Skip to main content

ஹெகல் வாழ்வும் சிந்தனையும் 2

II


ஜெனா பகுதி பிரஞ்சு நெப்போலியன் ஆக்ரமிப்பிற்கு உள்ளானது. கதேவின் எழுத்துக்களை பலமுறை வாசித்தவராக நெப்போலியன் இருந்தார். அவர்கள் மத்தியில் சந்திப்பு நிகழ்ந்தது. ஹெகல் நண்பர் நியத்தம்மர்  என்பவர் உதவியுடன் பாம்பெர்க்கில் பத்ரிக்கை பணியில் சேர்ந்தார். Botany- Philosophy இரண்டிற்குமான சொற்பொழிவு விரிவுரையாளர் பணியை தன்னால் செய்யமுடியும் என கதேவிற்கு தெரிவித்தும் அவருக்கு அப்பணி கிடைக்கவில்லை. வேறுவழியின்றி பாம்பெர்ஜெர் ஜெய்டுங் என்கிற பத்ரிக்கைக்கு ஹெகல் ஆசிரியராகிறார். பாம்பெர்க் பத்ரிக்கை நெப்போலியன் ஆதரவு குரலை வெளியிட்டு வந்தது. ரஷ்யாவை தாக்கி எழுதிவந்தது. ஹெகலிடம் சற்று பணப்புழக்கம் ஏற்பட்டது. தான் நிம்மதியாக சாப்பிடவும், குடிக்கவும் முடிந்தது என பதிவு செய்கிறார். அவருக்கு ரும்போர்ட் காபி மீது பெரும் விருப்பம் இருந்தது. தன் அறிவியல் பணிகளில் காபி பெரும் பங்காற்றியதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஷெல்லிங்குடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டபின்னரும் அவர்கள் சந்திப்புகள் இருந்தன. அவர்கள் தத்துவம் குறித்து பேசுவதை தவிர்த்துக்கொண்டனர். ஹெகலின் பினாமனலாஜி புத்தகம் ஆதரவையும் எதிர்ப்பு விமர்சனங்களையும் கண்டது. Bachmann என்பார் ஷெல்லிங் ’நவீன தத்துவத்தின் பிளாட்டோ’ எனில், ஹெகல் ’ஜெர்மன் அரிஸ்டாட்டில்’ என இருவரையும் ஒப்பிட்டு எழுதினார். Niethammer அவரது நண்பர் ஹெகலுக்கு உதவும் வகையில் பவேரியா பல்கலைகழகத்திற்கு தர்க்கவியல் குறித்த பாடபுத்தகம் கொணரவேண்டினார். இந்தப்பணி பின்னர் தர்க்க அறிவியல் Science of Logic ஆக வெளியானது Rectorship என்கிற Nuremburg பல்கலைகழக் பணிக்கு ஹெகல் அக்டோபர் 1808ல் சேர்ந்திட நியதம்மர் உதவுகிறார்.
நுரெம்பர்க்கில் கல்வி இலாகாவின் கமிஷனராக இருந்த தன் நண்பர் செய்யவிரும்பும் சீர்திருத்தப்பணிகளுக்கு ஹெகல் ஒத்துழைக்கவேண்டும் என்கிற வேலையும் அவருக்கு அமைந்தது. ஜிம்னாசியம் என்கிற கல்விக்கூட தலைமை ஆசியராகவும் ஹெகல் ஆக்கப்பட்டார்.
1810 இறுதியில் உயர்தட்டு நண்பர்கள் சந்திக்கும் கிளப் ஒன்றை நுரெம்பர்க்கில் உருவாக்கினர். ஹெகலுக்கு புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டது. ஹெகலின் முன்னாள் மாணவர்கள் சிலரும் இருந்தனர்.  Marie Helena susanna Von Tucher என்கிற ஹெகலைவிட 20 வயது குறைந்த பெண்மணியை அவர் 1811 செப்டம்பரில் மணப்பது என்று முடிவெடுத்தார். பெண்ணின் குடும்பம் வான் டக்கர் சம்மதம் தரவில்லை. 1810 ஏப்ரல் துவங்கி அவர் தனது காதலை வெளிப்படுத்தும் கவிதைகளை, கடிதங்களை மேரிக்கு அனுப்பிவந்தார். திருமணம், வாழ்க்கை குறித்து தனது எதிர்கால கணவன் கொடுத்துவந்த சொற்பொழிவுகள் மேரி வொன் டக்கருக்கு உவப்பாக இல்லை.
உயர்பிரபுத்துவ குடும்பத்துடன் காதல்வயப்ப்ட்டுள்ள ஹெகல் நிலைகண்டு நியத்தமர் போன்ற நண்பர்கள் கவலை அடைந்தனர். ஏற்கனவே ஹெகலுக்கு லுத்விக் பிஷர் என்கிற மகன் இருக்கிறான் என்பது மேரி வான் டக்கருக்கு தெரியவந்தது. பணநெருக்கடி, மனநெருக்கடி என்கிற தடைகளை தாண்டி அவர்கள் திருமணம் 1811ல் நடந்தது. 1812ல் பெண்குழந்தை பிறந்து மறைந்தது குடும்பத்தில் துக்கத்தை ஏற்படுத்தியது. 1813ல் கார்ல் பிரடெரிக் வில்ஹெல்ம் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. 1814ல் தாமஸ் இம்மானுவேல் என்கிற அடுத்த குழந்தை பிறந்தது. 1816ல் ஹைடெல்பர்கில் ஹெகல் குடும்பம் இருந்தபோது தனது முதல் மகனான லுத்விக்கையும் குடும்பத்தில் அழைத்துக்கொள்வது என்கிற முடிவை ஹெகல் எடுத்தார்.
ஹைடெல்பர்க்கில் பேராசிரியர்களுடன் மட்டுமே தனது சமுக தொடர்புகளை ஹெகல் வைத்துக்கொண்டிருந்தார். இறையியல் ஆய்வாளர்கள், இசை கலைஞர்கள் சிலருடன் நட்பு பாராட்டினார். அரசியல் தத்துவம் குறித்த பொது சொற்பொழிவுகளை நடத்திவந்தார். பின்னர் அவர் பெர்லின் சென்ற பிறகு அவை சரிபார்க்கப்பட்டு 1820ல் உரிமையின் தத்துவம் என வெளியிடப்பட்டது. ஹெகல் அரசாங்க ஆதரவு அரசியல் கட்டுரைகள் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு கசப்பை உருவாக்கியது. மக்களைப்பற்றியும், ஜனநாயகம் குறித்தும் கவலைப்படாமல் அரசர் பக்கம் நிற்பது சரியல்ல என அவர்கள் கருதினர்.
1817 நவம்பரில்  கார்ல் சிக்மண்ட் அல்டென்ஸ்டைன் என்பவர் கலாச்சார அமைச்சர் பொறுப்பு ஏற்றார். அவர் ஹெகல் வயது ஒத்தவர். ஹெகல் பற்றி அறிந்த அவர் ஹெகல் பெர்லின் வருவது சரியானது மற்றும் தனக்கு துணையாக இருக்கும் என கருதினார். பெர்லின் ஹெகல் வந்து பணிபுரிந்தால் அவர் ஹைடல்பெர்க்கில் பெறுவதை போல் இருமடங்கு ஊதியம் கிடைக்கும் என்றார் அமைச்சர். ஆனால் பெருநகரம் என்பதால் அங்கு செலவும் கூடும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்ற ஈடு தேவை என ஹெகல் கருதினார். பிரஷ்யா அறிவியல் கழகத்தில் அவர் சேரவேண்டும். ஹெகல் துணைவியார் மேரிக்கு பெர்லின் இடம் பெயர தயக்கம் இருந்தது, மேரியின் தாய் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என அறிவுரை சொல்லி ஏற்க செய்தார்.
ஹைடபெர்க்கிலிருந்து கிளம்பி பிராங்க்பர்ட், ஜெனா நண்பர்களிடம் தங்கி ஒருமாதம் பயண களைப்புடன் அக்டோபர் 1818ல் ஹெகல் குடும்பம் பெர்லின் சென்று சேர்ந்தது. நெப்போலியன் தாக்குதலாலும் சில பகுதிகளை பிரஞ்சு கைப்பற்றியிருந்ததாலும் பெர்லின் கடுமையான நெருக்கடியில் இருந்தது. குழந்தைகள் இறப்பு 70 சதமாக இருந்த காலமது. அரசாங்க கடன் 200 மில்லியன் தாலர்கள் என பிங்கர்ட் தெரிவிக்கிறார். அரசர் பல ஆட்சியாளர்களை மாற்றி நிலைமைகளை மேம்பட நடவடிக்கைகள் எடுத்துவந்தார்.
பெர்லின் பல்கலைகழகத்தை அதன் புகழுக்கு மீட்பது பெரும் சவாலாக ஹெகலுக்கு அமைந்தது. அவர் தத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த மாலைநேர வகுப்புக்களை எடுக்க துவங்கினார். ஹெகல் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வசதி கூடியது. தரமான ஒயின்கள் பாட்டில்களில் வருவதற்கு பதில் பாரல்களில் வரத்துவங்கியது என டெரி குறிப்பிடுகிறார். வாரந்தோறும் தியேட்டர், இசைநாடகங்களுக்கு ஹெகல் குடும்பத்தாருடன் சென்று வந்தார். குழந்தைகளுக்கு வீட்டில் இசைப்பயிற்சி கொடுத்தனர். காலை காபியுடன் தினசரிகளை படித்து தனது கமெண்ட்களை அவ்வப்போது தருபவராக இருந்தார் என அவரது மகன் அவரை நினைவுகூர்கிறார்.
Philosophy of Right என்ற ஆக்கத்திற்காக அவர் கடுமையாக உழைத்தார். 1829ல் அது வெளிவந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் அவர் புகழ் கூடியது. எது விளவுண்டாக்ககூடியதோ (efficacious) அது பகுத்தறிவுக்குரியது என்கிற கருத்து அவரிடம் இருந்தது. இப்போது அவரின் புகழ்வாய்ந்த what is rational is actual and what is actual is rational என்பதை அவர் எழுதினார். இதை எது இருக்கிறதோ அது சரி என்றும், எது சரியோ அது இருக்கிறது என்றும் சிலர் நீட்டித்து பேசினர். அவர் ஆள்பவருடன் அணிசேர்ந்துவிட்டர் போன்ற விமர்சன குரல்களும் வராமல் இல்லை. Apology for Prussian absolutism என்கிற விமர்சனம் எழுந்தது.
1820-21 Schulze என்பவருடன் ஹெகல் நட்பு பூண்டார். கதேவுடன் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டார்.  ஷால்ஸ்தான் ஹெகல் மறைவிற்கு பின்னர் அவரது நூல்தொகைகளை எடிட் செய்பவராக இருந்தார். இளம் பேராசிரியராக வந்த ஆர்தர் ஷோபன்ஹார் தனது விரிவுரைக்கான நேரம் ஹெகலுக்குரிய அதே நேரமாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதேநேரம் ஒதுக்கப்பட்டது. அவரின் கர்வமான அணுகுமுறையால் அவரால் பெர்லினில் நீடிக்கமுடியவில்லை.  அவரின் பதவிஉயர்வு வாய்ப்புகளை ஹெகல் தடுத்தார் என்ற விமர்சனமும் ஹெகல் மீது இருந்தது.
பெண்களுக்கு குடும்பம்தான் பொறுப்பு ..women's very Estate was to be housewife and mother என்பதை ஹெகல் ஆழமாக நம்பினார். சிவில் சமுக வளர்ச்சிக்கு சுதந்திர சந்தை என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அனைத்தும் சமுக பண்புகளை பெறுகின்றன. ஆடை, உணவு பழக்கம் என வழக்கங்கங்கள் நடைமுறைகள் உள்ளன. இதில் மற்றவர் நடந்துகொள்வது போலவே நடப்பது உசிதமனாது என்றும் ஹெகல் கருதினார். புவிமாவட்ட அடிப்படையில் வாக்களித்து ஜனநாயகம் என்பதை அவர் ஏற்கவில்லை. அரசியல் அமைப்பு சட்டப்படி முடியாட்சி என்பதை அவர் ஏற்றார்.
Philosophy of History என்பது அவரது நண்பர் எட்வர்ட் கான்ஸ் மற்றும் அவரது மகன் கார்ல் ஆகியவர்களால் கொணரப்பட்டது. World History is world Court - history of humanity itself- world spirit என ஹெகல் கருதினார். அதேபோல் உலக வரலாறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கிறது. ஆசியா துவக்கம் எனில் அதன் முழுமுதல் முடிவாக அய்ரோப்பா இருக்கிறது என்றார். அவரிடம் அய்ரோப்பியமையவாதம் இருந்தது என்கிற விமர்சனம் எழுந்தது. Mankind is in itself rational, herein lies the possibility of equal rights for all people and the nothingness of a rigid distiction between races which have rights and those which have none என்று எழுதினார் ஹெகல். The greatest need of the time was for a reconciliation between religion and reason which can be accomplished by a wissensshaft such as philosophy . மதம் தனிமனிதன் கொள்ளும் உணர்ச்சி என்றால், நாய்க்குகூடத்தான் உணர்ச்சியும், திருப்தியும் இருக்கிறது. அதை சிறந்த கிறிஸ்துவராக ஏற்கலாமா எனக் கேள்வியும் எழுப்பியவர் ஹெகல்.

தனது உடல்நலம் 1822ல் பாதிக்கப்பட்டபோது அவர் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கவலையுற்றார். மனைவி மேரிக்கு மாதம் 300 தாலராவது பென்ஷன் நிதி ஒன்றிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். தனது அன்றாட வாழ்விலும் அறிவு வாழ்க்கையிலும் கதேவின் முக்கியத்துவம் குறித்து நன்றி பாராட்டி கதேவிற்கு கடிதம் எழுதினார் ஹெகல். பல நகர்களுக்கு சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வம் காட்டினார். அங்கெல்லாம் தேவாலயங்களுக்கு சென்றார். ஹாலந்தில் சர்ச்களின் நேர்த்தியை வியந்தார். டச்சு காபி, யூதர்களின் சினாகாக் வழிபாட்டுக்கூடங்கள் பற்றி பெருமிதமாக பேசினார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா