https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 29, 2017

ஆச்சார்யா கிருபளானி 5


V

எளிமை, சிக்கனம் என்பது அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய அவசிய குணங்களாக கிருபளானி தொடர்ந்து பேசிவந்தார். கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது இக்குணங்களை கடைப்ப்டிக்கவேண்டியது அவசியம் என கருதினார். நமது குடியரசு தலைவரும், கவர்னர்களும் எளிய ஆடைகள் அணிவதுதான் உகந்தது - வெளிப்பகட்டு அவசியமில்லை என்றார். Dignity is the result more of inner culture என்றார் கிருபளானி. காந்தியிடம் நாம் கற்றுக்கொண்ட எளிமையை  விடலாகாது என்பது அவரது வாதமாக இருந்தது.
நட்பு மேற்கொள்வது என்பதற்கு ராஜாஜி தந்த விளக்கத்தை கிருபளானி மேற்கோளாக தந்தார். “ It is not for pleasure and laughter that we cultivate friendship, but even for hard and true criticism and this must be done promptly. தங்களை ஆள்பவர்கள் மீது நம்பிக்கை இருக்கும்வரைத்தான் தாங்களே முன்வந்து மக்கள் ஒத்துழைப்பை நல்குவர். சந்தேகம் வந்துவிட்டால், ஆள்பவர்கள் தங்கள் நம்பிக்கையை பொய்த்துவிட்டார்கள் என்பது வலுப்பெற்றால் அவர்களால் மனம் விரும்பிய ஒத்துழைப்பை தர இயலாமல் போகும் என்றார் கிருபளானி.

அதிகாரம் என்பதற்கான குறைகளை  அதன் எதிர்மறை குணங்களை காந்தி அறிந்தவர். ஆனால் அரசியல் என்பதிலிருந்து விலகவும் முடியாது என்பதால் தனது அரசியல் என்பதை அவர் வழிமுறையாக, விடுதலைக்கும், மனிதர்களின் சமதையான வாழ்க்கை முறைக்குமான  வழியாக கொண்டார். அவர் காலத்து அரசியல் என்பது தியாகமும் சித்திரவதைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. அதிலும் அவர் மிக கவனமாக உண்மை- அகிம்சை முறைகளை கைக்கொண்டார். இன்று எங்கு திரும்பினும் அரசாங்கம் நிற்கிறது. மக்களின் பிரச்சனையை காங்கிரஸ் தீர்த்தால் அது அதிகாரத்தில் நிலைக்கும். இல்லையெனில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்கள் என வந்து தீர்த்தால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பர். காந்தி மனித இயல்பின்மீது அவநம்பிக்கை கொண்டவராக இல்லை. அவர்கள் செய்திறன் மீது அவர் வரையறைகளை நிர்ணயிக்கவில்லை. அளப்பரியது என்கிற உளவியல் அவரிடம் செயல்பட்டது என்கிறார் கிருபளானி.
ஜனநாயகம் என்பதை பெரும்பானமை என்பதுடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. அதற்கு காரணகாரிய செயல் என்கிற மதிப்பை கிருபளானி கூட்டினார். Some of us conceive democarcy to be the will of the majority and this will needs no guidance. Is the will of the majority always well informed? Does the majority need no guidance from wise, well informed and united leadership என பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பதுகூட அறியாமையுடன் இருந்துவிடக்கூடாது. அதற்கு சிறந்த நேர்மையான வழிகாட்டல் தேவைப்படலாம் என்பதை அவர் வலியுறுத்தி வந்தார்.  பெரும்பான்மை விருப்பம் என்பதுடன் நிற்காமல் சிறந்த கருத்துக்களின் துணையுடன் பெரும்பான்மை என்பதை அவர் இணக்கப்படுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்திட விழைந்தார்.
இதற்கு உதாரணமாக இன்று பெரும் அரசியல் சர்ச்சையாக மாறி நிற்கும் பசுகொலை தடை என்பதைப்பற்றி அவர் பேசுகிறார். காந்தி இதை தவறான கோரிக்கை என விளக்கியதை கிருபளானி அதில் எடுத்து உரைத்தார். பசுகாப்பு என்பதை எதிர்மறையாக அணுகுகிறார்கள் என்ற கவலை காந்திக்கு இருந்தது என்கிறார் கிருபளானி. Democarcy is not only will of majority but with right reason என்கிற  நல்ல வரையறையை கிருபளானி தனது அனுபவத்திலிருந்து நாட்டிற்கு தந்தார்.
இந்து திருமண சட்டம், மொழிக்கொள்கை, மாணவர்களும் அரசியலும், அரசியல் கட்சிகள். நான் ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன், அரசியலில் மறைபொருள்வாதம், விமர்சன பயம், நாட்டுப்பிரிவினைக்கு பலியானவர்கள் போன்ற பல கட்டுரைகளை கிருபளானி எழுதினார். காந்தி குறித்த ஏராளமாக எழுதியவர் கிருபளானி
1951  KMP கட்சி துவங்கி பின்னர் பிரஜா சோசலிஸ்ட்களுடன் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் 1954ல் வெளியேறினார். நாடாளுமன்றத்தில் தனது ஆழமான உரைகளால் விவாதங்களை வளப்படுத்தினார். இந்திராவின் எம்ர்ஜென்சியின் போது அதனை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று போராடியதால் கைது செய்யப்பட்டார். ஜேபியின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். அவரது துணைவியார் சுசேதா கிருபாளனி இந்தியாவில் உத்தர பிரதேச முதல் பெண் முதலமைச்சராக1963ல் உயர்ந்தார். அவர் தன் அளவில் பெருமைக்குரிய வரலாற்று பின்னணி கொண்டிருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்ட நாயகிகளுள் சுசேதா ஒருவர்.   ஆகஸ்ட் 1947 விடுதலை பிரகடன நள்ளிரவில் நேருவின் உரையை உலகம் கேட்டதுபோல் அன்று வந்தேமாதரம், ஜாரே ஜகான்சே அச்சா, ஜனகனமன பாடல்களை சுசேதா பாடிட உலகம் கேட்டது.
ஆச்சார்யா கிருபளானி அவர்கள் தனது 93ஆம் வயதில் அகமாதாபதில் இயற்கை எய்தினார். தனது வாழ்க்கை அனுபவங்களை ’தனது காலம்’ என அவர் பதிவு செய்திருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுவேறுபாடுகளை மாபெரும் கொள்கை பூசல் அளவிற்கு உயர்த்தாமல் இருப்போம்தனிப்பட்ட தொடர்புகள் தேவை. எப்போதுமே மனிதர்கள் கொள்கைகளைவிட சிறந்தவர்கள், தேவைப்படுபவர்கள். சமுக உறவுகளில் நம் இவற்றை புரிந்து கொள்ளமுடியும் என்றார் அவர். அருகில் அமர்ந்து விவாதிப்பவர்களுடன் அவர் நகைச்சுவை ததும்ப பேசுவார். தன்னை கேலி செய்துகொள்வார். தன் சிறுமண்டையை மறைக்கத்தான் நீண்ட முடி வளர்ந்துள்ளது என்பார். காந்திய சிந்தனைகள் குறித்து ஓயாமல் எழுதி வந்தவர் அவர்.
Ref:
Acharya Kripalani -    GS Bhargava
Kripalani and His Ideas   - J S Bright

J B Kripalanai- His vision and Ideas-     Verinder Grover

No comments:

Post a Comment