https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 29, 2017

ஆச்சார்யா கிருபளானி 4


IV
வர்க்க சங்கார்ஷ் (varga sangarsh) என்கிற வர்க்கப்போராட்டம் பற்றி பிரஜா சோசலிஸ்ட் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்க கிருபளானி பிரசுரம் அளவிற்கான தனி கட்டுரை ஒன்றை  எழுதினார். மார்க்சிய முழக்கங்கள் குறித்து அதில் அவர் விவாதித்தார். மார்க்சிய தத்துவத்தை சுருக்கமாக  அவர் 9  அம்சங்களில் எடுத்து சொல்கிறார்..
1. சமுகவியலும் வரலாறும் பிற விஞ்ஞானங்களைப்போலவே தவிர்க்கமுடியாத விதிகளை கொண்டவை
2.வரலாற்றிலும், சமுகத்திலும் அடிப்படை இயங்குவிதி பொருளாதாரம்
3.மனித வரலாறே பொருதிக்கொள்ளும் இருவேறு வர்க்கங்களின் போராட்டமே. தற்போது முதலாளித்துவ- தொழிலாளி வர்க்கப் போராட்ட கட்டம்
4. பல தொழில்மய நாடுகளில் இருதுருவ வளர்ச்சி வந்துவிட்டது. பிற நாடுகள் அதை நோக்கி போகின்றன.
5. திரளான தொழிலாளர்களின் மோசமடைந்துவரும் வாழ்க்கை நெருக்கடிகள் வர்க்கப்போராட்டம் நோக்கி நகர்த்துகின்றன.
6. திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாட்டாளிகளுக்கு சாதகமாக இப்போராட்டம் முடியவேண்டும்.
7. இந்த வன்முறை போராட்ட நிகழ்ச்சிப்போக்கில் போராட்ட வெற்றியை உறுதிப்படுத்திட, புதிய வகைப்பட்ட வர்க்கமற்ற சமுகம் அமைந்திட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவசியம்
8. இவ்வழி அமைந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களே இல்லாத சமுகத்தை மட்டுமல்லாமல் அரசே உதிர்ந்துபோகும் நிலையை உருவாக்கும்
9. எந்த நாட்டில் புரட்சி வெற்றி பெற்றாலும் அதற்கு உலகளாவிய முக்கியத்துவம் விரிவு இருக்கிறது. உலகம் முழுதும் மூலதன நலன்கள் ஒன்றாகவே இருக்கிறது. அதேபோல் பாட்டாளிகளின் நலன்களும் உலக அளவில் ஒன்றாகவே இருக்கிறது.
இவற்றை கிருபளானி metaphysical speculations என்றே சொல்லமுடியும் என்றார். மார்க்சிற்கு முன்பே பல அறிஞர்கள் முதலாளித்துவ கொடுமைகளை பேசியுள்ளனர். மார்க்ஸ்  விவரங்களை எடுத்துக்கொண்ட ராயல் கமிஷன் பல கொடுமைகளை சித்தரித்தது. ஆனால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று சொல்லவில்லை. முதலாளித்துவ உற்பத்திமுறை தந்த பொதுவான அனுபவங்களை அது பேசியது.
விஞ்ஞானத்திற்கும் சமுக விஞ்ஞானத்திற்குமான வேறுபாடுகளை அவர் விளக்கினார்.The difference lies in the fact that while physical sciences deal with material objects, social sciences deal with the conduct of men and women, their groupings. The former are more or less static and non self regualtive, the latter are dynamic and self regulative. They have conscious, feelings, intelligence and will; material objects have none of these. In social investigation it is difficult for the investigator to be as neutral as in physical sciences. The investigator himself is generally an actor in the social drama. He cannot always divest himself from his personal like and dislikes. சமுக விஞ்ஞானம் மனிதகுலத்தின் காலம்காலமான நினவுகளுடன் ஊடாடவேண்டியுள்ளது. வழக்க வழக்கம், மூடநம்பிக்கைகள், நினவிற்கு அப்பாற்பட்ட தொடரும் நம்பிக்கைகள் என.. இவற்றை விஞ்ஞான முறைகளால் அளந்துவிடமுடியாது. பெளதீக, உயிரியல், அரசியல், பொருளாதாரம், மதம் என மனித வாழக்கையை ஒற்றை காரணத்திற்குள் சுருக்கிவிடமுடியாது. Material mysticism என்றாகிவிடும். அந்த இறுதி காரணத்தை தேடுவதாக அமைந்துவிடும் என்று தனது விளக்கமாக கிருபளானி எழுதினார்.
மார்க்சின் Labour Theory of Value குறித்து கிருபளானி விவாதிக்கிறார். பெளதிகம், கணிதம் போல் பொருளாதாரத்தை விஞ்ஞானமாக கார்ல் மார்க்ஸ் பார்த்ததாக சொல்கிறார். ரிகார்டோதான்  foot rule of value பற்றி சொல்கிறார். An article is measured by the hours of useful labour needed in its production- socially useful labour என ரிக்கார்டோ கூறினார். இது இறுதியில் சந்தை விலையில் தொழிலாளரை பெறுவது என்றானது. அது நிரந்தர விலைக்குரியதாகவோ, முற்று முழுதான ஒன்றாகவோ இருக்காது. சரக்குகளின் விலையைப்போல தொழிலாளர் விலையும் போட்டிக்குரியதாக இருக்கிறது என்றார் கிருபளானி
போட்டி சூழலில் ’பிழைப்பு ஊதியத்திற்கு’ தங்களுக்கு மலிவாக தொழிலாளர்கள் வேண்டும் என ’மதிப்பு விதியின்படி’ முதலாளித்துவம் நினைக்கிறது. ஆனால் மார்க்சின் கொள்கைப்படி தொழிலாளி தான் பெறும் பிழைப்பு ஊதியத்திற்கு மட்டும் உழைக்கவில்லை. உபரி உழைப்பை தருகிறார். அதை வைத்துதான் பிற செலவுகளை முதலாளி செய்யமுடிகிறது. அவரிடம் கருவிகள் இருப்பதால்- நிலம்- மெஷின் ஆலை உடைமையாக இருப்பதால் உபரியை அவரால் அபகரிக்கமுடிகிறது. பாட்டாளிகளின் உழைப்பினால்தான் முதலாளிகளுக்கு இலாபம் உபரி மதிப்பு கிடைக்கிறது. இந்த பொருளாதாரமுறை முரண்பாடுகளை உருவாக்கி வர்க்க மோதலுக்கு இட்டு செல்லும் என்றார் மார்க்ஸ். முதலாளிகள் தாங்களாக விட்டுத் தரமாட்டார்கள்-  புரட்சியை சட்டரீதியாக அமைதியான வழிகளில் கொணரமுடியாது என்பது மார்க்சின் கருத்தாக இருந்தது.

மார்க்சிடமிருந்து தான் மாறுபடுவதை கிருபளானி விளக்குகிறார். மூலதனம் வளர்ச்சிக்கு தேவை, தொழிலாளர் அனைத்தையும் சம்பளமாக பெற்று செல்லமுடியாது. சேமிப்பு என்பதை புதிய  உற்பத்திக்கு எடுத்து சென்றிடவேண்டும். முதலாளிகள் கூட அத்தனை உபரியையும் எடுத்து செல்லமுடியாது உற்பத்திக்கு முதலிட்டாக வேண்டும் என்றார் கிருபளானி. Economic observations and generalisations can only indicate certain trends inherent in a particular economic situation. These trends can be modified and overcome by human intelligence effort and ingenuity. The theory may even be modified by historical accidents of which there is no dearth in individual and collective life..It would, therefore, be unrealistic and even dangerous to make absoulte universal generalisations that would be true for all time and under all circumstances என்கிற எதிர்வினையை கிருபளானி தந்தார்.
கிருபளானியை பொறுத்தவரை தொழிற்சங்கத்தின் அடிப்படியான நோக்கம் பொருளாதரா பலன்களை மேம்படுத்துவது என்பதுதான் . நேரடி அரசியல் புரட்சிக்கானதல்ல தொழிற்சங்கம் என்பதில் அவர் உறுதியாக நின்றார்.. உறுப்பினர்களை திரட்டி தனது கூட்டுபேரவலிமையை தொழிற்சங்கம் நிறுவவேண்டும். அங்கு மூலதனமும் உழைப்பும் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் அமைதி இயக்கமாக இருக்கவேண்டும் என்றார்.. அவர் காந்திய பார்வையைத்தான் இங்கும் முன்வைக்கிறார். ஜனநாயக  நடைமுறையும் தொழிலாளர் இயக்கம் வளர உதவியுள்ளது. அவர்களின் பலமான வாக்குரிமை முக்கிய காரணியாகியுள்ளது என்றார் கிருபளானி. Trade Unionism and Democracy என்கிற பெரும் வளர்ச்சி மார்க்ஸ் காலத்திற்கு பின் நாம் காண்பது என்கிறார் கிருபளானி.
கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கங்கள் பொருளாதார மேம்பாடு என்பதுடன் சுருங்கினால் அதை விமர்சிக்கிறார்கள். பொருளாதாரவாதம்-புரட்சிகரமானதல்ல என கருதுகிறார்கள். வர்க்கப்போராட்டத்தை அது ஒத்தி வைப்பதாக கருதுகிறார்கள். தொழிற்சங்கம் என்பது முதலாளித்துவம் வீழ்த்தப்படுவத்ற்கான புரட்சிகர கருவியாக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பொருதிக்கொள்ளும் இரு படைப்பிரிவுகளாக மூலதனம், உழைப்பாளர்களை அவர்கள் பார்க்கிறார்கள். அங்கு ஒத்துழைப்பு, சமரசம், புரிந்து இசைதல் என்பது மோசமானது. இறுதி புரட்சிகர யுத்தத்திற்கு தொழிற்சங்கம் பயிற்சிக்கூடம் என்பது அவர்கள் பார்வை என கிருபளானி தங்கள் தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
மார்க்சியத்தின் பெய்ரால் நிறுவப்பட்டுள்ள போல்ஷ்விக் ஆட்சி நடைமுறையில் பல்வேறு சமரசங்களை செய்யவேண்டியிருந்தது. பூர்ஷ்வா நிறுவன முறைகள் பலவற்றை ஏற்றது. சமாதான சகவாழ்வு என பேசவேண்டியதானது. உலக புரட்சி என்பதை அது கைவிட்டதாகவே தெரிகிறது. கட்டளைகள் மூலம் புரட்சி சாத்தியமல்ல என்றும் பேசவேண்டியதாயிற்று. அதே நேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அது ஊக்கம் தராமல் இல்லை என சோவியத் அதன் நடைமுறைகள் குறித்த விமர்சன விளக்கத்தை கிருபளானி முன்வைத்தார்.
சத்யாகிரகி என்பவருக்கு தனிநபர், சமுக மேம்பாடு என்கிற அம்சத்தில் வெறுப்பு, வன்முறை வழியல்ல. அப்படியொன்றும் மேம்படுத்தவே முடியாத வர்க்கம், தனிநபர் என சத்யாகிரகி எந்த வர்க்கத்தையும் எவரையும் கருதவில்லை என்றார் கிருபளானி. If the individual has a soul and conscience the group must have it too. A society cannot be said to be civilised unless group conduct is civilised என்கிற காந்திய பார்வையை அவர் முன்வைத்தார்.
அய்ரோப்பா நாடுகளின் முக்கிய சில புரட்சிகள் பற்றி கிருபளானி பேசினார். Classes in the Marxian sense were unknown before the Industrial Revoultion. The English, American and the French revoultions were basically political aimed to estabilish reign  of law. So far as economic relations were concerned they were more powerfully and directly affected by the Industrial revoultion than the political revoultions of 18th and 19th centuries. ருஷ்ய புரட்சி எப்படிப்பட்டது. ஜாரின் கொடுமை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியது. அங்கு முதலாளித்துவ வர்க்கம் நேரிடையாக வறுமைக்கும் துனபத்திற்கும் காரணமாகும் அளவு வலுவாகிடவில்லை. யுத்தக்களைப்பும் அதனால் தொடர்ந்த துன்பங்களும் மக்களை வாட்டின. ஜார் குடும்பம் படுகொலைக்கு உள்ளானது. ஆட்சிக்கு வந்த கெரன்ஸ்கி சர்க்கார் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானதல்ல. தாராளவாத ஜனநாயக ஆட்சி. டூமா மூலம் அரசியல் அமைப்பு சட்டம் கொணர முயற்சித்தது. மிக பலவீனமான அரசாக போர் நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் பாதிப்புகளை அகற்ற முடியாத அரசாக இருந்தது. அந்த அரசு போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் அரசியல் இராணுவகலகம் மூலம் அகற்றப்பட்டது. வர்க்கப்போராட்டம் என்பதன் மூலமல்ல என்றார் கிருபளானி.

லெனின் தலைமையில் பாட்டாளிகள் பெயரில் போல்ஷ்விக் கட்சியின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. ஸ்டாலின் லெனினைப்போலவே திறமையாக அதைத்தொடர்ந்தார். அவர்கள்  இராணுவக்கலை அறிந்தவர்கள். அங்கு சொல்லப்பட்ட சோசலிச ஆட்சி, கம்யூனிச ஆட்சி, மக்கள் ஜனநாயக ஆட்சி என்பதெல்லாம் வார்த்தைகள்தான். தனியார் முதலாளித்துவம் ஒடுக்கபட்டு அரசு முதலாளித்துவம் அங்கு நிறுவப்பட்டது. உண்மையில்  ஒருவகை ராணுவ ஆட்சிதான் அங்கு நடந்தது. ஸ்டாலின் மறைவிற்கு பின்னர் ஏக சர்வாதிகாரம் முடிவுற்று குழு சர்வாதிகாரம் ஏற்பட்டது என சோவியத்புரட்சி- அதிகாரம் பற்றிய தனது விமர்சன பார்வையை கிருபளானி முன்வைத்தார்.
ஜனநாயகம் மூலம் அரசாங்கம் என்கிற நம்பிக்கையை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினார். பரவலான மக்கள் கருத்தை உருவாக்கி ஜனநாயகம் மூலம் மாற்றப்படும் ’அரசாங்கத்தின் குணத்தை’ தீவிரமாக மாற்ற இயலும் என நம்பினர் கிருபளானி. வாக்கு மூலம் வருவதை நாம் புரட்சி என ஏற்பதில்லை. வாக்கு மூலம் நம்மால் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர மாற்றத்தை உருவாக்க முடிந்தால் அதுவும் புரட்சிதான் என்றார் கிருபளானி. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு அசெளகரியம் நேர்ந்தாலும் ’வகுப்புவாதம் - சாதியம் - வட்டாரவாதம்’ எதிர்த்து தொடர்ந்து போரிட்டு அவற்றின் தீவிரத்தை குறைத்தால்  மாற்றங்களை நாடு கண்டு உயரும் என நம்பினார் கிருபளானி.

சொத்து என்றால் என்ன என ஒரு கட்டுரையை அவர் எழுதியிருந்தார். All production  is social.The individual is only a link in the chain.Society which creates property can dispose of it in any way that it considers best for itself. Property, its production, exchange and distribution are all social. If we forget this we are likely to fall in the hands of reactionaries and pave the way for a bloody revolution.. கிருபளானியை பொறுத்தவரை புரட்சி என்பது அடிப்படியில் ஆன்ம இயக்கம் . அது சமுக சக்திகளால், பொருளாயத சக்திகளால் கொணரப்பட்டிருக்கலாம். அதன் சாரம் spiritual - it is the movement of human spirit inits wide comprehensive sweep affecting life's fundamental outlook and relations

No comments:

Post a Comment