ஹெகல் வாழ்வும் சிந்தனையும்
-ஆர். பட்டாபிராமன்
தெற்குஜெர்மனி உர்ட்டெம்பர்க் இளவரசர் கார்ல் அயுகன் அரசியல் அமைப்பு சட்டப்படி முடியாட்சி என்பதற்கு
இணக்கம் தெரிவித்த ஆண்டு 1770. அவரது அரசைவையில் ஜார்ஜ் லுத்விக் ஹெகல் பணியாற்றினார் . அவரின் துணவியார்
பெயர் மரியா மக்டலேனா லோசா ஹெகல். ஆகஸ்ட் 27,1770 அன்று பிறந்த தங்கள் குழந்தைக்கு
ஜார்ஜ் வில்ஹெல்ம் பிரடெரிக் ஹெகல் என பெயரிட்டனர்.
செல்லமாக வில்ஹெல்ம் என ஹெகல் அழைக்கப்பட்டார்.
ரோமா சாம்ராஜ்யம் என்றோ, ஜெர்மனி என்றோ உணரப்படமுடியாத பகுதியது.
தந்தை ஹெகல் துபிங்கன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். ட்யூக் அரசவையில் வருவாய்த்துறை
அதிகாரி பொறுப்பு தரப்பட்டிருந்தது. மூதாதையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரியா
பகுதியிலிருந்து உர்டெம்பர்க் புலம்பெயர்ந்தவர்கள். முன்னோர்கள் பிராடெஸ்டெண்ட் ஆயர்களாக அப்பகுதியில் இருந்தனர்.
தாய் மரியாவின் தந்தை அங்கு உயர்நீதிமன்ற நீதிபதி. நூறாண்டுகளாக அவர்கள் குடும்பம்
ஸ்டட்கர்ட் பகுதியில் வாழந்து வந்தது.
Wurttemburgல் சின்னம்மை தாக்குதலுக்கு பல குழந்தைகள் இறந்தன.
ஹெகல் குடும்பத்திலும் ஹெகல் உட்பட மூன்று குழந்தைகளே மிஞ்சின. தாயார் மரியா வயிற்றுப்போக்கு
வாந்தி நோயால் 1781ல் இறந்தார். கல்லூரி காலத்தில் தந்தையுடன் பிணக்கு ஏற்பட்டது. பிரஞ்சு
புரட்சி குறித்தும் அவர்கள் கருத்து மாறுபட்டனர். ஜெர்மன், லத்தீன் பள்ளிகளுக்கு ஹெகல்
அனுப்பப்பட்டார். வீட்டில் தனியாக கணிதம் சொல்லித்தர ஆசிரியர் அமர்த்தப்பட்டார். தாயின் மறைவிற்கு பின்னர்
குடும்ப ஒட்டுதல் வில்ஹெல்ம் ஹெகலுக்கு குறைந்தது. சகோதரி கிறிஸ்டியானா தந்தையை பராமரிப்பதில்
கவனமானார். சகோதரன் ஜார்ஜ் ராணுவசேவைக்கு நெப்போலியனின் கட்டுப்பாட்டிற்கு சென்றவர்
என்னவானார் என தெரியாமல் போனது.
ஹெகல் படிப்பில்
முழுமையாக கவனம் செலுத்தினார். முதல் மாணவனாக இருந்தார். ஏராள புத்தகங்களை படித்து
டைரி எழுத துவங்கினார். வீட்டிற்கு வந்த முற்போக்கு இதழ்கள் மூலம் காண்ட் பற்றி அறிந்தார்.
பள்ளி ஆசிரியர் ஷேக்ஸ்பியரை கொடுத்து ’புரியாவிட்டாலும் படி-. பின்னர் தெரிந்துகொள்வாய்’
என அறிமுகப்படுத்தினார். துபிங்கென் பல்கலைகழகத்தில் புத்தகங்களுடனேயே ஹெகல் இருந்தததால்
நண்பர்கள் ’கிழட்டுப்பயல்’ என கேலி செய்தனர். தன்னைப்பற்றி அதிகம் பேசாதவராக, குறிப்புகள்
எழுதாதவராக அவர் இருந்தார்.
ஹெகல் வீட்டிற்கு மிக அருகாமையில் வசித்த ஜே ஜே மோசர் அப்போது
அப்பகுதி ஹீரோ. அவரை ரசிப்பவராக ஹெகல் இருந்தார். மோசர் மக்கள் உரிமைகள் குறித்து பேசக்கூடியவராக
இருந்தார். பல்கலையில் தத்துவபேராசிரியராக இருந்த வொன் அபெல் என்பார் ஹெகல்மீது தாக்கம்
செலுத்தினார், காண்ட் குறித்த விவாதங்களில் அபெல் பங்கேற்றவராக இருந்தார். Lessing எழுத்துக்கள் அவருக்கு
அறிமுகமாயிற்று. அனைத்து மதங்களும் உள்ளார்ந்தநிலையில் ஒன்றே என லெஸ்ஸிங்கின் பாத்திரம்
பேசியது. தனது கம்யூனிட்டியும் கலாச்சாரமும் எவ்வளவு பெருமிதமானதாக இருந்தாலும் பிறர்
கலாச்சாரத்தை அங்கீகரிக்காமல் வெளியேற்ற வேண்டியதில்லை என்கிற கருத்து ஹெகலுக்கு புலப்பட்டது.
ஹெகலின் மாணவப்பருவ நாட்குறிப்புகள். எழுதிப்பார்த்த கட்டுரைகள்
அனைத்திலும் தேடல்கள் இருந்தன. அவர் முடிவான எதையும் அடைந்ததாக இல்லை. நடைமுறை அனுபவத்துடன்
வாழ்க்கையை புரிதல் என்பதும், ரூசோவின் தாக்கமும் அவற்றில் தெரிந்தன. மதம் குறித்து
நேர்மறைஅணுகுமுறை கொண்டிருந்தார். Bildung என்பதற்கு ஜெர்மன் மொழியில் மக்களுக்கு கற்பிப்பவர்
என்கிற பொருள்- அவ்வெண்ணம் அவரிடம் படர்ந்தது. பட்டமளிப்புவிழாவில் உரை நிகழ்த்தும் மாணவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The abortive state of Art and scholarship at Turkey" என்கிற ஆய்வுரையை அவர்
நிகழ்த்தினார். தங்கள் நாட்டில் கிடைத்த நல்ல
கல்வி சூழலை துருக்கியின் மோசமான சூழலுடன் ஒப்பிடுவதாக அவர் உரை இருந்தது.
இறையியலில் புதிய அறிவொளியை தரவேண்டும் என இளம்வயது ஹெகல்
விரும்பினார். Tubingen University என்பது 1477ல் துவக்கப்பட்ட புகழ்வாய்ந்த கல்விக்கூடம்.
300 ஆண்டுகள் பழமை என்பதாலேயே அதற்கான கேடுகளும், ஊழல்களும் வந்து சேர்ந்தன. சீர்திருத்தங்களை
பேராசிரியர்களே தடுப்பவர்களாகவும் இருந்தனர். கல்லூரிக்கு நுழைந்த ஹெகல் ஆரம்பத்தில்
கர்வம் பிடித்தவர் என பெயர் வாங்கினார். தனது முதல் மாணவன் அந்தஸ்தை இழந்தார். பிரடெரிக்
ஹோல்டெர்லின் ( பிறகு பெரும் கவியானவர்), வில்ஹெல்ம் ஜோசப் ஷெல்லிங் போன்றவர் ஹெகலுக்கு
நண்பர்கள் ஆயினர்.
Pastors எனும் ஆயர் ஆவதில்லை என மூவரும் முடிவெடுத்தனர்.
ஹெகல் கவனம் தத்துவத்தின்பாற் திரும்பியது. 1789 பிரஞ்சு புரட்சி மூவரின் மீதும் பெரும்
தாக்கத்தை உருவாக்கியது. ஜெர்மனி அப்படியொரு புரட்சியை காணவேண்டும் என அவர்கள் விரும்பினர்.
செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனிவாத்தியார் வைத்து கற்பிக்கும் பழக்கம் இருந்தது.
ஹெகல் அவ்வாறு கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
ஷெல்லிங்கிற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு தான் கற்பிக்கும் குடும்பத்தார்களுடன் சுற்றும் வேலை கிடைத்தது.
ஜெர்மனியிலும் மோசமான பழக்கம் இருந்தது. ட்யூஷன் வாத்தியாரை
குடும்பத்தாருடன் அமரவைத்து சாப்பிட செய்வதா அல்லது வேலைக்காரர்களுடன் அமர்த்துவதா
என்கிற பிரச்சனை இருந்தது. ஹெகல் மேம்பட்ட குடும்ப சூழலில் வந்தததால் தன்னை நடத்தியவிதத்தில்
அதிருப்தியுற்றார். அவர்கள் வீட்டில் இருந்த ஏராள நூல்கள் நிறைந்த ’நூலகம்’ ஹெகலுக்கு
பயன் தந்தது.
ஹெகலின் சோர்வை அறிந்து அவர் நண்பர் ஹோல்டெர்லின் பிராங்க்பர்ட்டில்
’ஒயின் பெருவணிகர்’ குடும்பத்தில் வாத்தியார் வேலைக்கு அழைத்தார். தரமான ரைன்லாந்த்
ஒயின், பிரான்ஸ் ஒயின் எல்லாம் கிடைக்கும் என எழுதினார். ஹெகல் காண்ட்டின் தத்துவ கருத்துக்களை
எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வது குறித்து
யோசிக்கலானார். யேசுவின் ஜீவிதம் என்கிற தனது இளமைக்கால கட்டுரையில் அவர்
ஏசுவை காண்ட்டிய ஹீரோதான் என நிறுவ முயன்றார்.
1796 ல் பிராங்க்பர்ட் போவதற்கு முன்னர் ஹெகல் தன் சொந்த
வீட்டிற்கு ஸ்டட்கர்ட் வந்தார். அங்கு அவரது சகோதரியின் தோழி நனேட்டே எண்டல் (Nanete
Endel) என்பவருடன் சுற்றித் திரிந்தார். அவர்கள் கத்தோலிக்க- பிராடெஸ்டண்ட் குறித்த
சச்சரவுகளில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டனர். தந்தை ஜனவரி 15, 1799ல் மரணம் அடைந்தார்
என்கிற செய்தியை ஹெகலுக்கு சகோதரி கிறிஸ்டியானா அனுப்பினார். பிராங்க்பர்ட்டிலிருந்து
ஸ்டட்கர்ட் சென்று குடும்ப கடமைகளை ஹெகல் பார்த்தார். தந்தையின் சொத்துக்களை சகோதரர்
இருவருக்கும் மட்டுமில்லாமல் சகோதரிக்கு கூடுதலாக கிடைப்பதுபோல் பிரித்திட நடவடிக்கை
எடுத்தார் ஹெகல்.
அன்றாட உறவிலும் உரையாடலிலும் நெருக்கமாக இருந்த தத்துவ நண்பர்
ஹோல்டர்லின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளானது. சிந்தனையின் சாலையில் இனி தனித்த பயணம்
என்ற சூழல் ஹெகலுக்கு உதவியாகவே அமைந்தது. அவரின் பழைய நண்பர் ஷெல்லிங் மிக உயரத்திற்கு
சென்றுவிட்டார். 1801ல் ஜெனா வந்து சேர்ந்தார் ஹெகல். தன்னால் வெளித்தெரியும் எப்படைப்புகளையும் கொணரமுடியவில்லையே
என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. ஜெனாவில் முதலில் தனியார் ஆசிரியர் அந்தஸ்தில்தான் இருந்தார். தனித்திறன் பேராசிரியர் என்கிற கனவு ஆரம்ப ஆண்டுகளில்
அவருக்கு கைகூடவில்லை. 1817ல் அவரது 47ஆம் வயதில்தான் அவருக்கு முறையான பல்கலைக்கழக
பேராசிரியர் பதவியே கிடைக்கிறது. Fichte செல்வாக்கு ஜெனாவில் இருந்தது.
The Difference between Fichte's and Schelling's
systems of Philosophy என்கிற சிறு வெளியீட்டை 1801 இறுதியில் அவர் கொணர்ந்தார். பின்னர்
அப்போது புகழுடன் விளங்கத் துவங்கிய ஷெல்லிங்குடன் இணைந்து தத்துவ விமர்சன ஏடு ஒன்றை
கொணர்ந்தார். ஷெல்லிங், ஷெல்லிங் துணைவியாருடன் ஹெகலுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. அவரவர்
நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினர்.
The Spirit of Christianity and its Fate என்கிற கட்டுரையை
ஹெகல் எழுதினார். கிறிஸ்துவம் உண்மையில் நவீன மதம்தானா- மக்களின் மதமா என்கிற கேள்விகள்
அவரை உறுத்திக்கொண்டிருந்தன. அன்பை அது போதிப்பதால் அதில் மேலாண்மை இருக்காது என்கிற
கருத்திற்கு வந்தார். அன்பு ’பகைமைகளை’ எப்படி சரி செய்துகொள்கிறது என்கிற கேள்வியும்
அவருக்கு எழுந்தது. Love, not self coercive Kantian autonomy, is the true basis for
the ethical values என்கிற கருத்தை அவர் எட்டினார். No idea more beautiful than that of a nation of people
related to one another by love என்கிற கனவையும் அவர் வெளிப்படுத்தினார். நவீன வாழ்வின்
பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தன் கட்டுரை பதிலை தந்துவிட்டதாக அவரால் உணரமுடியவில்லை.
The German Contitution என்கிற கட்டுரை ஒன்றை அவர் அடுத்து
எழுதினார். ஜெர்மன் ஓர் அரசாகவில்லை என்கிற விளக்கத்தை அதில் அவர் தந்தார். அரசு குறித்த
கேள்விகளாகவும் அக்கட்டுரை இருந்தது. Statist என்கிற வகையில் அவர் எழுதவில்லை என ஹெகலின்
வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள டெர்ரி பிங்கார்ட் சொல்கிறார். குடிமக்களை பொது திட்டம்
ஒன்றில் இணப்பதுதான் அரசு என்கிற பொருளில் ஹெகல் விளக்கினார்- பிரான்ஸ் தேசம் தனது
மக்களை புரட்சி என்கிற செயல் நோக்கி ஒன்றிணைத்தது- identification with a cause என்கிற
அர்த்தத்தில் அவர் பேசினார். People must share in the making of laws and the
management of the most important affairs of state.. Without such a
representative body, freedom is no longer thinkable என்று ஜெர்மானியர் தங்கள் அடையாளத்தை
கண்டெடுத்து ஒன்றுபடவேண்டும் என்கிற விழைவை அவர் தெரிவித்தார்.
ஷெல்லிங் பிச்டே குறித்த சிறு ஆய்வில் முதல்நிலை கோட்பாட்டில்
தன்னிலை, புறநிலைகள் முதன்மையாவது குறித்துள்ள வேறுபாட்டை அவர் ஆராய்கிறார். The
opposition between realism and idealism is in consciousness, and in the reality
of the objective, just as much as that of the subjective is founded in
consciousness என்பதை ஹெகல் வந்தடைந்தார். Reason - Understanding என்பன குறித்து விவாதித்ததில் காரணகாரிய
அறிவு என்பதை புரிந்துணர்தல் என்பதைக் கொண்டு ஹெகல் மாறுபட்டார். The
understanding is a faculty conditioned by the world, but reason is a faculty
that takes the conditioned findings of the understanding and weaves them into
an unconditioned account of subjectivity and objectivity என்கிற விளக்கத்திற்குள்
நாம் அழைத்து செல்லப்படுகிறோம். The synthetic unity of consciousness was original,
that is, underived, and formed the basis of everything found within
consciousness என்கிற நிலைப்பாட்டிற்கு அவர் உறுதிப்பட வருகிறார்.
1803ல் System
of Ethical Life நன்னெறி முறைமைகள் குறித்த சொற்பொழிவுகளை அவர் ஆற்றினார். Spirit
is the absoulte intution of itself as itself
என்றார் ஹெகல். The world spirit, in every one of its shapes, has enjoyed
itself and its own essence in every nation under every system of laws and
customs என எழுதினார்.
1804-5 களில் கதேவுடன் அவர் கடிதப்போக்குவரத்து வைத்திருந்தார்.
மேலும் Logic, Metaphysics, Philosophy of Nature என்பதை அவர் எழுதிக்கொண்டிருந்தார்.
The divine nature is none other than human nature- God, the absoulte essence in
the beyond, has become man- God is the self, God is man போன்ற கருத்துக்களை அவர்
எழுத துவங்கினார். The phenomenology of Spiritல் அவர் தனது குரலை காணத்துவங்கியதாக
பிங்கார்ட் கூறுகிறார். 1806ல் கதேவின் உதவியுடன் ஹெகல் ஊதியம் 100 தாலர்களாக மாற்றப்பட்டது.
ஆனால் மிக குறைந்த வசதிகளுடன் வாழக்கூட அப்போது 200 தாலர் தேவையாக இருந்தது. தனது நிதிநிலை
கண்டு கடுமையான வருத்தத்தில் அவர் இருந்தார். அறிவியல் நாட்டம் தன்னை இவ்வாறு வைத்துள்ளது- அதே அறிவியல் தன்னை உயர்த்தும் எனவும் நம்பினார். 1806-07ல் பினோமனலாஜி புத்தகத்தை முடிக்க அவர் அரும்பாடுபட
வேண்டியதாயிற்று. செலவிற்கும் பணமற்ற சூழல் நிலவியது. அவர் குடியிருந்த வீட்டுப்பெண்மணி கிறிஸ்டியானா ஜோகனாவுடன் உறவு இருந்ததால் லுத்விக்
என்கிற குழந்தைக்கு அவர் தந்தையானார்.
Comments
Post a Comment