https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 8, 2017

மார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 2


II
1842களில் மார்க்ஸ் இருந்த பத்ரிக்கை அலுவலகத்திற்கு எங்கெல்ஸ் வந்து செல்பவராக இருந்தார். 1844களில் அவர் சோசலிச சிந்தனைகளில் உறுதி கொண்டவராக மாறியிருந்தார். பிரிட்டிஷ் தொழில்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். பாரிசில் அவர்கள் காபி டேபிள்களில் சந்திப்பதும் நடக்க துவங்கியது. ஜென்னி பிள்ளைப்பேறுக்காக ரைன்லாந்த் சென்ற அக்காலத்தில் எங்கெல்ஸ்  தனது சந்திப்பை மார்க்ஸ் வீட்டில் மேற்கொள்ளத் துவங்கினார்.  தொடர்ந்த 10 நாட்கள் விவாதங்கள் அவர்களது தோழமையை உறுதிப்படுத்தியது. வாழ்நாள் நட்பாக அவர்கள் தோழமை உச்சம் சென்றது.

எதிர்படும் அனைத்து குறித்தும் தயவுதாட்சண்யமற்ற விமர்சனம் ‘Ruthless criticism of everything existing, less be afraid of struggle with the powers that be’ என்கிற சிந்தனைக்கு மார்க்ஸ் வந்து சேர்கிறார். ’Violent with genius’ என இக்கட்ட மார்க்ஸ் பற்றி பெலிக்ஸ் கூறுகிறார்.  Jewish question, The philosophy of Right விமர்சன கட்டுரைகளை மார்க்ஸ் எழுதுகிறார்.. முந்திய புரட்சிகள் நடைமுறைப்படுத்த தவறிய   மத அழித்தொழிப்பு, சொத்து பறிமுதல் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். Permanent Revoultion என்கிற நிரந்தர புரட்சி கருத்திற்கும் அவர் வருகிறார் . பின்னாட்களில் டிராட்ஸ்கி இதை பயன்படுத்தி பேசத்துவங்கினார். பாட்டாளி வர்க்கத்தை யுனிவர்சல் கிளாஸ் என்றார் மார்க்ஸ்- the class that would mean the end of all classes அனைத்து வர்க்கங்களையும் முடிவிற்கு கொணரும் வர்க்கம் எனவும் குறிப்பிட்டார்.
1844 மே மதத்தில் ஆர்னால்ட் ரூகா பாயர்பாக்கிற்கு எழுதிய கடிதம் ஒன்றில்  மார்க்சின் மேதாவிலாசம் புத்திகூர்மையை குறிப்பிட்டு விமர்சிக்கிறார் "He works with extraordinary intensity.He has a fresh talent, which lets itself go for the moment in an arrogant dialectic that tries to explain too much. But he finishes nothing. He breaks off again and again, and dives once again into a shreless sea of books" கரை தென்படாத கடல் மாதிரியான புத்தகங்களில் அவர் ஆழ்ந்து விடுகிறார் எதையும் முடிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறார் என்கிற மார்க்ஸ் பற்றிய தனது அபிப்ராயத்தை ரூகா வெளிப்படுத்தினார்.
Paris Manuscripts என்கிற பொருளாதார தத்துவ கையேடுகள் என்பதில் மார்க்ஸ் ஈடுபட்டிருந்தார். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய பொருளாதரா வல்லுனர்கள் மீது மரியாதை கொண்டிருந்தாலும் மார்க்ஸ் அவர்களது கருத்துக்களை விமர்சித்துவந்தார். தேசங்கள் ஒர்க்சாப் ஆகிவிட்டன. மனிதர்கள் உற்பத்தியும் நுகர்வும் கொண்ட மெஷின்கள் ஆக்கப்பட்டுவிட்டனர். மனித வாழ்க்கை மூலதனமாகிவிட்டது. கண்மூடித்தனமாக பொருளாதார விதிகள் உலகை ஆள்கின்றன என்கிற ரிக்கார்டோ எழுதியதை சுட்டிக்காட்டி மார்க்ஸ் விவாதிக்கிறார். மார்க்சை பொருளாதாரவாதி என சொல்வதைவிட அவரை பொருளாதார விமர்சகர் என பார்ப்பதே சரியாக இருக்கும் என்கிற கருத்தை ராபர்ட் டக்கர் கொண்டிருக்கிறார்.
Just as Gods are originally not the cause but the effect of man's intellectual confusion... later the relationship becomes reciprocal - மனிதனின் அறிவார்ந்த குழப்பத்தின் விளைவாக கடவுளே தவிர , கடவுள் மனித படைப்பிற்கு  காரணகர்த்தா அல்ல என்றார் மார்க்ஸ். மனிதனை அந்நியமாக்கும் தனிசொத்துரிமையை கடப்பது கம்யூனிசம். மனித சாரத்தை மீட்டுத் தருவது- மனிதனை மனிதனாக்குவது, மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனிதனுக்குமான முரண்களை தீர்ப்பது என்றார். ”.communism as the positive transcendence of private property, which is human self alienation: communism therefore as the real appropriation of the human essence through and for man; communism as the complete return of man to himself as a social that is human being - a return become conscious and accomplished within the entire richness of the social development up to this time.This communism fully developed naturalism equals humanism, as fully developed huminsm equlas naturalism; it is the genuine resoultion of the conflict between man  and nature, between man and man, the true resoultionof the struggle between freedom and necessity, between individualand species. Communism is the riddle of history solved and knows itself to be this solution.” என்கிற அற்புத விளக்கத்தை மார்க்ஸ் நல்கினார். இந்த ஸ்டேட்மெண்ட்டில் செயல்வகைப்பட்ட விளக்கம் ஏதும் அவர் தரவில்லை. The world's materialist character was its First cause பொருள்தான் முதலானது என்கிற ஆழமான நம்பிக்கையை அவர் வந்தடைந்தார்.
ப்ருனோ பாயரை விமர்சித்து அவரது முதல் புத்தகமாக புனித குடும்பம் வந்தது.. டேவிட் பெலிக்ஸ் ’புனித குடும்பம்’ புத்த்கம் என்கிற வகையில் தோல்விதான் என்கிற கருத்தை கூறுகிறார். 1845 பிப்ரவரியில் வெளியான இப்புத்தகம் புருனோ பாயரின் செல்வாக்கை சற்று குறைத்தது எனலாம். பாரிசில் நீடித்து இருக்கமுடியாத சூழலில் மார்க்ஸ், பகுனின், ரூகா , ஹைன் வெளியேற்றப்பட்டனர். 1846 பிப்ரவரியில் மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் சென்றார். இருக்கிற வீட்டு சாமான்களை விற்றுவிட்டு பின்னர் ஜென்னி போய் மார்க்சுடன் சேர்ந்துகொண்டார்.
பாயர்பாக் ஆய்வுகள் தீசஸ் 11ல் (Theses on Feuerbach)  புகழ்வாய்ந்த திரும்ப திரும்ப சொல்லப்படும் அவரது மேற்கோளான ’ The philosophers have only interpreted the world in various ways, the point is to change it’– உலகை வியாக்கியானப்படுத்தி கொண்டிருப்பதல்ல, மாற்றுவது என்பதுதான் முக்கியமானது என்பதை சொல்கிறார். இந்த நிலையில் அதீதமாக  Marx தன்னை ’to be chief of operations in changing world’ என கருதிக்கொண்டு விட்டதாக பெலிக்ஸ் விமர்சனம் செய்கிறார். 1845 செப்டம்பர் முதல் 1846 ஆகஸ்ட் வரையில் எங்கெல்ஸ் உடன் அவர் ஜெர்மன் தத்துவம் எழுதுவதில் கவனம் குவிக்கிறார். தத்துவத்தின் வறுமை poverty of philosophy (misery of) ஏப்ரல் 1847லும், கம்யூனிஸ்ட் அறிக்கை ஜனவரி 1848லும் எழுதப்படுகிறது. 1859ல் அவர் தன்னை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்ளமுடிந்தது என்கிறார் டேவிட் பெலிக்ஸ்.
It is not consciousness that determines life, but life that determines consciousness என்பதை உறுதிபட  மார்க்ஸ் நிறுவுகிறார். தனது பொருளாதார ஆய்வுகளின் மூலம் மார்க்ஸ் புரட்சியை பாட்டாளிமயப்படுத்தலிலும் சர்வதேசமயப்படுத்தலிலும் நகர்ந்துவிட்டார் . 1846  System of Economic contradictions or The philosophy of Misery  என்பதை புருதான் இரண்டு வால்யூம்களில் கொணர்ந்தார். இதனை விமர்சித்துதான் மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என மேற்சொன்ன புத்தகத்தை 1847ல் கொணர்கிறார். புருதானின் அனார்க்கிச சோசலிச பொருளாதாரம் இதில் விமர்சனத்திற்கு உள்ளானதாக பெலிக்ஸ் சொல்கிறார். பொருளாதாரத்தின் சாரம் அரசியல்தான், உண்மையான அரசியல் புரட்சிதான் என்பது எதிரொலிக்கப்படுகிறது.
ஏறத்தாழ அவர் கம்யூனிஸ்ட் அறிக்கையை இறுதி செய்திட்ட காலத்துடன் பிரஸ்ஸல்ஸ் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. அகாடமிக் வட்டாரங்களுக்கு பெரும் புத்தகங்களை  எழுதி தருவதல்ல, புரட்சிகர இயக்கங்களை உந்தி எழுப்புவது, அவர்களிடத்தில் கருத்துக்களை எடுத்து செல்வது எங்களின் நோக்கமாக இருந்தது என எங்கெல்ஸ் இக்காலத்தில் தங்கள் சிந்தனையில் ஏற்பட்ட முக்கிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறார். 1844-45களில் எங்கெல்ஸ் அவரது  ரைன்லாந்து பெர்மன்  மற்றும் எல்பெர்ஃபெல்ட் பகுதிகளில் 200 பேர்கள் பங்கேற்ற கம்யூனிஸ்ட் குழு கூட்டங்கள் மூன்றை நடத்திவிட்டதாக தெரிவிக்கிறார். வேடிக்கையாக ஒருமுறை அவர் அங்கு தொழிலாளிதான் இல்லை ’only the proletariat was missing’ என குறிப்பிடுகிறார். நெருக்கடிகள் ஏற்பட்டதால் அதற்குமேல் கூட்டங்கள் நடத்தமுடியாமல் போனது.
 எங்கெல்ஸ் The condition of working class in England எழுதி   மார்க்சிடம் தெரிவித்திருந்தார். 1845ல் லீப்சிக்கில் வெளியான அப்புத்தகம் மார்க்சின் புத்தகங்களைவிட அந்நேரத்தில் அதிகம் விற்றதாக பெலிக்ஸ் சொல்கிறார். 1845ல் மார்க்சை லண்டன் அழைத்து சென்று ஆறுவாரம் மான்செஸ்டரில் தங்கவைத்து கார்ல் ஷாப்பர் போன்றவர்களை எங்கெல்ஸ்தான் அறிமுகம் செய்து வைக்கிறார். The Northern Star என்பது சார்ட்டிஸ்ட்களின் பத்ரிக்கை. அதன் எடிட்டராக இருந்த ஜூலியன் ஹார்னே அறிமுகம் மார்க்சிற்கு கிடைக்கிறது. 1846 ல் அமைப்பு  வடிவத்தில்  கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டன்ஸ் கமிட்டி ஒன்றை மார்க்ஸ் ஏற்படுத்துகிறார்.
 மார்ச் 30 1846ல்  மார்க்ஸ், எங்கெல்ஸ், ருஷ்யத்தோழர் பாவல் அன்னென்காவ் , தையற்கலைஞராக இருந்து ஜெர்மன் தொழிலாளர்களிடம் வேலை செய்த வைட்லிங்  உள்ளிட்டவர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. தொழிலாளர் இயக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவர்கள் கூடினார்கள். எங்கெல்ஸ் தலைமையுரையில் பல தோழர்கள் பல்வேறு வகைகளில் தொழிலாளர்களிடம் வேலைசெய்து வருகிறார்கள். அவர்களுக்கு கொள்கைகளை உருவாக்க நேரமில்லாமல் இருக்கலாம். பொதுவான doctrine-கோட்பாடு ஒன்றை ஏற்று செயல்படுத்துவதற்காக நாம் கூடியிருக்கிறோம் என அறிமுகம் செய்தார்.  ஏராள தோழர்களிடம் கம்யூனிசம் என பேசி வேலை செய்யும் வைட்லிங் சொல்லட்டும் எத்தனைபேருக்கு அவர்களால் ’வேலை’ போயிருக்கும் என்பதை மார்க்ஸ் கேலியாக சொல்லிட வைட்லிங் கடுமையான பதிலை தந்தார். மார்க்ஸ் தனது bookish theory யை உண்மையான தொழிலாளர்களிடம் திணிக்க பார்க்கிறார் என்றார் வைட்லிங் . அறியாமையால் எவருக்கும் பலனிருக்கபோவதில்லை என மார்க்ஸ் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டியதானது.
1846 CCC என்கிற கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டண்ட் குழுவிற்கு பாரிஸ் நிருபராக இருக்க வேண்டி புருதானுக்கு மார்க்ஸ் எழுதினார். அதில் புருதான் புத்தக ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர்  ஹெர் க்ருண் பற்றி மார்க்ஸ் விமர்சித்திருந்தார். புருதோனிடமிருந்து மார்க்ஸ் பதிலை பெற்றாலும் பாரிஸ் நிருபர் என்பதற்கான இசைவை பெறவில்லை. கம்யூனிச கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விவாதிக்க பரந்த பல நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சர்வதேச அமைப்பு ஒன்றின் தேவை குறித்து ஷாப்பர் - மார்க்ஸ் கடிதங்கள் எழுதிகொண்டனர். ஷாப்பர் அதை அமுல்படுத்தும்வகையில் உரிய திட்டமென்ன என மார்க்சை கேட்டிருந்தார்.
மார்க்சின் ஆலோசனையான ’கம்யூனிஸ்ட் காங்கிரஸ்’ என்பதை ஷாப்பர் ஏற்றார். அதே நேரத்தில் பிரஸ்ஸல்ஸிலிருந்து செயல்படும் மார்க்ஸ் குழுவை பற்றி பேராசிரியத்தனமான கர்வம் என்று விமர்சித்து ( " you proletarians of Brussels still have the professor's arrogance in a high degree" ) ஷாப்பர் எழுதினார். பதில் தரும் வகையில் பாரிசிலிருந்து எங்கெல்ஸ் ’லண்டன் ஷாப்பர் குழுவினரை’ விமர்சித்து கடிதம் எழுதினார். இவர்களுடன் வேலை செய்வது கடினம்தான்,  பொறாமையுடன் பேராசிரியர் என  குற்றம் சொல்வது நம்மை ஆர்வமிழக்க செய்கிறது என்றார் எங்கெல்ஸ்.
 ஜனவரி 20 1847ல் ’லீக் ஆப் ஜஸ்டிஸ்’  ஜோசப் மோல் என்பவரை பிரஸ்ஸல்ஸ் அனுப்புகிறது. சி சி சி யை தங்களுடன் வந்து இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறார் மோல். மார்க்ஸ் அக்குழுவினரின் கற்பனாவாத சிந்தனைகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். மார்க்ஸ் தனது சிந்தனைகளால் லீக் உறுப்பினர்களை சரி செய்து ஏற்கவைக்க முடியும் என மோல் தெரிவிக்க லீக் ஆப் ஜஸ்டிஸ் உடன் செல்வது என முடிவெடுக்கின்றனர்.
’லீக் ஆப் ஜஸ்டிஸ்’  ஜூன்2 -9 1847ல் கூடுகிறது. மார்க்ஸ் வரவில்லை. எங்கெல்ஸ் பாரிஸ் பரதிநிதியாக பங்கேற்றார். கம்யூனிஸ்ட் லீக் என பெயரை மாற்ற முடிவெடுக்கின்றனர். All men are Brothers என்பதற்கு பதிலாக  Proletarians of all lands, Unite என்பதும் ஏற்கப்படுகிறது. பிரஸ்ஸல்ஸ் சி சி சி கம்யூனிஸ்ட் லீகின் கிளையாக ஆகஸ்ட் 5 1847ல் மாற்றப்பட்டு தலைவர் மார்க்ஸ் என அறிவிக்கின்றனர். கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்கள் வேறு எந்த அரசியல் அமைப்புடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்கிற லண்டன் செண்ட்ரல் கமிட்டியின்  வழிகாட்டலை பிரஸ்ஸல்ஸ் கமிட்டியால் ஏற்கமுடியாது என்கிறார் மார்க்ஸ். We see this unpolitical because you thereby rob our people of any chance of influencing these groups  என்ற கருத்தை மார்க்ஸ் கூறினார்.

 கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது காங்கிரஸ் அவசியம் என மார்க்ஸ் கருதினார். லண்டனில் நவ 30- டிசம்பர் 8 1947வரை அக்கூட்டம் நடந்தது. மார்க்ஸ் பங்கேற்றார். முதலாளித்துவ முறையிலான ஆட்சியை தூக்கி எறிவது, தனியார் சொத்துரிமையற்ற, வர்க்கபேதமற்ற சமுதாயம் அமைப்பது, பாட்டாளிகளின் ஆட்சி என்பதை லீக் ஏற்றது. கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதும் பொறுப்பு மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு தரப்படுகிறது. 

No comments:

Post a Comment