Skip to main content

ஆச்சார்யா கிருபளானி 3

III
கிருபளானி சுயராஜ்யா, சர்வோதயா, இல்லஸ்ட்ரேடட் வீக்லி, விஸ்வபாரதி போன்ற பத்ரிக்கைகளில் கட்டுரைகள் எழுதிவந்தார்.  புத்தகங்கள் எழுதியுள்ளார். சர்கா அரசியல் என்கிற கட்டுரையை அவர் எழுதினார். சர்வதேச வர்த்தகம், தேசத்தின் தொழில் வளர்ச்சி, கிராமப்புற குடிசைத்தொழில் வளர்ச்சி குறித்து அதில் விவாதித்தார். வலுத்தவனுக்கும் பலவீனமானவனுக்கும் இடையே உள்ள வர்த்தகம் ஒருபோதும் சமத்துவத்தை உருவாக்காது என்றார். நமக்கு குடிசைத்தொழில் சார்ந்த பொருளாதாரம்தான் வேலையின்மையை போக்கும். வறுமையை குறைக்கும். விவசாயிக்கு அனுசரணையான தொழிலாகவும் இருக்கும் என அவர் எழுதினார். காந்திய பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை எப்போதும் அவர் வலியுறுத்துபவராக இருந்தார்.
வளர்ச்சி என்பது அமைப்பாவதுதான். அறிவுஜீவிகள்கூட எண்ணங்களின் அமைப்பாளர்கள்தான். இலக்கியவாதிகளும், கலைஞர்களும் கூட அமைப்பாளர்கள்தான். குறைந்த செலவில், மணிநேரத்தில் மக்களை திரட்டும் நடவடிக்கை எதுவோ அதுதான் பயனளிக்கும். நமக்குள்ள பலவீனமே நம்மால் திரளமுடியாமையே. மக்களை ஈடுபடுத்தும் குணம் நமக்கு கைவரவேண்டும் என்றார் கிருபளானி. மையப்படுத்தப்பட்ட பெருந்தொழில் கலாச்சாரம் மேலிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். ஆனால் நமது குடிசைத்தொழில் கலாச்சாரம்  சுய ஆர்வம், பங்களிப்பை மற்றும் ஜனநாயகத்தையும் கூட்டும் என்றார். The labourer in a mill feels materially depressed, even when he gets more than the village artisan. His moral loss is incalculable என எழுதும்போது அவர் மார்க்சிய பார்வையான அந்நியமாதல் சிந்தனைக்கு நெருங்கி வருகிறார். Wage slave கூலி அடிமை என்கிற மார்க்சிய சொல்லாட்சியையும் அவர் பயன்படுத்துகிறார்.

சர்கா- காதி என காந்தி பேசும்போது அதனை கேலியாக பார்ப்பது சரியானதல்ல என்றார் கிருபளானி. Cottage industry is by its very nature, socialistic in character. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பேசிய உபரிமதிப்பு கோட்பாட்டை சுட்டிக்காட்டி ’காட்டேஜ் தொழில்’ மற்ற முதலாளி எடுத்து செல்லக்கூடிய உபரிமதிப்பை உருவாக்காது என்று பேசினார் கிருபளானி. கிராமத்தொழிலுக்கு தேவைப்படும்  கருவிகளை சுலப தவணைகளில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். புரட்சி என்றாலே வர்க்க வெறுப்பு, போராட்டம் என்பதில்தான் வரும்- அமைதியான ஒத்துழைப்பு முறைகளில் வராது என்கிற கருத்தை தான் ஏற்கவில்லை என்றார் கிருபளானி.  What is called revoultion was only the last step in an evolutionary process என அவர் புரட்சி குறித்து விளக்கினார். கொடிய வறுமையும், பட்டினியும் எப்போதுமே புரட்சிக்கான  நல்ல கருவிகளாகும் என்பது  அனுபவத்தில் சரியாக இருக்கவில்லை என்று எழுதினார் கிருபளானி.
பழமையான ஒன்று என்பதாலேயே புரட்சிக்கு ஒத்துவராது என குடிசைத் தொழில் பற்றி சொல்லப்படுகிறது. அப்போது வன்முறை என்பது காலம்காலமாக இருக்கின்ற பழமையான ஒன்றுதானே என  எதிர்கேள்வியை அவர் வைத்தார். The difference between a social reform and a revoultionary activity, is not necessarily in the activities undertaken, but in the way they are done and the purpose for which they are done என விளக்கமளித்து காந்தியின் செயல்களில் புரட்சிகர தனமைகள் இருப்பதாக தனது வாதங்களை அவர் அடுக்கினார். தீண்டாமை குறித்த காந்தியின் போராட்டத்தை ’பெருமாட்டியின் போராட்டம்’ என கேலி செய்வது சரியல்ல, அது புரட்சிகரபோராட்டம் என எழுதினார் கிருபளானி.
மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பதிலிருந்து அவர் மாறுபட்டு பேசினார். Marxist Materialism which is supposed to based on science has little to do with moral will and values. It is indifferent about means. அது வழிகளைப்பற்றி எந்த நெறிகோட்பாடுகளையும் வைத்துக்கொள்ளவில்லை என்றார். சோவியத்ததில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பற்றி தனது கடும் விமர்சங்களை கிருபளானி முன்வைத்தார். லெனினை புதிய கடவுள் ஆக்குகிறார்கள் என்றார். அவர் உடல் பாதுகாக்கப்பட்டு வந்ததை பற்றி விமர்சித்தார். எழுந்துவரும் தேசிய விடுதலை இயக்கங்களையெல்லாம் பூர்ஷ்வா இயக்கம் என்று முத்திரையிடுவதும் தலைவர்களை விமர்சிக்கும் முறையையும் அவர் ஏற்கவில்லை. ருஷ்யாவை கண்டனம் செய்வதற்காக தான் எதிர்வினையாற்றவில்லை என்றும் அதன் கொள்கை குறித்த விமர்சனபார்வையே அவை என்றும் எழுதியிருந்தார்
வெற்றி அனைத்தையும் தீர்மானிக்கும். வலிமை என்கிற முரட்டுத்தனத்தால் சாதித்துவிடலாம் என்கிற கருத்தில் அவர் உடன்படவில்லை. Humanity is driven to the brutal doctrine that might alone  is right and that success justifies everything என மானுட நடத்தை குறித்த தனது கவலையை வெளியிட்டவர் கிருபளானி.
உண்மை என்பது கடைபிடிக்கப்படவில்லையெனில் பின் அன்போ, விசுவாம் என்பதற்கு அர்த்தம் இருக்காது. இறைவனின் பெயரால் வெளிப்பட்ட மதவெறித்தனமோ, பாட்டாளிகளின் பெயரால் கம்யூனிச வெறித்தனமோ எதிர்விளைவுகளை உருவாக்கும். பாசிசம்கூட இப்படிப்பட்ட எதிர்விளவுதான் என அவர் பேசினார். The ideal conditions that can be produced and reproduced in a science laboratory cannort be created at will in laboratory of society..Under scuh circumstances there can be no scientific certainity about the so called laws of the social sciences என சமுக விஞ்ஞானம் குறித்த தனது பார்வையை கிருபளானி முன்வைத்தார். சமுக மனித நடத்தை பரிசோதனைகள் அறிவியல்கூட பரிசோதனைகளை ஒத்ததல்ல என்றார்.
புரட்சிக்காக நின்ற பல தலைவர்கள் சோவியத்தில் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு ஒழிக்கப்பட்டுவருவதை அவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். In the economic field socialism asserts the equality.. Democracy asserts the oneness and dignity of man in political field என்பது தனது புரிதல் என்றார் கிருபளானி. ருஷ்யாவில் பொருளாதார சோசலிசம் வந்திருக்கலாம். ஆனால் அரசியல் ஜனநாயகத்தை மிதித்து அது வெளித்தெரிகிறது என எழுதினார் அவர். அரசு உதிர்ந்துவிடும் என்று மார்க்சியம் பேசும்போது  ’சுய ஒழுங்கு கொண்ட உயர் வளர்ச்சியடைந்த தனிநபர்கள் சமுக இருப்பு’ என்பதையே குறிப்பாக தருகிறது. ஆனால் நடைமுறையில் (சோவியத்) மிகு அதிகாரம் கொண்ட அரசைத்தான்  கட்டிவருகிறது என விமர்சித்தார் கிருபளானி. பொருளாதார பலன்கள் என்கிற பெயரில் அரசியல், கலாச்சார, ஆன்மீக பின்னடைவுகளை கம்யூனிசம் தருகிறது என்ற கடுமையான தாக்குதலையும் அவர் சோவியத் அனுபவத்திலிருந்து முன்வைத்தார்.
சுரண்டல், அநீதி, லாபவேட்டை கொண்டுள்ளதால் முதலாளித்துவத்தை நாம் விமர்சிக்கிறோம். அகற்றப்படவேண்டும் என கருதுகிறோம். காந்தியை பொறுத்தவரை அவர் எந்த கொள்கைக்கும்-(தான் பேசுவது உட்பட) தன்னை அடிமையாக்கிக்கொள்ளவில்லை. அரசிற்கு அதிக அதிகாரம் என்பதை கண்டு அவர் அஞ்சினார். அதிகாரம் குவிந்த அரசு எந்திரம் ஆன்மா இல்லாதது என்றார். The individual has a soul but the state is a soul-less machine என காந்தி பேசியதாக கிருபளானி சுட்டிக்காட்டினார். A state if it is to function democratically must be pluralistic. It cannot be monolythic என கிருபளானி கருதினார். அவர் சொல்லும் அரசில் முதலாளிகளும் தொழிலாளர்களும் எப்படிப்பட்ட பன்முகத்தனமையை வெளிப்படுத்தமுடியும் என அவர் விளக்கவில்லை.


மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் ஜனநாயகமும் ஒத்துப்போகாது என்றார் கிருபளானி. More of Centralism means less of democaracy என்றார் - democaratic centralism என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டே- ஏமாற்றே என்றார். பொருளாதார decentralisation இல்லாமல் அரசியல் decentralisation இருக்காது என்றார். காந்தி எந்திரங்களை எதிர்க்கிறார் என்கிற விமர்சனத்திற்கு கிருபளானி விளக்கம் தந்தார்.. What I object to is the craze for machinery, not machinery as such.. Dead machinery should not be pitted against the living machines represented by villaagers என்று காந்தி எந்திரமயமாதல் குறித்த தனது பார்வையை தந்ததாக அவ்விளக்கம் செல்கிறது. 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு