Skip to main content

லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 4


IV
லாலாஜி மிகச்சிறந்த சொற்பொழிவாளராக இருந்தார். ஆயிரக்கணக்கில் மக்கள் அவர் உரை கேட்க கூடுவர். அவர் சாதாரண உழைக்கும் மக்கள் பக்கம் நின்றவர். வேத, இந்திய கலாச்சாரம் குறித்த் பெருமிதம் அவரிடம் இருந்தது. தேசிய கல்வி என்பதில் அவர் தனிக்கவனம் செலுத்தினார். மாஜினி, கரிபால்டி, சிவாஜி போன்றவர்களின் வீர வரலாறுகளை தனது 30ஆம் வயதிலேயே அவர் எழுதினார். காங்கிரஸ் இயக்கத்தில்  லால்-பால்-பால் கூட்டு மிதவாதிகளால் தீவிரமாக உணரப்பட்டது.
அவரும் பகத்சிங் உறவினர் அஜித் சிங்கும் விவசாயிகளை கிளர்ந்தெழ செய்தனர். லாலாஜி மே 9 1907ல் மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார். நவம்பரில்தான் விடுவிக்கப்பட்டார். அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதை பேசாமல் இல்லை. அதேநேரத்தில் பண்டிட் மதன்மோகன் மாளவியாவுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ், அர்ஜுன், தேஜ் பத்ரிக்கைகளை துவக்கினார். இந்துசங்காத்தான் அமைப்பை தீவிரப்படுத்தினார். முஸ்லீம்களை அடக்கி ஒடுக்குவதை இந்துக்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் அவர் எழுதிவந்தார்.
பம்பாயில் டிசம்பர் 5 1925ல் நடந்த இந்துக்கள் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். நவீன கால சூழலையும் உள்வாங்கி பண்டைய வர்ணாஸ்ரம தர்மம் என்கிற புரிதல் தேவை என அவர் பேசினார். தீண்டாமை ஒழித்தலும், சூத்திரர் முன்னேற்றமும் உடனடி கடமை என்றார். இந்து பெண்களின் கல்வியில் தனிக்கவனம் உடனடி அவசியம் என்றார்.  இந்து வகுப்பார் அனைவரும் ஒன்றே என்ற உணர்வை உண்டாக்கவேண்டும் என்பது மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது.
இந்தியாவை தாயகமாக கொண்ட எவரும் எம்மதத்தினராக இருந்தாலும், இனத்தினராக இருந்தாலும் சமமானவர்களே என்றார் அவர். ஸ்வதர்மா என்கிற பெயரில் தீண்டாமையை அனுசரித்துவிட்டு ஜனநாயகம் பேசுவது எப்படி சரியாகும் என்றார். இந்த கொடுமையை களையாமல் ஜனநாயக அரசாங்கம் இல்லை என்றார். கோயில் நுழைவு உரிமை உடன் அவர்களுக்கு தேவை என்றும்  பூணூல் அணிவித்து அவர்களை இந்து மதத்திற்குள் கொணரவேண்டும் என பேசினார். திருமண சட்டங்களில் மாற்றம் வேண்டும் - கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும் எனவும் லாலஜி பேசினார். Untouchability is the result of prejudice against certain kinds of labour. It may include certain elements of religious and social prejudice. We have to remove both. No prejudice of any kind can be permitted to vitiate our future democracy. சமுகத்திற்கு தேவையான எந்த உழைப்பையும் கேவலமாக கீழ்த்தரமாக எண்ணுதலை அனுமதிக்ககூடாது என்பது அவரது கண்ணோட்டமாக இருந்தது.
விடுதலைக்கான விருப்ப உறுதி என்கிற அவரின் பேச்சில் இந்தியாவிற்கு என்னதான் தேவை என்பதை உணர்த்தினார்.
1.அன்பான,  கற்பிக்க விருப்பம் கொண்ட,  அதட்டாத பெற்றோர்
2.மாணவர்களுக்கு சிந்திக்கவும் கருத்துமாறுபடவும் அன்புடன் கற்பிக்கும் ஆசிரியர்
3. கட்டளை பிறப்பிக்காமல் வழிகாட்டும் தலைவர்கள்
4. சக மரியாதையுடனும் ஒத்துழைக்கும் மனப்பாங்குடனும், கருத்து வேறுபாடுகளுக்காக சண்டையிட்டுக்கொள்ளாத நண்பர்கள்
5.வறட்டுத்தனமாக சித்தாந்தங்களை போதிக்காத போதனையாளர்
6. மக்களை மந்தைபோல் நடத்தாத மந்திரிமார்கள்
7. அன்பும் ஒத்துழைப்பும் கொண்டு மிரட்டி ஒடுக்குதல் செய்யாத கணவன்மார்
8. தூள்துணுக்குகளுக்கு நிற்காமல் அடிப்படைகளுக்கு நிற்கும் தேசபக்தர்கள்
9. மக்களை தாங்களே ஆள்வதற்கு உத்வேகப்படுத்தும் ஆட்சியாளர்கள்
லாலாஜி 1914-19 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்தார். இந்திய விடுதலைக்கான பிரச்சாரங்களை மேற்கொண்டார். இக்காலத்தை அவர் புத்தகங்கள் எழுதுவதற்கு பயன்படுத்திக்கொண்டார். யங் இந்தியா, இந்திய அரசியலின் எதிர்காலம், இங்கிலாந்தின் கடன், தேசிய கல்வி போன்றவைகளை அவர் எழுதினார். அடிமை சங்கிலி சங்கிலிதான். எவ்வளவு நல்ல அரசாங்கம் என பிரிட்டன் சொன்னாலும் சுய அரசாங்கத்திற்கு அது இணையாக முடியாது என்றார். அவர் அமெரிக்காவில் சோசியல் டெமாக்ரசி குறித்து பேசத்துவங்கினார்.
1920ல் AITUCன் அகில இந்திய துவக்க மாநாட்டிற்கு அவர் தலைமைதாங்கி உரையாற்றினார். இந்தியாவில் அகில இந்திய அளவில் தொழிலாளர்க்கென முதல் மாநாடு என்பதை அவர் எடுத்தியம்பினார். திரட்டப்பட்ட மூலதனம் கடந்த 150 ஆண்டுகளாக உலகை ஆள்கிறது. பண்டைய நாகரீகங்களை அது அழித்துவிட்டது. மதத்தை அடிமைப்படுதிவிட்டது. அறிவியலுக்கு கூட சங்கிலி பிணைத்துவிட்டது. இராணுவவாதமும் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவ குழந்தைகள். அவை விஷமானவை.. நாம் அரசியல்ரீதியாக கையாலாகமல் இருக்கிறோம், பொருளாதாரரீதியாக பலவீனமாக இருக்கிறோம். நம்மை ஆள்பவர்கள் நம்மை கூலிகளாக்கிவிட்டனர். அய்ரோப்பிய தொழிலாளர்களை ஒப்பிடுகையில் இந்தியாவில் சீனாவில் அவர்களுக்கு மலிவான கூலிகள் கிடைக்கிறோம். இதனால் அய்ரோப்பிய தொழிலாளர்களும் ஆபத்தில் உள்ளனர். இந்திய தொழிலாளர்கள் கைகோர்ப்பது மட்டுமல்ல, சர்வதேச சகோதரத்துவமும் தேவை என்றார் லாலாஜி.
இந்தியாவில் தொழிற்சங்கம் குழந்தைபருவத்தில்தான் இருக்கிறது. வட்டார வேறுபாடுகளுக்குள் சிக்கிவிடாமல் ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டும். பிரிட்டிஷார் பணத்தை வாரி இறைத்து விரயம் செய்கிறார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு மட்டும்தான் ரூ 35000 ஊதியம். இங்கு 12பேர் அதை பெறுகிறார்கள். சிலர் கூடுதலாகவும் வாங்குகிறார்கள். அமெரிக்காவில் அமைச்சர் 12000 டாலர்தான் பெறுகிறார். இங்கு அமைச்சர் ரூ 80000 பெறுகிறார். ஏன் இந்த தாராளம் என வினவினார் லாலாஜி. இங்கு போஸ்ட்மேனுக்கு, ரயில்வே தொழிலாளிக்கு என்ன சம்பளம் கொடுக்கின்றனர், குடும்பம் நடத்த முடியுமா என வினவினார்.
அய்ரோப்பிய தொழில்வளர்ச்சி முதலாளித்துவம் குறித்து விமர்சன பார்வை அவருக்கு இருந்தது. சோசலிச எழுத்தாளர் பலர் அதன் சித்திரத்தை நமக்கு வழங்கியுள்ளனர். கார்ல்மார்க்ஸ் அதன் கோர முகத்தை வெளிக்கொணரும்வேலையை துவங்கி வைத்தார் என லாலாஜி எழுதினார். Organsing labour means placing them in a position to meet organised Capital on such terms athat the latter may not be able to take advantage of their ignorance and their disorganised state.. It is now a question of Organsisation and Education  என்று எழுதினார் லாலாஜி.
லாலாஜி வாழ்க்கை திறந்த புத்தகம். அவர் வெளிப்படையாக பேசுவதால் பல நண்பர்கள் கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் அவரை மாற்றமுடியவில்லை என்றார் மகாத்மா காந்தி லாலாஜியுடன் ஒருவர் கருத்துமாறுபட வேண்டியிருக்கும். ஆனால் அவரின் சமுக சேவையும் தேச அர்ப்பணிப்பும் அபாரமானவை என்றார் மோதிலால். தேசபக்தன் என்கிற வகையில் மட்டுமல்லாமல் தனிமனிதன் என்கிற வகையிலும் அவர் மிக சிறந்தவர். அவருடன் பலமுறை பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. எதற்கும் அஞ்சாத மனிதர் அவர் என்றார் பிர்லா...


Ref:
Lajpat Rai Socio political ideology S R bakshi
Lajpat Rai Writings and Speeches  V C Joshi


Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு