VI
The Cambridge
Companion to Hegel and Nineteenth-Century Philosophy என்ற புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் என்பதை Alexander
Fangmann எழுதினார். அதில் அவர் ஹெகல் சிந்தனை சாரமாக குறிப்பிடுவதை
நாம் காணமுடியும்.
ஹெகலிய கருத்துக்களை ஏனைய சிந்தனையாளர்கள் (குறிப்பாக மார்க்ஸ்) உள்வாங்கியதை ஆராயாமல் ஹெகலை ஒருவர் புரிந்து கொள்வதென்பது அர்த்தமற்றதும், பின்னோக்கிய வீழ்ச்சியுமே ஆகும். ஹெகலுடைய கருத்துக்கள் வெறுமனே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மேதையின் கைவண்ணத்தில் வந்தவை அல்ல; அவை உள்வாங்கப்பட்டவிதம் மற்றும் அவற்றின் அபிவிருத்தி ஆகியவற்றால் மட்டும் தான் அவற்றின் உண்மையான முக்கியத்துவத்தையும், அர்த்தத்தையும் அளவிட முடியும். மார்க்ஸூம், ஏங்கல்ஸூம் ஹெகலிய முறையைக் குறித்து மிக பிரகாசமான விமர்சனங்களை மட்டும் அளிக்கவில்லை. ஹெகலால் செய்யப்பட்ட தத்துவார்த்த அபிவிருத்திகளைப் பாராட்டிய மற்றும் அவற்றை ஒரு விஞ்ஞான சடவாத அடித்தளத்தில் கொண்டு போய் நிறுத்திய முதல் சிந்தனையாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.
உண்மையில் சிந்திப்பதற்கு ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்று சிந்தனை எடுத்துக் கொள்கிறது. ஆனால் தர்க்கம் முழு ஆழமுடையதாக இருப்பதற்காக, அதை ஆராய்வதற்காக, இந்த ஏதோவொன்று என்பது எந்தவிதமான பண்புநலனிலும் இருக்கலாம் என்பதை ஏற்க முடியாது. இதுவரையில் அது இருக்கும் தன்மையிலிருந்து தான் அதை எடுத்தாள முடியும்..
இவ்வித ஆராய்ச்சியில் ’இருப்பின்’ இந்த தொடக்க வகைப்பாடு, அதன் மிகவும் மறைபொருளாக உள்ள தன்மையிலும் மற்றும் வரையறுக்க முடியாததன்மையிலும், “அது நம் கண் முன்னாலேயே ஒன்றுமில்லாததற்குள் (nothing) மறைந்துவிடுகிறது.” எந்தவித வேறுபட்ட பண்புநலனையும் கொண்டிருக்காமல், சுத்தமான இருப்பின் சிந்தனை முற்றிலும் வெறுமையாக இருக்கிறது என்பதுடன், அது நடைமுறையில் ஒன்றுமில்லாத சிந்தனைக்குச் சமமாக இருக்கிறது. ஆனால் இந்த ஒன்றுமில்லாத தன்மையையும் ஓரளவிற்கு உள்ளவாறே ஏதோவொன்றாக மட்டுமே இருக்க முடியும். ஆகவே ஒன்றுமில்லாத தன்மை இருப்பிற்குள் தான் மீண்டும் வந்து விழுகிறது. ஓர் ஒன்றுமில்லாத தன்மையே சிந்தனையாக இருக்க முடியும் என்பதால், அது ஒன்றுமில்லாத தன்மையாக இருக்க முடியாது, மாறாக அது இருப்பாக இருக்கிறது. இத்தகைய தூய்மையின் வகைப்பாடுகள் ஒவ்வொன்றும் "தர்க்கரீதியாக ஸ்திரமின்மைக்குத் திரும்புகின்றன என்பதுடன் அதன் எதிர்தரப்பிற்குள் சென்று அதுவே காணாமல் போகின்றன... ஒவ்வொன்றும் ஒன்றுமில்லாததாக இருப்பதையும், ஆனால் அதன் சொந்த காணாமல் போகும் தன்மையின் நிகழ்முறையையும் எடுத்துக்காட்டுகின்றன.” உண்மையில், அவையெல்லாம் என்னவாக இருக்கின்றன என்றால் "மாறிக்கொண்டே இருப்பதாக" இருக்கின்றன என ஹெகலிய சிந்தனை பயணிக்கிறது.
“இயங்கியல் என்பது இவ்வாறு ஹெகலினால் உருவாக்கப்பட்ட ஒரு முறையோ அல்லது அது வகைப்பாடுகளின்மீது வெளியிருந்து பெறப்பட்டதோ அல்ல, மாறாக அது இந்த வகைப்பாடுகளுக்கே சொந்தமானதாகும் (மேலும் அது இருப்பின் விஷயங்களைப் தொடர்புபடுத்திக்கொள்கிறது). "அதனை அதற்குள்ளேயே கொண்டிருக்கும் இயங்கியல் உள்ளடக்கத்தின் உட்தன்மையாக இருக்கிறது."
Andy Blunden ஹெகல் குறித்து மெல்போர்ன் சொற்பொழிவுகள் ஆற்றினார். நெப்போலியன் போன்பார்ட் ஹெகல் பிறந்த ஆண்டில்தான் பிறந்தார். 1821ல் மறைந்தார். அவரை குதிரையின் மீது அமர்ந்திருக்கும் உலக ஆன்மா என்பார் ஹெகல். பிரிட்டிஷ் சார்ட்டிஸ்ட் இயக்கம் ஹெகலின் மறைவிற்கு 1830க்கு பின்னர்தான் வலுப்பெற்றது. ஹெகலுக்கு பூர்ஷ்வா முதலாளித்துவமுறை கொணர்ந்த துயரங்கள் தெரிந்தது. ஆனால் அதை எதிர்த்த ஒடுக்கப்பட்வர்களின் குரலாக சோசலிசம் என பேசப்பட்டதை அவர் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.
ஜெர்மனியில் மாற்றம் - எழுச்சி என்றால் அது துப்பாக்கியிலிருந்து என்பதைவிட தத்துவபுரட்சி மூலம் என ஹெகல் கருதினார் என்கிறார் ஆண்டிபிளண்டன். 300க்கும் மேற்பட்ட சிறுதுண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த ஜெர்மனியின் பகுதிகள் 1815ல் ரோமன் சாம்ராஜ்ய முடிவில் 38 பகுதிகளாக ஜெர்மன் பெடரேஷன் ஆனது. இது ஹெகலுக்கு வசதியாகவும் ஆனது. அவருக்கு டார்வினை தெரிந்திருக்க முடியாது. ஹெகல் மறைவின்போது டார்வின் 20வயது இளைஞர். Even
if the earth was once in a state where it had no living things but only the chemical process, and so
on, yet the moment the lightning of life strikes into matter, at once there is
present a determinate, complete creature, as Minerva fully armed springs forth
from the head of Jupiter... Man has not developed himself out of the animal,
nor the animal out of the plant, each is ata single stroke what it is" என எழுதினார் ஹெகல்
தனிநபர் சுதந்திரம், தாராளவாத சிந்தனைகளுடன் அவர் நிற்கவில்லை. கம்யூனிட்டி வலிமை என பேசியவர். அவருக்கு அரசு என்பது வர்க்க ஆட்சி என்கிற கருத்து இல்லை. மாற்றம் ஏற்படுத்துவதில் தனிநபருக்கு பங்கு இருப்பதை அவர் ஏற்றிருந்தர். System of Ethical Life என்கிற அவரின் துவக்க 1802-3 எழுத்துக்களில் சாதாரண மக்கள்தான் தங்களை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள் -
சமுகத்தை கட்டமைக்கிறார்கள் என்கிற கருத்துக்கள் காணப்பட்டது - பிற்காலங்களில் இல்லை எனவும் ஆண்டி தெரிவிக்கிறார். 1805-06 Philosophy of spirit ஆன்மா குறித்து
பேசத்துவங்கிவிட்டார். மனிதர்களின் நடவடிக்கைகளில் ஆன்மா தொழிற்பட்டு விதிமுடித்து
அடுத்தவர்களிடம் நகர்ந்து என பேசினார்.
Spirit is the nature of human beings en masse என்றார் ஹெகல்.
அவருக்கு all objects
of material culture- language, factories, crops, basic needs- are thought
objects. objective
idealist என அவரை பார்க்கவேண்டியுள்ளது. நாம் பொருள்வகைப்பட்ட உலகில் அல்ல, சிந்தனை பொருளில் சாவி சாவி என அறியப்படுவது அதற்கு பூட்டு இருப்பதால் என்கிற வகையில் வாழ்கிறோம் என்கிற கருத்தில் அவர் இருந்தார். காண்ட் 1724ல் பிறந்தவர். அவர் மறையும்போது நல்ல செல்வாக்கில் இருந்தவர். ஹெகல் காண்டியனாகத்தான் இளம் வயதில் இருந்தார். காண்ட் இளைஞராக இருந்தபோது டேவிட் ஹ்யூம் செல்வாக்கும் பெருமளவு இருந்தது By this I or He or It who or which
thinks, nothing more is represented than a transcental subject of thought+ X,
which is cognised only by means of thoughts that are its predicates என்றார்
காண்ட்..
மாறா தன்னிலை ஒன்றை அவர் உருவாக்கினார். ஹெகல் இந்த தன்னிலையை கலாச்சாரம், வரலாற்றின் பகுதியாக விளைபொருளாக, அதற்கு வெளியே நிறுத்தாமல் கொணர்ந்தார். Hegel
replaced Kant's transcendental individual subject with cultural- historical
subject என விலக்குகிறார் ஆண்டி.
மக்கள் தாவரங்களுடனும், மிருகங்களுடனும், எந்திரங்களுடனும் தனது பணியை எத்ர்கொள்கிறான். வார்த்தைகளும், மொழியும் கட்டமைக்கிறான். இவை சர்வாம்சமானவையாக இரண்டாவது இயற்கையாகிறது என உழைப்பை
சர்வாம்சதன்மை கொண்டு கலாச்சார கட்டுமானமாக ஹெகல் விளக்குகிறார். Systems
of Ethical Life ல்
Concept- Intution குறித்து பேசுகிறார். அவை ஒன்றுக்குள் ஒன்று உள்வாங்கிக்கொள்தலை சொல்கிறார். Without a gap between needs
and their satisfaction there is no labour, activity perhaps but not labour என ஆண்டி தன் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார். தனிநபரின் வளர்ச்சி சமுகத்தின் கலாச்சாரத்தின் வளர்ச்சியுடன் பின்னப்பட்டிருக்கிறது. அது இல்லாமல் தனிநபர் வளர்ச்சியில்லை என்கிறார் ஹெகல்.
காண்ட்டைவிட கதே இளையவர் என்றாலும் கதேவிடம்தான் ஹெகலுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. ஆனால் கதேவிற்கு ஹெகல் என்ன பேசுகிறார் என புரியவில்லை என்கிற கருத்து இருந்தது. ஹெகலுக்கு எடுத்து விளக்குவதில் உள்ள சிக்கல் என கதே கருதினார் என்பதை ஆண்டி தன் சொற்பொழிவில் கொணர்கிறார். ஹெகலுக்குThe purpose of science is to
discover that which is lawful, intelligble in
its object.. The object
changes because it is constituted by the subject, and vice versa.
ஓவியர்கள் வரையக்கூடியவர்களாகவும், சிற்பிகள் வடிக்கக்கூடியவனாகவும்
நான் இருக்கிறேன் என பெருமிதம் பொங்கிட ஹெகல் தனது சகோதரிக்கு 1831ல் எழுதினார். நவீனத்துவத்தை ஆய்படுபொருளாக்கிய முதல் தத்துவ அறிஞர் ஹெகல். நவீன தத்துவ ஆய்வாளர்கள் எந்த எந்த வழிகளை கண்டு நுழைய முயன்றாலும் அவை முடிந்த சாலைகளாக அதே நேரத்தில் ஹெகல் அங்கு சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பதை காண்பர் என பிரஞ்சு அறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். ஹெகல் மறக்கப்பட்டாலும் மார்க்சியத்திற்குள் வெளிச்சமாக இருக்கிறார்.
Ref:
- Hegel A biograophy Terry
Pinkard
- History of Philosophy: Eastern and Western-Edited by sarvepalli
RadhaKrishnan
- From Hegel to Marx- Sydney Hook
- Hegel Lectures Andy Blunden
- Alexander Fangmann ‘s Essay
- Marx’s Relation to
Hegel Istavan Meszaros
- மனித சமுக சாரம்
ஜார்ஜ் தாம்சன்
- வரலாறுபற்றிய ஒருமைவாதம்- பிளக்கானாவ்
- லுத்விக் பாயர்பாக்- ஜெர்மன் தத்துவ ஞான முடிவு எங்கெல்ஸ்
- மார்க்ஸ் பிறந்தார் ஹென்றி வோல்காவ்
Comments
Post a Comment