https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, June 13, 2017

லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3

III
1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் லாலாஜி தலைவராக் இருந்தார். அவர் தனது உரையில் பஞ்சாபில் நடக்கும் சீர்குலைவுகள், ஜாலியன்வாலாபக் படுகொளைகள் பர்றி குறிப்பிட்டார். இராணுவ சட்டம் பெயரில் ஜென்ரல் டயர் ந்டத்திய கொடுரத்தை அவர்  எடுத்துரைத்தார். திலகர் மறைவின் பேரிழைப்பை அவர் சுட்டிக்காட்டினார். பஞ்சாபியர்களின் சிறப்புகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்களின் சேவைகளை அவர் குறிப்பிடார். மைக்கேல் ஒ டயரின் அலங்கோல ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
 ஜாலியன்வாலாபாக் கொடூரங்களை கண்டபின் நாம் தெளிவாக மாண்டேகுவிடம் தெரிவிக்க வேண்டும். உங்களின் வெற்று பேச்சுக்களால் யாரும் ஏமாறப்போவதில்லை. நீங்களும் ஏமாறவேண்டாம் என தெளிவாக சொல்லவேண்டும் என தனது  தலைமையுரையில் அவர் வேண்டுகோள்விடுத்தார். டயர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், இராணுவசட்டப்படி கைதானவர்களை விடுவித்து வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும், பஞ்சாபில் உடைமைகளை இழந்தவர்க்கு நட்டஈடு வழங்கவேண்டும், லார்ட் செம்ஸ்போர்ட் பதவி விலகவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்மொழிந்தார்
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கருத்தொற்றுமை இல்லாத அம்சங்களில் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது. அவர் பக்கசார்பு எடுப்பவராக இருக்கக்கூடாது என்கிற அமைப்பு ஒழுங்கை அவர் சுட்டிக்காட்டினார். தானும் அவ்வறே நடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தீவிரமான அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவர் மத்தியிலும் கருத்துவேறுபாடுகள் வராமல் இருக்காது. அரசியலில் ஒதுங்கி இருப்பவரும் தலைமைக்கு வரமுடியாது. முற்றிலும் பாரபட்சமற்றவர் என எவரும் இருக்கமுடியாது. இப்படியுள்ள சூழலில்தான் தீவிரமாக இயங்குபவர் மத்தியிலிருந்து தலைவரை தேர்ந்த்தெடுக்க வேண்டியுள்ளது. கருத்தொற்றுமை உள்ள விஷயத்தில் அவர்தான் காங்கிரசின் அடையாளமாக பேசுகிறவர் என்கிற அரசியல்தலைமை குறித்த விளக்கத்தை லஜ்பத் தந்தார்.
மாண்டேகு அமர்த்தியுள்ள ஷாஃபி, சர்மா, சாப்ருவிற்கு வாழ்த்துகள் ஆனால் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் அமர்த்திய பிரதிநிதிகள், இந்திய மக்களின் பிரதிநிதிகள் அல்லர் என வித்தியாசப்படுத்திக் காட்டினார். இந்தியாவில் பெரும் வருவாயில் 40 சதம் இராணுவ செலவாகிறது. இப்பெருமகனார்களுக்கும் ரூ 80000 சம்பளம் தரப்படலாம். கோடானுகோடி மக்கள் வாடுகிறார்கள் என நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். ஜனநாயக சர்வாதிகாரம், முடியாட்சியைவிட மோசமானது என அறிவோம் என்றார்.
சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பு குறித்த கடுமையாக அவர் பேசினார். சைமன் திறமைசாலியாக இருக்கலாம். அந்த கமிஷனுக்கு இந்திய மக்கள், வரலாறு, அரசியல் பற்றி ஏதும் தெரியாது என்றார். இந்திய பிரச்சனை மிகப்பெரிது. சிக்கலானது. கடவுளே வந்தாலும் புரிந்து கொள்வது கடினமானது. எனவே கமிஷன் வந்து சில நாட்களில் புத்திபூர்வமாக பரிந்துரைகளை தந்துவிடமுடியாது. அவர்கள் நடவடிக்கை இரகசியமாக உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகளுடன் இருபக்க மரியாதையுடன் விவாதித்து உடன்பாட்டிற்கு வந்துவிட்டால் நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்றார். பிரிட்டிஷார் வெளியேறிவிட்ட்டால் அராஜகம் நிலைக்கும் என அரசாங்க செயலர் சொல்கிறார் .உங்களுடைய துப்பாக்கிமுனை ஆட்சியைவிட எங்களின் அராஜக ஆட்சி சிறப்பாகவே இருக்கும். எனவே அனார்க்கி என்றெல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்ததேவையில்லை என்றார்.

1928 அக்டோபர் 28ல் புனாவிலிருந்து சைமன் கமிஷன் லாகூர் செல்கிறது. லாகூரில் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதிக்கிறது. அக் 29 மாலையில் ஷேக் சிராஜுதின் பராச்சா தலைமையில் நகராட்சி பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அக்டோபர் 30 கமிஷன் வந்த தினத்தில் நண்பகல் லாகூரில் சைமன் திரும்பிப்போ முழக்கத்துடன் பெரும் ஊர்வலம் நடக்கிறது. ஊர்வல முகப்பில் லாலாஜி, மெளலானா ஜாபர் அலி இருந்தனர். போலீசார் அமைதியான ஊர்வலத்தின்மீது தடியடி நடத்தினர். லாலாஜி தாக்கப்பட்டார். அவரது நெஞ்சின்மீது விழுந்த தாக்குதல் சில நாட்களில் அவர் மறைவிற்கு உந்தி தள்ளியது.
தன்மீது நான்கு குண்டாந்தடி தாக்குதல் நடைபெற்றதாக லாலாஜி தெரிவித்தார். இதயத்தில் விழுந்த அடி தொந்திரவு செய்வதாக  கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.  ஹன்ஸ் ராஜ் கைகளில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. டாக்டர் முகமது ஆலம் முழங்கைகளில் குண்டாந்தடி தாக்குதல் நடந்திருந்தது. அவர் வலி பொறுக்கமுடியாத அளவில் அவதியுற்றார். அதேபோல் டாக்டர் சத்யபால் தாக்கப்பட்டிருந்தார். எந்த தலைவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. நம்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சி சவப்பெட்டிக்கு அறையப்படும் ஆணிகளாகட்டும் என்றார் லாலாஜி.
மோதிலால், காந்தி, ஜெயகர் லாலாஜி உடல்நலம் விசாரித்தும் போலீசார் தாக்குதலை கண்டித்தும் தந்திகள் அனுப்பினர். அன்னிபெசண்ட், காந்தி தங்கள் பத்ரிக்கைகளில் இந்நிகழ்வை காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்டு எழுதினர். நேரு கண்டித்து பத்த்ரிக்கை செய்தி தந்தார்.

தனக்கு ஏற்பட்ட தாக்குதலை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் அமர்விற்கு நவம்பர் 4 1928ல் லாலாஜி சென்றார். உரையாற்றினார்.. ஆனால் அவருக்கு உடல் சுகமின்மை ஏற்பட்டது. இன்புளுயன்சா காரணமாக நேரு கமிட்டியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஊர் திரும்பினார். நவம்பர் 17 1928 அன்று காலை தனது 63ஆம் வயதில் அவர் காலமானார்.
நவம்பர் 16 அன்றுகூட தன்னை காணவந்தவர்களை சந்தித்தார். அவரின் மருத்துவர் பரிசோதித்ததில் இதயத்தின் வலப்புற வலி அதிகரித்திருந்ததை அறியமுடிந்தது. மறுநாள் காலை servants of people Society அலுவலத்திற்கு  துணவியார், மகன், மகள்  விரைந்தனர். அவரின் டாக்டர் வந்து அமைதியான முறையில் அவர் மறைந்துவிட்ட செய்தியை உறுதிப்படுத்தினார். செய்தி அறிந்து மக்கள் திரளத்துவங்கினர்
Your Govt's hands are red with the blood of Lalaji என்கிற தீர்மானத்தை அசெம்பிளியில் பண்டிட் துவராகபிரசாத் பிப்ரவரி 15 1929ல் முன்மொழிந்தார். ஆனால் கவர்னர் ஜெனரல் அதை ஏற்கமுடியாது என ரத்து செய்தார்.  Lala lajpat Rai.. died on November as result of wounds received in a clash between the police and the Lahore processionists demonstrating against the Simon Commission என நியுயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.
 Scott என்கிற அதிகாரிதான் லாலாஜியை முதலில் தாக்கினார் என்பதை லாலா ஹன்ஸ்ராஜ் பதிவு செய்தார். நான் என் கைகளை கொண்டு லாலாஜியை காப்பாற்றுவதற்காக மறைத்தபோது என் கைகளை தாக்கி முறித்தனர் என அவர் பதிவு செல்கிறது. டாக்டர் கோபிசந்த தங்களைப் போன்றவர்கள் லாலாஜியை சுற்றி நின்று அடிகளை வாங்கிக்கொள்ளாமல் விட்டிருந்தால் லாலாஜி அங்கேயே அடித்துக்கொல்லப்பட்டிருப்பார் .அவரை நோக்கியே அடிகள் இருந்தன என்றார்.
மகத்தான தேசபக்தர் என நிரூபித்து லாலாஜி மறைந்துள்ளார். அவர் நம்முடன் வாழ்வார். லாலாஜியுடன் உடன்படமுடியாமல் போகலாம். ஆனால் மிக நேர்மையான் அரசியல் தலைவர்  என ஜின்னா தெரிவித்தார். My collegues and I greatly regret to learn of Lajpat Rai's death which means the removal of an ardent social worker as well as of a prominent political leader  என ஜான் சைமைன் அசோசியேட்டட் பிரஸ் பேட்டியில் கூறினார்.
லண்டன் காக்ச்டன் கூடத்தில் நவம்பர் 25 1928 அன்று இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கர்னல் வெட்ஜ்வுட், சக்லத்வாலா பேசினர். பிரிட்டிஷாரின் மோசமான இந்திய கொள்கையை லண்டன் மக்கள் அறியவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. லாலாஜி நீடுழி வாழ்க என்கிற கட்டுரையை யங் இந்தியாவில் காந்தி எழுதினார். மாபெரும் மனிதர்கள் எப்படி வாழ்ந்து மறைவார்கள் என்பதற்கு லாலாஜி வாழ்வு எடுத்துக்காட்டு என  நேதாஜி சுபாஷ் எழுதினார்.

இந்நிகழ்வு பகத்சிங்கை பாதித்தது. அவர் சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை சுட்டு வீழ்த்த காரணமானது சீனியர் எஸ் பி ஆன ஜே ஏ ஸ்காட்டைத்தான் பகத்சிங் தோழர்கள் பழிதீர்த்திட விரும்பினர். தவறுதலாக பயிற்சி ஏ எஸ் பி ஆக வந்திருந்த 23 வயதே ஆன சாண்டர்ஸை சுட்டுக்கொன்றனர்.

No comments:

Post a Comment