Skip to main content

ஹெகல் வாழ்வும் சிந்தனையும் 5

V

இஸ்தவான் மெஸ்சாரஸ் (Istavan Meszaros) ஹெகலிடம் மார்க்சின் உறவு எனும் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் லெனின் குறிப்பிட்டு சொல்வதை நினவுபடுத்துகிறார்.  காபிடல் புரிய ஹெகல் அவசியம். ஹெகலை புரிந்துகொள்ளாததால்தான் பலர் மார்க்சை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்றார் லெனின். மார்க்ஸ்  தனது கிரான்ரிஸ்ஸே, காபிடலில் ஹெகல் குறித்து பேசுகிறர். ஹெகல் மார்க்ஸ் உறவை தத்துவ உறவாக இயக்கவியல் உறவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பார் இஸ்துவான். ஹெகலது டயல்க்டிக்ஸ் அடிப்படையானது என்பார் மார்க்ஸ். ஹெகலின் சாரம்  justifies the political state by presenting the conditions as conditioned, determining as determined என்றார் மார்க்ஸ் துவக்கம் mystical result என்கிற புதிர்நிலை ஆக்கப்பட்டது என்றார். மார்க்சின் இயக்கவியல் ஹெகலை தாண்டி சென்றது என்பதை ஏற்கும் மெஸ்சாரஸ் இருவரையும் எதிர் எதிர் நிறுத்துவது இருவரின் முக்கியத்துவத்தையும் குறைத்துவிடும் என்றார். ஹெகலை மார்க்சின் பெயரால் தாக்குவது மார்க்சை குறைத்துவிடும் என எச்சரித்தார்.
காண்ட்டின் மீதான விமர்சனம் என்கிற வகையில் ஹெகல் சிந்தனைகள் மார்க்சிற்கு முக்கியமாயின. ஹெகலின் இயக்கவியல் முரண்தர்க்கமுறை மார்க்ஸிற்கு உதவியது. அவர் முதலாளித்துவ வளர்ச்சி அதன் உற்பத்திமுறை ஆய்விற்கு அதனை பயன்படுத்திக் கொண்டார். ஹெகல் வரலாறு என்பதை செயலுரிமை அல்லது சுதந்திரம் குறித்த விழிப்பின் வளர்ச்சி என்றார். சமுக நிறுவனங்கள் அதைப்பொறுத்தே அமைவதாகவும் தெரிவித்தார். உணர்வு இருப்பை தீர்மானிப்பதாக அவர் வந்து சேர்ந்தார். கிறிஸ்துவம், பிரஞ்சுபுரட்சி, அரசியல் அமைப்பு சட்டப்படியான முடியாட்சி என மனித வரலாறு வளர்கிறது. மதத்தில் ஏற்படும் வளர்ச்சி, தத்துவ கருத்துக்களுக்கு ஏற்ப சமுக நிறுவனங்கள், அரசியல் வளர்ச்சி என அவர் நிறுவிட முயற்சித்தார்.
ஹெகல் மார்க்ஸ் என்கிற இருபெயர்கள் ஏற்பு மறுப்பு என்கிற இரண்டுமான பெயர்கள் என்றார் சிட்னி ஹூக். Hegelians elements in Marx are integral to his system என்றார் ஹூக். ஹெகலின் முறையியல் மற்றும் கோட்பாட்டியல் தாக்கம் மார்க்சிடம் செல்வாக்கு செலுத்தியது. Rational Theology காரணகாரிய இறையியலாக நாம் ஹெகலை எடுத்துக்கொள்ளலாம். உருவம்- உள்ளடக்கம், ஆன்மா-பொருள், தனி- சமூகம், மனசாட்சி- சட்டம் என்பன போன்ற இருமைகளை கடக்க விரும்பினார் ஹெகல். அவையெல்லாம் நிகழ்தலின் தொடரிகள் என்றார்.  Without the world, God is not God  என ஹெகல் விளக்கினார். கடவுள் தன்னை உலகு வழியாக விவரித்துக்கொள்கிறார் என அவர் பேசியதை நம் வசதிக்காக புரிந்துகொள்ளலாம்.
மனிதர்களின் மெய்யான இருத்தல் என்பது அவர்களது மெய்யான வாழ்க்கை நிகழ்ச்சிபோக்காகும் என மார்க்ஸ் ஜெர்மன் சித்தாந்தத்தில் குறிப்பிட்டார். விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கும் ஜெர்மன் தத்துவஞானத்திற்கு பதிலாக நாம் மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏறுகிறோம். அதாவது உடலுருவில் விளங்கும் மனிதர்களை வந்தடைவதற்காக என்றார்.   
ஹெகலின்ஆன்மா கருத்தியல்வாதம்’ என்கிற இலக்கை மார்க்ஸ் ஏற்கவில்லை. Whatever is real is reasonable, and whatever is reasonable is real  என்பது ஹெகலின் புகழ்வாய்ந்த மேற்கோள்களில் ஒன்று. அவரது முறைமையில் காரணம் யதார்த்ததுடன் அடையாளமாகிறது. ஹெகல் தான்உள்ளதன்கண் அமைதி’ என்பதை அரசியலில் உணர்த்தவில்லை என பிற்காலத்தில் கேள்வி ஒன்றிற்கு விளக்கமாக தந்தார். இருக்கின்ற பிரஷ்யா அரசு பிரெடரிக் வில்லியம் III அவர்களின் ஆட்சி எந்த அளவு நேரிய நியாயம் கொண்டது என்கிற கேள்வி ஹெகலைப்பார்த்து எழுந்தது.
For Hegel the state  is the realisation of moral principles and concrete freedom. It is logically primary to society , the condition of all social life. For marx the state is a product of social life, not its condtion என இருவரின் வேறுபட்ட புரிதலை சிட்னிஹூக் விளக்குவார். அரசு என்பதே இல்லாமல் சமுகங்கள் இருந்துள்ளனஎனவே தர்க்கப்படி பார்த்தால் சமுகம்தான் முதல்அதில் முக்கிய அமைப்பாக அரசு என்பதுசெயல்படுகிறது என மார்க்ஸ் விளக்கம் அமையும். states will exist so long as economic classes exist -பொருளாதார வகைப்பட்டு வர்க்கங்கள் உள்ளவரை அரசு இருக்கும் என்பது சிட்னிஹூக் தரும் மார்க்சிய விளக்கம். ஹெகலின் அரசியல் தத்துவம் அவரின் மதமெய்ப்பொருளியலின் கூறாக உள்ளது என்கிறார் ஹூக். ஹெகலைப் பொறுத்தவரை தத்துவம் the thinking view of things-  சிந்தனயின் செயல்பாடு. அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியாகவும் அதன் குழுவாகவும் அர்த்தம் இருக்கிறது. தத்துவவாதி அதனை கண்டுணரவேண்டும். ஹெகலிடம் உலகை எவ்வாறு மாற்றிடவேண்டும் என்பதை நாம் தேடமுடியாது என்கிறார் ஹூக். Sucking the world from his finger tips by a process of logical deduction, on the other writing apologies for the brute given என சிட்னி கேலியாக விமர்சிப்பார்.
All Truth is concrete என்றார் ஹெகல்.. அவை கருத்து தர்க்கவியல்பட்டவை என்றார். சிந்தனை சிந்திப்பதால் உண்மையை அந்த சிஸ்டத்தில் கண்டுணர்கிறது என்றார். மார்க்சிற்கு தூலமானவை ’இருப்பவை’ ’சிந்தனைக்குரியவகையில் உள்ளவை’ என்றாகிறது. ஆனால் அவற்றால் அமைக்கப்பட்டவை அல்ல என சிட்னி இருவர் புரிதல் பற்றி கூறுகிறார். செயல் மற்றும் சிந்தனையின் ஒற்றுமையை அதிகமாக வலியுறுத்தினார் மார்க்ஸ். சமுக கோட்பாடுகள் எதை உருவாக்குகின்றன என்பதால் தீர்ப்பிடபடுகின்றன. உன்னதமான சமூகம் ஒன்றைப் பற்றை கோட்பாட்டாக்கம் செய்யும்போது இன்றுள்ள சமுகத்தை உன்னதமாக மாற்றிட முயற்சி எடுக்காமல் இருப்பது என்பது இன்றுள்ளதை ஏற்பதாகவே ஆகும் என்கிற மார்க்ஸ் பார்வையை சிட்னி விவரிக்கிறார். மார்க்சின் தத்துவ முறையியல் விமர்சனாபூர்வமானது. சமுகவியல் விசாரிப்புகள் கொண்டது- Sociaology not axiology சமுகவியல் விழுமவியல் அல்ல என்பார் சிட்னி. பாட்டாளிவர்க்கம் தத்துவத்தில் அறிவார்ந்த ஆயுதங்களையும், தத்துவம் பாட்டாளிவர்க்கத்திடம் தனது பொருண்மை கருவிகளையும் கண்டாகவேண்டும் என்றார் மார்க்ஸ்.
உலகம் மனித படைப்பிற்கு முன்னரான கடவுளை அவரது என்றைக்குமான நிரந்தர சாரத்தில் வெளிப்படுத்துவது தனது தத்துவம் என்கிற உரிமைகோரல் ஹெகலிடம் இருந்தது. A true idea is one which systematises all abstractions into a patterned unity which is concrete. There is nothing intelligble in anything which is outside that unity என்பது ஹெகலியம். மார்க்சிற்கு The existence of a thing is as intelligble as it is discovered to be. But the existence of things does not depend upon the order in which we learn
History as the Autobiography of God என்பதா History as the Pursuit of Human Ends என்பதா என்கிற கேள்வி ஹெகலிடமிருந்து மார்க்சை பிரிக்கிறது என வரையறுக்கிறார் சிட்னி. வரலாற்றை முறைமைப்படுத்துவது என்பதையோ, தீர்மானகரம் என்பதையோ மார்க்ஸ் மறுக்கவில்லை. ’விதிவாதம்’ என்பதை அவர் ஏற்கவில்லை. மானுடமில்லாத சக்திகளால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை. மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்றார் மார்க்ஸ். மார்க்ஸ் மனித வரலாற்றை சமுக வரலாறாக பார்க்கிறார். தனிமனிதர் என்ன செய்கிறார் என்பதைவிட வர்க்கம் அதில் உறுப்பினன் என்கிறவர் என்ன செய்கிறார் என்பதை அவர் விவாதிக்கிறார். எனவேதான் வரலாறு என்பது வர்க்க எழுச்சி , வீழ்ச்சி, முயற்சியாக அவரின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
For Hegel history is a progressive realsiation of freedom, for Marx it is a progressive development towards the socialisation of the means of life. Without that such socialisation freedom is fetish, empty..என இருவர் புரிதல்கலையும் சிட்னி மேலும் தெளிவாக்குகிறார். யதார்த்தம் என்பது ஆன்மீகமானது-முறையியலானது- பகுத்தறியக்கூடியது என்பது ஹெகலிய முன்வைப்புகள். Society as a human herd சமுகம் மனித மந்தை என்பார் ஹெகல். முழுமையை உணரும் தனித்துவம் அவருக்கு தேவைப்படுகிறது. Higher the system, true the individual என்பது அவர் பார்வை. Men need one another in order to live before they need one another in order to converse... consciousness is social before it is individual என்பது மார்க்ஸ் பார்வை.
எது நடந்ததோ அதை நடக்கவேண்டியபடித்தான் நடந்தது என்பார் ஹெகல். possibilities must be grounded in the nature of actual. மார்க்ஸ் பொறுத்தவரை Ethics என்பது வர்க்கம் சார்ந்ததுதான். வர்க்கம் தனது தேவைகளையே உரிமைகளாக பிரகடனப்படுத்தவேண்டியுள்ளது. We do not set ourselves up against the world in doctrinaire fashion with a new principle: Here is the truth, Here you must kneel. We develop new principles of the world out ofthe existing principles of the existing world. We do not proclaim to it: cease from your struggles..They are silly- we will tell you aht to fight for!We only show the world what it is that it must acquire even against its will. என மிக அடக்கமாக ஆனால் உறுதியாக தங்கள் சிந்தனைக்குரிய இடத்தை மார்க்ஸ் ரூகேவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெளிவுபடுத்துகிறார். எங்களிடம் தான் உண்மையிருக்கிறது. இருக்கிற உலகிடமிருந்து, கோட்பாடுகளிலிருந்து புதிய கோட்பாடுகளை உருவாக்கிவிட்டோம். மண்டியிடுங்கள் என நாங்கள் கோரவில்லை. இவ்வுல்கம் எவ்வாறு இருக்கிறது என காட்டியுள்ளோம். அதன் விருப்பத்திற்கு மாறாக கூட அது அடைந்தாகவேண்டும் என சொல்கிறோம் என்றார் மார்க்ஸ்.

 வழிமுறை என்பதன் வாழ்வு நடைமுறைக்குள்ளாதல் என்பதில்தான் இருக்கிறது. Marxian totality is social and limited by other totalities, while Hegelian totality is metaphysical and unlimited என்கிறார் சிட்னி. 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு