம் என்கிற இப்டா உருவாக்கப்பட்டது. கட்சி சொல்லத்தகுந்த அளவில்  உறுப்பினர்களை பெற்றது. முழுநேர புரட்சியாளர்கள் என்ற பதிவில் முழுநேர பணியாளர்கள் 2000 இருந்தனர். தொழிற்சங்கம், கிசான் சபா, மாணவர் இயக்கம், மாதர் அமைப்புகளில் கட்சி செல்வாக்கு பெற்றது. கட்சியின் பத்திரிக்கைகள், பிரசுரங்கள் 11 மொழிகளில் வெளிவந்தன. அடிக்கப்பட்ட யிரக்கணக்கன கட்சி வெளியீடுகள் தேங்கி நிற்காமல் விற்கப்பட்டன. அனைத்திந்திய அரசியலில் விவாத இடம் ஒன்று கட்சிக்கு கிடைக்கப்பெற்றது. அனைத்திந்திய அமைப்பு வடிவமும் கிடைத்தது. தோழர்களை கட்சிக்கு ஈர்ப்பதில் ஜோஷியின் திறமை பாராட்டுக்குரியதாக இருந்தது. அறிவுஜீவிகள், கவிஞர், கலைஞர் என பலரும் தயக்கமின்றி அவருடன் விவாத உறவுகளை மரியாதையை வைத்திருந்தனர்.

1941 கையூர் தியாகிகளின் பேரன்பில் நெகிழ்ந்தார் ஜோஷி. கையூர் போராட்ட்த்தில் 60 தோழர்கள் மீது வழக்கு- நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சாவைக்கண்டு  சோராமல்  அப்பு, அபுபக்கர், சிறுகண்டன், குணாம்பு ஆகிய தோழர்கள் ஜோஷியை பார்க்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும் , தோழர்  ஜோஷி பார்க்க வந்தார். அவர்களை பர்றி மிகப்பெருமையுடன் உரையாடினார். தோழர் கிருஷ்ணன் பிள்ளை மொழிபெயர்த்தார். மகத்தான கடமைக்கான உயிர்த்தியாகம் வீணாகாது என ஜோஷி தெரிவித்தவுடன் கட்சி பொதுச்செயலர் மூலம் தங்களுக்கு மாபெரும் அங்கீகரிப்பை தந்துவிட்டதா அத்தோழர்கள் மனதிலிருந்து நன்றி தெரிவித்தனர். காவிய நிகழ்வு போல் இக்காட்சி அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஜோஷியும் வாழ்க என சொல்லி அத்தோழர்கள் தூக்கில் ஏறினர்.
ஜோஷிக்கு மற்றொரு சிறந்த பொறுமைக்குணமும் இருந்தது. நாம் கூட்டத்தில் பேசும்போது யாராவது கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தால், நம்க்கு கோபம் வரலாம்- சோர்வு ஏற்படும்- கவனம் சிதறலாம். ஆனால் ஜோஷி அதை நாம் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார். நாம் பேசுவது அவர்களை தொடவில்லை என புரிந்து கொள்வோம் என்பார். அவரது கூட்டங்கள் பலநேரங்களில் தடை பெற்றிருக்கிறது. பாட்னா, பெகுசராய் சுற்றுப்பயணத்தில் அவருக்கு இவ்வனுபவம் ஏற்பட்ட்து. கட்சி ஒழிக. ஜோஷி ஒழிக முழக்கங்களை அவர் கேட்டார். ஜோஷி மிக சிறந்த பேச்சாளர் என கருதப்படவில்லை. விளக்கபாணியில் உரையாடல் செய்பவராக இருந்தார். அவர் தது பயணத்தை மூன்றாம் பெட்டிகளில்தான் செய்து வந்தார்.
கட்சித்தலைவர்கள் சிறையிலிருந்தனர். தியோலி சிறையில் தோழர்கள் டாங்கே, ரணதிவே, அஜாய் ஆகியோருக்கு மக்கள் யுத்தம் என்கிற ஆவம் கிடைக்கப்பெற்றது. காங்கிரசின் யுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டை தாக்கியும், சோவியத்தை காப்பது என்ற பொருளிலும் அறிக்கை ஒன்று தயாரிக்கபட்டது. முன்பு பிரிட்டிஷ் தலைவர்கள் தேச உணர்விற்கு மிக எதிராக போகவேண்டியதில்லை என்ற அறிவுரையை ஜோஷி, அதிகாரியிடம் தந்திருந்தனர். ஆனால் சோவியத் யுத்த களத்திற்கு வந்தவுடன் மக்கள் யுத்த முழக்கம் வந்தது.
தோழர் ரஜினி பாமிதத்திற்கு அடுத்து கட்சி கொள்கை நிலைகளில் டாக்டர் அதிகாரியை ஜோஷி பொதுவாக மதித்து வந்தார். அதிகாரி சொல்லும் போது தட்ட முடியாது என்ற நிலையை ஜோஷி எடுத்தார். ஹன்ஸ்ராஜ் என்ற பெயரில் அவ்வறிக்கை ஜோஷியால்   Forward to Freedom  வெளியிடப்பட்டது. தேச ஒற்றுமை, பாதுகாப்பு, தேச அரசாங்கம் என்ற முழக்கம் தரப்பட்டது. விடுதலைப்போரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் செயல்பாடுகளும் என்ற பிரசுரத்தை ஜோஷி எழுதினார். அதற்கு பிரிட்டிஷ் கட்சியின் செயலர் ஹாரிபொலிட் முன்னுரை எழுதி அப்பிரசுரம் லண்டனில் வெளியிடப்பட்டது. ஜப்பனின் பேராபத்து அதில் சுட்டிக்காட்டப்பட்ட்து. யுத்த்த்தில் நடுநிலை இல்லை என்பது தெளிவாக்கப்பட்ட்து.
கட்சி எடுத்த நிலைப்பட்டிற்கு காங்கிரசின் வலது பட்டேல் பிரிவும், காங்கிரஸ் சோசலிஸ்ட் இட்து ஜெயபிரகாஷ் பிரிவும் கடும் கண்டனங்களை எழுப்பின. காந்தியை ஜோஷி நேரிடையாக சந்தித்து தங்கள் நிலைபாட்டை விளக்கினார். பின்னர் நடந்த கடித போக்குவரத்துகள் காந்தி- ஜோசி கடிதங்கள் என வெளியாயின. காந்தியை தேசத்தந்தை என ஜோஷி விளித்தார். காந்தியும் உங்களைப் போன்றவர்களை நான் இழக்க விரும்பவில்லை என பேசினார். காங்கிரஸ் ராம்கர் மாநாடின்போது கூட பரத்வாஜ் போன்ற தோழர்கள் கைதாவதிலிருந்து தப்பிட காந்தியுடன் ஒரே காரில் பயணிக்க முடிந்தது. வெள்ளைய்னே வெளியேறு தீர்மானம் வந்தபோது டக்டர் கே எம் அஷ்ரப் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எதிர்த்து கலகம் ஏதும் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமை தங்கள் அமைப்பில் செயலாற்றிய கம்யூனிஸ்ட்கள் மீது சார்ஜ்சீட் கொடுத்தது-. நீக்கவேண்டும் என்று பேசியது.  ஆனால் அரசியல் பெருந்தன்மையுடன் ஜோஷி தலைமை காங்கிரசை ஒடுக்கி தலைவர்களை சிறையில் வாட வைப்பது பிரிட்டிஷ் நலன்களுக்குகூட உகந்த்தல்ல என்ற நேரிய அறிக்கையை தந்தது.
கம்யூனிஸ்ட்கள் மீதான காங்கிரஸ் குற்றசாட்டுகளுக்கு பதில் என்கிற ஆவத்தை கடும் உழைப்பை நல்கி ஜோஷி தயாரித்தார். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தருவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஆவணமது. 1945ல் PPH வெளியீடாக வந்தது. காங்கிரசும் லீகும் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை ஜோஷி தொடர்ந்து சொல்லி வந்தார். They Must Meet, They Must Meet Again என்கிற அழுத்தம் தரக்கூடிய பிரசுரங்கங்களை கொணர்ந்தார். காந்தி- ஜின்னவைத்தான் அவர்கள் என ஜோஷி குறிப்பிட்டார். அதேபோல் அக்டோபர் 1945ல் கங்கிரஸ் லீக் கம்யூனிஸ்ட் தேசிய முன்னணி என பேசினார். தெபகா, தெலங்கானா எழுச்சிகளில் கட்சி முக்கிய பாத்திரமாற்றியது. தெலங்கனா பகுதி போராட்டத்திற்கு ஆயுதங்கள் பெற்று அனுப்புவதில் அவர் பெரும் பங்காற்றினார். 1946 தொழிலாளர் இயக்கங்கங்கள் பெருகின.

லீக் பாகிஸ்தான் கோரிக்கையை உறுதியாக வற்புறுத்தி வந்தது. 1946 ஜூனில் பிரிட்டிஷ் திட்டம் எதிர்ப்போம் என்றது கட்சி. வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் சட்ட அசெம்பிளி என்றது. டாக்டர் அதிகாரி லெனினிய வெளிச்சத்தில் பாகிஸ்தான் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு ஆவணம் என்றார். ஜோஷி தயக்கம் எடுபடவில்லை. ரஜினிபாமிதத்தின் அறிவுரைக்கு பின்னர் பாகிஸ்தான் கோரிக்கையை சுயநிர்ணய பின்னணியில் பார்த்த்தும் அதற்கு லெனினை துணைக்கு அழைத்துக்கொண்ட்தும் தவறு என புரிந்துகொள்ளப்பட்ட்து. இதை ஜோஷி பின்னாட்களில் தெளிவுபடுத்தினார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா