https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, June 20, 2017

ஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3

III

YearBook என்கிறமுறையில் ஆக்கங்களை கொணர்வதற்கு எட்வர்ட் கான்ஸ், ஹெகல் முயற்சித்தனர். Gans ’Le Globe’ என்கிற பிரஞ்சு தாராளவாத பத்ரிக்கை பாணியில் கொணரவேண்டும் என்பதை வற்புறுத்திவந்தார். இம்முயற்சியில் அவர்கள் போதுமான அளவு சந்தா சேராமையால் வெற்றி பெறமுடியவில்லை என்கிறார் டெர்ரி.
1827ல் அவர் டாக்டர்களின் அறிவுரைப்படி ஆரோக்கியவாசஸ்தலம் செல்லவேண்டிவந்தது. பெர்லின் விட்டு வெளியேறிய சூழலில் பாரிஸ் வரலாமா என நண்பர்களுக்கு அவர் கடிதம் எழுதினார். மார்க்சின் ஊரான டிரியர் நகருக்கு அப்பகுதியில் புகழ்வாய்ந்த ஒயின் அருந்துவதற்காகவே ஹெகல் சென்றார். 1827 செப்டம்பரில் அவர் பாரிஸ் வருகிறார். பெர்லினைவிட பாரிஸ்  அருமையாக இருக்கிறது என அவர் வியந்தார். அங்கு தலைசிறந்த ஷேக்ஸ்பியர் நாடக குழுவினரை சந்தித்தார். புரட்சியின் முழு ஒழுங்கீனத்தையும் தன்னால் காணமுடிகிறது என மேரிக்கு எழுதினார். பிரஞ்சு அறிவியல் கழகம் அவரை வரவேற்று உபசரித்தது. அங்கு நிரம்பியிருந்த அறிவுஜீவிகளுடன் உரையாடினார் ஹெகல். பாரிசிலிருந்து திரும்புகையில் கதேவை சந்தித்து உரையாடிவிட்டு வருகிறார். ஹெகல் மீது கதேவிற்கு மாரியாதை கூடியிருந்ததாக டெர்ரி பதிவு சொல்கிறது.
இயற்கையின் தத்துவம் குறித்து பல சொற்பொழிவுகளை பெர்லினில் ஹெகல் செய்துவந்தார். நியுட்டன், கெப்ளர் என எந்திரவியல் குறித்து துவங்கினாலும் ஆர்கானிசம் என்பதில் அவர் அழுந்த நின்றார். Matter just our abstract, ideal conception of what it means to be at a spatio- temporal place and these are rational, a priori conceptions whose justification lies in their being necessary components of a rational view of nature as a whole  என்றார். Light - Physics பற்றி அவர் விளக்கம் அளிக்கிறார். Meterorological process which makes up the totality of the earth as relatively self contained, being driven by its own nonconscious striving to maintain the conditions under which life is possible என அவர் இயற்கையின் தத்துவத்தில் சொல்கிறார். The Organism senses that it needs things- it is not merely a stimulated act by its environement, it takes it in and responds accordingly என விளக்குகிறார்.
Philosophy of Religion குறித்து அவர் பேசினார். அன்றாட வழிபாட்டுமுறைகளை கைகொண்டவர் அல்லர் ஹெகல். அவரது துணவியார் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஹெகல் மறைவிற்கு பின்னர் மத நம்பிக்கை அவருக்கு கூடுதலாயிற்று என்கிறார் டெர்ரி. கடவுள் உலகை படைத்தார்- அனைத்துயும் வழிநடத்துகிறார் என்பது போல் அல்லாமல் உலக இருப்பில் கடவுள் இருக்கிறார், அதன் உள்ளார்ந்த விளவுகளால் வடிவங்களாக உலகம் என்கிற வகையில் என அவர் விளக்குகிறார். Blessed are the pure in heart, for they shall see God- Mattthew 5:8 ஹெகலுக்கு பிடித்த பைபிள் வாசகம் என மேரி சொல்கிறார். Religion is for everyone. It is not philosophy, which is not for everyone. Religion is the manner or mode by which all human beings become conscious of truth for themselves என பேசிவந்தார் ஹெகல். God is to be found in the principle of world itself என்பதை அவர் அழுத்தமான கருத்தாக நாம் கொள்ளலாம்.
1827ல் கீழைத்தேய மதங்கள் குறித்தும் ஹெகல் சொற்பொழிவுகள் தந்தார். தலாய்லாமா பற்றி பேசுகிறார். Hen Kai Pan- 'one' that is 'all' என்பதை அவை வெளிக்காட்டுவதாக ஹெகல் கூறினார். அமைதி, பணிவு, நிதானம் போதிக்கின்றன என்றார்.  Immortality என்பதை அவர் ஏற்கவில்லை. அதற்கு விளக்கமாக The fact of the matter is that humanity is immortal only thro cognitive knowledge, for only the activity of thinking is its soul pure and free rather than mortal and animallike என எழுதினார். யேசுவின் மரணம் என்பதில் கடவுள் மரணம் என்கிற பெரும் பிரச்சனையை நாம் எதிர்கொண்டோம். ஆனால் Resurrection புத்துயிர்ர்பு எனபதன் மூலம் மீள்கிறோம் என்றார். கலை, நவீன கலை குறித்தும் அவர் பேசினார். முன்பிருந்தமைக்கும் நவீன உலகத்திற்குமான முறிவின் வெளிப்பாடு கலை என்றார். Wilhelm Von Humbolt என்கிற புகழ்வாய்ந்த சிந்தனையாளர் இந்திய பகவத்கீதையை பற்றி எழுதினார். இதற்கு 1827ல் ஹெகல் தனது விமர்சன ஆய்வை எழுதியதாக பிங்கார்ட் குறிப்பிடுகிறார்
ஷெல்லிங், அலெக்சாண்டர் ஹம்போல்ட் போன்றவர்கள் ஹெகலை கடுமையாக தாக்கி சொற்பொழிவாற்றினர். Prof Krug  என்பார் Game of Ideas என ஹெகல் சிந்தனைகள்மீது தாக்குதல் கொடுத்தார். பல பக்கங்கள் காலி பக்கங்களே என்பது போன்ற தாக்குதல்கூட அவர்மீது எழுந்தது. 1829ல் ஹெகல் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். முகம் வெளுத்து இரத்தசோகை ஏற்பட்டது. 1830ல் பெர்லின் பல்கலைகழகத்தின் முழு தலைமை பொறுப்பும் ஹெகலிடம் வந்தது. ஒருவருகொருவர் கடுமையாக மோதிக்கொண்டிருந்த ஷெல்லிங் உடன் 1830களில் மீண்டும் அவரால் நட்பு பாராட்ட முடிந்தது. இருவரும் கருத்துவேறுபாடு வரவழைக்கும் தத்துவம் குறித்து பேசுவதில்லை. ஷெல்லிங்கும் ஹெகல் மகனுடன் ஹெகல் மறைவிற்கு பின்னர் நன்றாக பழகினார். ஹெகல் மகன் இம்மானுவேல் ஷெல்லிங்கின் விரிவுரைகளுக்கு செல்லத்துவங்கினார். ஹெகல் மகன் மூலம் பழைய ஹெகல் உறவுகளை தான் காணுவதாக ஷெல்லிங் குறிப்பிடலானர்.
1830ல் அரசவைக்கு ஹெகல் அழைக்கப்பட்டு கெளரவம் செய்யப்பட்டார். இளவரசர், இளவரசியுடன் பேராசிரியருக்கு விருந்து என்பது நடைபெற்றது. 1830 அவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் அவர் தனது பெர்லின் பல்கலை பொறுப்பை அடுத்தவருக்கு மாற்றிக் கொடுத்தார்.  ஜெர்மனியில் வேறு எங்குமில்லாத அளவு மாணவர்கள் 1909பேர் அங்கு படித்ததை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் சொற்பொழிவுகளை கேட்போர் 2200யை தாண்டியது என்றார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தரமுடியும் என்றால் நாம் மேலும் உயர்வோம் என அவர் தனது விடைபெறும் சொற்பொழிவில் குறிப்பிட்டார்..
On the English Reform Bill என்பதன் மீதான தன் விமர்சன கட்டுரையை அவர் ஏப்ரல் 1831ல் எழுதினார். வரிக்கொடுமை, ஊழல்கள், விவசாயம் பாதிப்பு போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார். பல தேவாலயங்களின் தனியார் சொத்தும் மத ஊழல் மலிய காரணமாயிற்று. தனியார் சொத்துரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் சக்திமிக்க வர்க்கம் செயல்படுகிறது என்றார் ஹெகல். அரசியலை பெரும் வியாபாரமாக அவர்கள் ஆக்கிவிட்டனர் என்றும் எழுதினார். The right to command, the difference arising from this right, the general difference between commanding and obeying, is contrary to equality என குறிப்பிட்டார்.
1830ல் ரஷ்யாவில் துவங்கிய காலரா நோய் அய்ரோப்பா முழுமையும் தாக்கத்துவங்கியது. 1831ல் பிரஷ்யா அரசு முன் எச்சரிக்கையாக பள்ளிகள், இறைச்சி கூடங்களை மூடியது. வீடுகளுக்கு வருவோர் கட்டுப்படுத்தப்பட்டனர். இறந்தவர்களை கால்சியம் குளோரைடில் முக்கித்தான் எடுத்து செல்லவேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 1831ஆகஸ்டில் காலரா பெர்லினுக்கு பரவியது. அங்கு சாக்கடை கழிவுநீர் வசதிகள் மேம்படாமல் தெருவில் ஓடும் நிலைதான் இருந்தது. இதனால் தொற்றுக்கிருமிகள் வேகமாக பரவியதாக டெர்ரி பதிவு சொல்கிறது.
1831ல் ஹெகல் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.  வாந்தி தொல்லை கூடியது. தியட்டர் பொழுதுபோக்குகள் என எதிலும் அவரால் ஈடுபட முடியவில்லை. பெரும்பாலும் தோட்டத்திலேயே இருந்தார். சில நேரம் தங்கள் குடும்பத்தாருடன் செஸ் விளையாடினார். சில மாணவர்கள் மட்டும் அவரை பார்த்து சென்றனர். அருகாமையில் குடியிருந்தோர் பலர் காலராவிற்கு பயந்து வெளியேறினர்.
1831 நவம்பர் ஆரம்பத்தில் அவர் சொற்பொழிவுகள் தந்தார். அவரின் உடல் பலவீனம் உணரப்பட்டது.  நவம்பர் 13 அன்று அவருக்கு டாக்டர் சிகிட்சை அளித்தனர். அவர் இரத்த வாந்தி எடுத்தார். நவம்பர் 14 அன்று மதியம் அவரால் மூச்சுவிட முடியவில்லை. அன்று மாலை டாக்டர்கள் வந்து அவர் காலரா தாக்கி மறைந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர்.
எட்வர்ட் கான்ஸ் ஹெகல் மறைவை நண்பர்களுக்கு அறிவித்தார். காலரா என தவறாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர் என்பதையும் டெர்ரி பதிவு செய்கிறார். நவம்பர் 16 1831 அன்று மாபெரும் ஊர்வலமாக அவரது உடல் பிச்டே போன்றவர்கள் வைக்கப்பட்ட  இடுகாட்டிற்கு எடுத்து செல்ல்ப்பட்டது. மாணவர்கள் திரளாக வந்திருந்தனர்.

Forster என்பார் இரங்கல் உரையில் He saved us from the bonds of madness and selfish egoism என குறிப்பிட்டார். ஹெகல் மறைவிற்கு பின்னர் ஒரே மாதத்தில் அவரது சகோதரி கிறிஸ்டியான நதியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். ஹெகல் நண்பர்கள் அவரது ஆக்கங்களை கொணர்வது என முடிவெடுத்தனர்.

 ஹெகல் மறைந்த பத்தாம் ஆண்டில் 1841 நவம்பர் 15ல் ஷெல்லிங் உரை கேட்க பகுனின், எங்கெல்ஸ், சோரன் கீர்க்கேகார்ட் அமர்ந்திருந்தனர். இவர்கள் பின்னாட்களில் அனார்க்கிசம், மார்க்சியம், எக்சிஸ்டென்சியலிசத்தின் அடையாளமாகி போனார்கள்.

No comments:

Post a Comment